'காமுகன்' எப்ஸ்டைன் கோப்புகள் வெளியானது.. ஃபைலில் அரிதாகவே காணப்பட்ட டிரம்ப் போட்டோ!
நியூயார்க்: அமெரிக்காவையே அதிர வைத்த பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டைனின் கோப்புக்களை நேற்று அந்நாட்டு நீதித்துறை வெளியிட்டது. இதில் அதிபர் டிரம்பின் பெயர், புகைப்படம் அரிதாகவே இடம் பெற்றிருக்கிறது. ஜெஃப்ரி எப்ஸ்டைன் கோப்புகளை நியூயார்க் டைம்ஸ் ஆய்வு செய்ததில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
டிரம்பின் பெயர் இந்த ஃபைலில் இருக்கும் என்று ஏற்கனவே சந்தேகங்கள் கிளம்பின. பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டனுடன் டிரம்புக்கு என்ன வேலை என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருந்தனர். இப்படி இருக்கையில்தான் அந்த ஃபைல்கள் வெளியாகியுள்ளன.

யார் இந்த ஜெஃப்ரி எப்ஸ்டைன்?
ஜெஃப்ரி எப்ஸ்டைன் அமெரிக்காவை சேர்ந்த பைனான்சியர். இவருக்கு அமெரிக்கா மட்டுமல்லாது உலகம் முழுவதும் பெரிய பணக்காரர்களுடன் தொடர்பு இருந்தது. சிறுமிகளை கடத்தி பாலியல் தொழிலில் தள்ளியதாகவும், மற்றவர்களுக்கு விற்றதாகவும் இவர் மீது குற்றம்சாட்டு எழுந்தது. முதன் முதலில் கடந்த 2008ம் ஆண்டு இந்த குற்றத்திற்காக இவருக்கு 13 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதனையடுத்து 2019ம் ஆண்டு அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
பாலியல் வாடிக்கையாளர்கள்
2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிறையில் இவர் தற்கொலை செய்துக்கொண்டார் என்று தகவல் வெளியானது. ஆனால், சிறையில் இருக்கும் இவர் தங்களை பற்றிய உண்மைகளை வெளியில் சொல்லிவிடுவாரோ என்று பயந்த, இவரது பணக்கார வாடிக்கையாளர்கள், சிறையில் வைத்தே இவரது கதையை முடிந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
யார் யார் சிக்குவார்கள்?
இப்படி இருக்கையில்தான், இவரது ஃபைல்கள் அனைத்தும் பொது வெளியில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தினர். இதற்காக கடந்த நவம்பரில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின்படி, எப்ஸ்டைனின் ரகசியமற்ற ஃபைல்கள் அனைத்தும் பொது வெளியில் வெளியிடப்பட வேண்டும். இதனையடுத்து நேற்று இந்த ஃபைல்கள் வெளியாகியுள்ளன. எப்ஸ்டைன், அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டிரம்ப், முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், பிரிட்டிஷ் அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசர் ஆண்ட்ரூ உள்ளிட்டோருடன் நெருங்கி பழகியிருந்தார்.
சிக்காத டிரம்ப்
எனவே, இந்த ஃபைல்களில் மேற்குறிப்பிட்ட முக்கிய தலைகளின் புகைப்படங்கள், பெயர்கள் இடம் பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் தற்போது, டிரம்ப்பின் பெயர் ஆங்காங்கே இடம்பெற்றிருக்கிறது.
கடந்த 2000 தொடக்கத்திலேயே தனக்கும், எப்ஸ்டைனும் இடையே இருந்த உறவு முறிந்துவிட்டது என்று டிரம்ப் கூறியுள்ளார். அதற்கேற்றபடி, வெளியான ஆவணங்களில் டிரம்பின் பெயரும், புகைப்படமும் ஒரு சில இடங்களில்தான் இருக்கின்றன. இதற்கு அப்படியே நேர் எதிராக பில் கிளிண்டனின் புகைப்படம் பல இடங்களில் காணப்படுகிறது.
அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட ஜெஃப்ரி எப்ஸ்டைன் கோப்புகளை நியூயார்க் டைம்ஸ் ஆய்வு செய்தது. ஆயிரக்கணக்கான ஆவணங்கள், நூற்றுக்கணக்கான புகைப்படங்களில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் பெயர் அரிதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது என இந்த செய்தி ஊடகம் தெரிவித்திருக்கிறது.
-
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
'ஓமன்'ஐயும் தகர்த்துவிடுவேன்.. நட்பு நாடு என்றும் பாராமல் மிரட்டிய டிரம்ப்! மத்திய கிழக்கில் டென்ஷன் -
நள்ளிரவில் பாய்ந்த அமெரிக்க ஏவுகணைகள்... அதிகாலையில் திருப்பி அடித்த ஈரான்! மீண்டும் வெடிக்கும் போர் -
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
அமெரிக்க பொருளாதாரம் அபாயத்தில் உள்ளதா? ஜகா வாங்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்.. வெளியானது முக்கிய அறிகுறி! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications