“இஸ்ரேலுக்கு நாங்க இருக்கோம்!” ஈரான் மீது புதிய தடைகள்.. ஜி7 நாடுகளுடன் ஆலோசித்த ஜோ பைடன்!
நியூயார்க்: இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் ஈரான் மீதான புதிய தடைகள் குறித்து, ஜி7 நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆலோசனை மேற்கொண்டிருக்கிறார்.
இரண்டாம் உலகப்போர் காலத்தில், அகதிகளாக அடைக்கலம் தேடி வந்த யூதர்கள் மத்திய கிழக்கில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு என இஸ்ரேல் எனும் நாடு உருவாக்கப்பட்டது. இந்த பின்னணியில் அமெரிக்காவும், பிரிட்டனும் இருந்தன. மத்திய கிழக்கு முழுவதும் இஸ்லாமிய நாடுகள்தான். அந்த பகுதியில் தங்களுக்கு என ஒரு ராணுவ தளத்தையும், ஆதிக்கத்தையும் நிலைநாட்டவே இஸ்ரேல் உருவாக்கப்பட்டது.

இப்போதுவரை அமெரிக்க ராணுவத்தின் நவீன ஆயுதங்கள் இஸ்ரேல் வசம் இருக்கின்றன. இப்படி இருக்கையில், இந்த ஆயுதங்கள் உதவியுடன், பாலஸ்தீனத்தின் நிலப்பரப்பை கொஞ்சம் கொஞ்சமாக தின்று செரிக்க தொடங்கியது இஸ்ரேல். பரந்து விரிந்து இருந்த பாலஸ்தீனம், வெறும் வெஸ்ட் பேங்க் மற்றும் காசா என இரண்டு துண்டு நிலங்களாக சுருங்கியது. விளைவு, புதியதாக பாலஸ்தீன விடுதலை அமைப்புகள் முளைத்தன.
இதில் சில அமைப்புகள் அரசியல் ரீதியாக போராடி. பல அமைப்புகள் ஆயுதங்களை கையில் எடுத்து சண்டை செய்தன. அப்படிப்பட்ட அமைப்புதான் ஹமாஸ். ஈரான் உருவாக்கிய ஹிஸ்புல்லா அமைப்பின் ஆதரவுடன், ஹமாஸ் இஸ்ரேலுக்கு எதிராக போராடி வந்தது. ஒரு கட்டத்தில், திருப்பி பதிலடி கொடுக்க தொடங்கியது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், இஸ்ரேல் மீது திடீரென ராக்கெட்களை வீசி தாக்குதல் நடத்தியது. இதுதான் இப்போது நடக்கும் போரின் தொடக்கப்புள்ளி.
அட்ரஸ் இல்லாத ஆட்கள் எல்லாம் எங்களை தாக்குவதா? என்று கொக்கரித்த இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு, ஹமாஸ் ஒழிக்கும் வரை பாலஸ்தீனம் மீது போர் நடத்தப்படும் என்று அறிவித்தார். ஓராண்டு நடைபெற்ற இஸ்ரேல் தாக்குதலில் காசா, முற்றிலும் கபளிகரம் செய்யப்பட்டது. 41,000க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். இதில் பெண்களும், குழந்தைகளும் சரிபாதி. ஆனால் இப்போது வரை ஹமாஸை ஒழிக்க முடியவில்லை. அப்படியெனில், இஸ்ரேலின் நோக்கம் என்ன? என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பாலஸ்தீனத்தை தொடர்ந்து, தற்போது லெபனானுக்குள் நுழைய இஸ்ரேல் முயன்றுள்ளது. இதற்காக நடத்தப்பட்ட தாக்குதலில், ஹிஸ்புல்லா தலைவர், தளபதிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பழிவாங்க, ஈரான் நேற்று 200க்கும் அதிகமான ஏவுகணைகளை இஸ்ரேல் மீது வீசி தாக்குதலை நடத்தியது. இதில், இஸ்ரேலின் முக்கிய விமான தளங்கள் அழிக்கப்பட்டன. இதற்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம் என நெதன்யாகு கூறியுள்ளார்.
மறுபுறம், ஈரான் தாக்குதலை கண்டித்துள்ள அமெரிக்கா, ஈரானுக்கு எதிரான பொருளாதார தடைகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. இது குறித்து ஜி7 நாடுகளின் தலைவர்களுடன் அதிபர் பைடன் பேசி இருப்பதாக, அமெரிக்க வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் தாக்குதலைப் பற்றி விவாதிக்கவும், புதிய தடைகள் உட்பட இந்தத் தாக்குதலுக்கான பதிலை ஒருங்கிணைக்கவும் G7 தலைவர்களுடன் இன்று காலை பேசினேன். இஸ்ரேலின் பாதுகாப்புக்காக அமெரிக்கா உறுதியுடன் இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
-
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications