இஸ்ரோ எடுத்த பாடம்.. இன்று ஐஎஸ்எஸ்-ல் இணையும் 2 நாசா வீரர்கள்.. 19 மணி நேர விண்வெளி பயணம்!
நியூயார்க்: இன்று விண்ணுக்கு ஏவப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டில் இருக்கும் 2 விண்வெளி வீரர்கள் நாளை சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இணைவார்கள். இவர்கள் இஸ்ரோவின் டெக்னீக் ஒன்றை பயன்படுத்தி சர்வதேச விண்வெளி மையத்தில் இணைவார்கள்.
Recommended Video
அமெரிக்காவின் மண்ணில் இருந்து நாசாவின் இரண்டு நாசா விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு செலுத்தப்பட்டு உள்ளனர். 9 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்க மண்ணில் இருந்து இப்படி சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இருந்து முதல் முதலாக விண்ணிற்கு மனிதர்களை அனுப்பிய தனியார் நிறுவனம் என்ற சிறப்பை பெற்றுள்ளது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம். அமெரிக்காவில் புளோரிடாவில் இருக்கும் Kennedy Space Center's Complex 39A இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பல்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டு உள்ளது.

இரண்டு வீரர்கள்
நாசாவை சேர்ந்த பாப் பென்கன் மற்றும் டக் ஹர்லி ஆகிய வீரர்கள் இதில் சென்று இருக்கிறார்கள். இப்போதுதான் மனிதர்களை ஸ்பேஸ் எக்ஸ் விண்ணுக்கு அனுப்பி உள்ளது. இதன் மூலம் அதன் நிறுவனர் எலோன் மஸ்க் புதிய உயரத்தை எட்டி இருக்கிறார். கடைசியாக அமெரிக்கா ஜூலை 8, 2011ல் நாசா மனிதர்களை தங்கள் மண்ணில் இருந்து விண்ணுக்கு அனுப்பியது. அதன்பின் இப்போதுதான் அமெரிக்க மண்ணில் இருந்து மனிதர்களை விண்ணுக்கு அனுப்புகிறது.

எப்படி நடந்தது
இன்று விண்ணுக்கு ஏவப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டில் இருக்கும் விண்வெளி வீரர்கள் நாளை சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இணைவார்கள். இவர்கள் இஸ்ரோவின் டெக்னீக் ஒன்றை பயன்படுத்தி சர்வதேச விண்வெளி மையத்தில் இணைவார்கள். அதென்ன இஸ்ரோ பாடம் என்று நீங்கள் கேட்கலாம். இஸ்ரோ மூலம் சந்திரயான் 2 நிலவை நோக்கி செலுத்தப்பட்ட போது சந்திரயான் 2 நேராக நிலவுக்கு செல்லவில்லை.

வேகம் அதிகரித்தது
மாறாக முதலில் பூமியை எதிர் கடிகார திசையில் சுற்றி வந்தது. பூமியை சந்திரயான் 2 சுற்றுவதன் மூலம் அதன் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. இதனால் நீள்வட்ட பாதையில் சுற்றி சுற்றி பூமியைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக சந்திரயான் 2 நகர்ந்து சென்றது. கொஞ்சம் கொஞ்சமாக சந்திரயான் 2ன் உயரம் அதிகரிக்கப்பட்டது. அதன்பின் குறிப்பிட்ட உயரம் சென்ற பின், சந்திரயான் 2ல் இருக்கும் எஞ்சின் இயக்கப்பட்டு, அது நிலவை நோக்கி இயக்கப்பட்டது.

செம விதிமுறை
அதேபோல் தற்போது இந்த ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டும் செயல்படுகிறது. இந்த சாதனை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபல்கான் ராக்கெட் மூலம் விண்ணில் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் இருக்கும் முதல் ஸ்டேஜ் ராக்கெட் 2.5 நிமிடம் விண்ணில் பறந்தது. இது ராக்கெட்டை விண்ணுக்கு கொண்டு சென்றது. அடுத்த ஸ்டேஜ் 2 மொத்தம் 6 நிமிடம் பறந்தது. இது ராக்கெட்டின் க்ரூ டிராகன் பகுதியை வட்டப்பாதையில் நிறுத்திவிட்டு கழன்று விட்டது.

எப்படி செல்லும் தெரியுமா
தற்போது இதில் மீதம் இருக்கும் க்ரூ டிராகன் (Crew Dragon) பகுதி ஸ்பேஸ் ஸ்டேசனை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக செல்கிறது. இதில்தான் இரண்டு நாசா வீரர்களும் இருக்கிறார்கள். இந்த க்ரூ டிராகன் (Crew Dragon) கழன்று கொண்ட பின் லேசாக மிதந்து கொண்டு இருக்கிறது. இது மொத்தம் 19 மணி நேரம் பூமியை சுற்றும்.

செம அறிவியல்
சந்திரயான் 2 சென்றது போலவே இதுவும் செல்லும். பூமியை சுற்றிக்கொண்டு இருக்கும் போதே கொஞ்சம் கொஞ்சமாக எஞ்சின் இயக்கப்பட்ட அதன் உயரம் அதிகரிக்கப்படும். சந்திராயன் 2 போலவே பூமியை விட்டு இது கொஞ்சம் கொஞ்சமாக அகன்று செல்லும். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக உயரம் அதிகரிக்கப்பட்டு, அதன்பின் ஸ்பேஸ் ஸ்டேஷன் நோக்க்கி க்ரூ டிராகன் (Crew Dragon) செல்லும்.

சந்திராயன் 2
இந்த பயணம் 19 மணி நேரம் இருக்கும். இப்படியே சென்று நாளை இரவு 8.30 மணிக்கு இந்திய நேரப்படி க்ரூ டிராகன் (Crew Dragon) ஸ்பேஸ் ஸ்டேஷன் உடன் இணையும். க்ரூ டிராகன் (Crew Dragon) னை இப்படி ஸ்பேஸ் ஸ்டேஷன் உடன் இணைக்க இஸ்ரோவின் டெக்னிக்கை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பயன்படுத்தி உள்ளது. இஸ்ரோ பயன்படுத்திய விதியை ஸ்பேஸ் எக்ஸ் பயன்படுத்தி உள்ளது .
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications