டைட்டன் நீர்மூழ்கிக்கு இதுதான் நடந்தது! டைட்டானிக் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் சொன்ன அதிர்ச்சி காரணம்!
நியூயார்க்: டைட்டன் நீர்மூழ்கி கடலுக்கு அடியில் வெடித்த நிலையில் டைட்டானிக் ஜேம்ஸ் கேமரூன் இந்த விபத்து பற்றி பேட்டி அளித்துள்ளார். இந்த விபத்திற்கான காரணத்தை அவர் கூறி உள்ளார்.
கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் சிதிலம் அடைந்த பாகங்களை பார்க்க பலருக்கும் ஆர்வம் உண்டு. டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகங்கள் தரைப்பரப்பில் இருந்து 3,800 மீ கீழே உள்ளது. டைட்டானிக்கின் சிதைந்த பாகங்கள் கனடாவில் உள்ள செயின்ட் ஜான்ஸ், நியூஃபவுண்ட்லாந்திற்கு தெற்கே சுமார் 435 மைல்கள் (700 கிமீ) தொலைவில் கடலுக்கு அடியில் உள்ளது.

இதை பார்க்க சென்ற டைட்டன் நீர்மூழ்கி கப்பல் கடலுக்கு அடியில் வெடித்து உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த நீர்மூழ்கி வெடித்த நிலையில் 110 மணி நேர சோதனைக்கு பின் கப்பல் வெடித்தது உறுதி செய்யப்பட்டது. நீர்மூழ்கி கப்பலின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் கப்பல் வெடித்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஜேம்ஸ் கேமரூன்: இந்த நிலையில் 1997ல் டைட்டானிக் படத்தை இயக்கி உலகம் முழுக்க ஹிட் கொடுத்த ஜேம்ஸ் கேமரூன் இந்த விபத்து குறித்து பேட்டி அளித்துள்ளார். இந்த படம் பற்றி ஆய்வு செய்வதற்காக 33 முறை அவர் டைவ் அடித்து இருக்கிறார். உள்ளே சென்று டைட்டானிக்கை பார்த்து உள்ளார்.
இந்த நிலையில் அவர் அளித்த பேட்டியில், டைட்டன் நீர்மூழ்கிக்கு நேர்ந்த விஷயம் எதுவும் வியப்பானது இல்லை. அது எனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கவில்லை. இந்த நீர்மூழ்கி கடல் அழுத்தம் காரணமாக வெடித்து இருக்கலாம். அதுதான் எனக்கு தெரிந்து ஒரே வழி.
உள்ளே கடலுக்கு அடியே திடீரென அழுத்தம் கூடி ஷாக் வேவ் போல வந்து இருக்கலாம். இதனால் நீர் மூழ்கியின் பேட்டரி, அழுத்தத்தை கட்டுப்படுத்தும் பிரஷர் கண்ட்ரோல்லர், சிக்னல் சாதனங்கள் முதலில் உடைந்து இருக்கலாம். இதனால் உள்ளே அழுத்த மாறுபாடு ஏற்பட்டு அவர்கள் பலியாகி இருக்கலாம்.
இந்த கப்பல் விபத்து குறித்து ஆய்வு செய்ததில் எனக்கு கிடைத்த தகவல்கள் இதுதான். உள்ளே இருக்கும் அழுத்தம்தான் இதற்கு காரணம். சிக்னல் சாதனங்கள் உடைந்த காரணத்தாலேயே இதை நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த கப்பலை கண்டுபிடிக்க முடியாது என்று அதிகாரிகளுக்கும் தெரிந்து இருக்கும். ஆனாலும் அவர்கள் தேவையற்ற நம்பிக்கையை கொடுத்துவிட்டனர்.
இந்த விபத்தில் பலியானவர்களுக்கு என்னுடைய இரங்கல்கள் என்று அவர் கூறி உள்ளார். இந்த டைட்டானிக் கப்பலை பார்க்க சுற்றுலா பயணங்களை நடத்தும் நிறுவனம்தான் the OceanGate. இவர்களின் டைட்டன் நீர் மூழ்கி கப்பல்தான் தற்போது வெடித்து உள்ளது. இந்த டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் ஹமிஷ் ஹார்டிங், 58 வயதான பிரிட்டிஷ் தொழிலதிபர் மற்றும் ஆய்வாளர். பிரிட்டிஷ் தொழிலதிபர் ஷாஜதா தாவூத், 48, மற்றும் அவரது மகன், சுலேமான் தாவூத், 19, மற்றும் 77- ஒரு வயது பிரெஞ்சு ஆய்வாளர் பால்-ஹென்றி நர்கோலெட் ஆகியோர் பயணம் செய்து உள்ளனர்.
டைட்டன் நீர்மூழ்கி மூலம் இதற்கு முன் பயணிகள் பலர் டைட்டானிக் கப்பலை சென்று பார்த்து உள்ளனர். 10 முறைக்கும் மேல் இந்த டைட்டன் டைட்டானிக்கை சென்று வெற்றிகரமாக பார்த்துவிட்டு திரும்பி உள்ளது. ஆனால் இந்த முறை டைட்டானிக்கை பார்க்க சென்று டைட்டன் நீர் மூழ்கி கப்பல் கடலுக்கு அடியில் வெடித்து உள்ளது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications