பாலியல் அடிமைகள்... குழந்தைகள் ஆபாச படங்கள்- நியூயார்க்கை அதிர வைத்த கெய்த் ரானியர்

தன்னைச் சுற்றி நிர்வாணமாக பெண்களை அமரவைத்து பிரசங்கம் செய்வதோடு நினைத்த நேரத்தில் நினைத்த பெண்களுடன் உறவு கொண்டு செக்ஸ் அடிமையாக நடத்தியுள்ளார் மத போதகர் ஒருவர்.

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: NXIVM என்ற அமைப்பின் நிறுவனர் கெய்த் ரானியர். இவரது தன்னம்பிக்கை தரும் பேச்சினைக் கேட்டு நூற்றுக்கணக்கானோர் இவரது தீவிரமான தொண்டர்களாக உள்ளனர். இந்த கெய்த் ரானியர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. நூற்றுக்கணக்கான பெண்களை பாலியல் அடிமையாக வைத்திருந்ததாகவும், சிறுவர்கள் ஆபாச படங்களை எடுத்தாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து அதிரவைத்துள்ளன.

சாமியார்கள், மத போதகர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் அவ்வப்போது எழுவதுண்டு. இம்முறை வாழ்க்கை நெறிமுறைகள் தொடர்பான தன்னம்பிக்கை தரும் NXIVM நிறுவனர் கெய்த் ரானியர் மீது பாலியல் குற்றச்சாட்டு புகார் எழுந்துள்ளது அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.

நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் NXIVM எனப்படும் மல்டிலெவல் மார்க்கெட்டிங் அமைப்பில் பல்லாயிரக்கணக்கானோர் மெம்பர்களாக இருக்கின்றனர். இந்த மெம்பர்களுக்கு தனது பேச்சின் மூலம் தன்னம்பிக்கையை அளித்து வருகிறார் நிறுவனர் கெய்த் ரானியர். அவர் மீதுதான் அவரது தீவிர தொண்டராக இருந்த லாரென் சால்ஸ்மென் புகார் அளித்துள்ளார்.

பாலியல் அடிமைகள்

பாலியல் அடிமைகள்

இந்த கெய்த் ரானியர் தனக்கென ஒரு பெண்கள் குழுவை வைத்து அவர்களை பாலியல் அடிமைகள் போல நடத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. இந்த புகாரை கூறியவர் வேறு யாருமல்ல, அவரது பாலியல் அடிமையாக இருந்த லாரென் சால்ஸ்மென் என்பவர்தான். இவரும் பாலியல் அடிமையாக இருந்து விடுபட்டு வந்தவர்தான்

தண்டனை பெற்ற லாரென்

தண்டனை பெற்ற லாரென்

செக்ஸ் அடிமையாக நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் லாரென் சால்ஸ்மென்க்கு ப்ரூக்ளின் நீதிமன்றம் இரண்டாண்டுகள் தண்டனை அளித்தது. மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த பெண்ணை இரண்டு ஆண்டுகள் அடிமையாக வைத்திருந்தார் என்று தொடரப்பட்ட வழக்கில் தண்டனை பெற்றார்.

ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் விசாரணை

ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் விசாரணை

இவர் மீது அளிக்கப்பட்ட புகார் மீதான விசாரணை ப்ரூக்ளினில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் லாரென் அளித்த வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. லாரெனின் தாயார் மூலம்தான் கெய்த்தின் அறிமுகம் கிடைத்துள்ளது. அவர் எனது ஆசிரியர். எங்களுக்குள் ரொமான்டிக்கான உறவுமுறை இருந்தது என்றும் லாரென் கூறியுள்ளார்.

21 வயதில் இருந்து தொடர்பு

21 வயதில் இருந்து தொடர்பு

லாரெனின் தனது 21 வயதில் இருந்து கெய்த்திடம் பாலியல் அடிமையாக இருந்துள்ளாராம் கெய்த் உடன் பலமுறை உறவு கொண்டிருக்கிறாராம். முதன் முதலாக கடந்த 2001ஆம் ஆண்டுதான் உடல்ரீதியான தொடர்பு ஏற்பட்டதாம். அவர் என் வாழ்க்கையில் மிக முக்கியமான நபர் என்றும் கூறினார்.

நிர்வாண பெண்கள் கூட்டம்

நிர்வாண பெண்கள் கூட்டம்

கெய்த் ரானியர் DOS எனப்படும் குழுவை வைத்திருப்பார். இந்த குழுவினர் பங்கேற்கும் கூட்டத்தில் கெய்த் மட்டுமே ஆடை அணிந்திருப்பார் என்றும், அவரைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான பெண்கள் நிர்வாணமான நிலையில் அமர வைக்கப்பட்டிருப்பார்கள் என்று கூறி அதிர்ச்சியளித்துள்ளார் லாரென் சால்ஸ்மென். அன்றைய தினம் எந்த பெண் மீது கெய்த் கண் விழுகிறதோ அன்றைய தினம் அவர் கெய்த்தின் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்வாராம்.

நிர்வாண புகைப்படங்கள்

நிர்வாண புகைப்படங்கள்

கூட்டம் நடைபெறாத நாட்களில் அல்லது அவரால் கலந்து கொள்ள முடியாத நாட்களில் பலவிதமான கவர்ச்சி போஸ்களில் புகைப்படம் எடுத்து அனுப்பி வைக்க வேண்டும் எனவும் வாக்குமூலம் கொடுத்த சால்ஸ்மென் கூறியுள்ளார். மெக்சிகோ நாட்டில் இருந்து ஏராளமான பெண்களை சட்டவிரோதமாக அழைத்து வந்து பாலியல் அடிமைகளாக நடத்தினார் என்ற குற்றச்சாட்டும் கெய்த் மீதும் எழுந்துள்ளது.

ஆயுள் தண்டனை

ஆயுள் தண்டனை

லாரென் அளித்த வாக்குமூலத்தைப் போல எட்டுக்கும் மேற்பட்ட பெண்கள் இப்போது கெய்த் மீது பாலியல் புகார்களை கூறியுள்ளனர். NXIVM நிறுவனத்தில் நன்கு படித்த பலரும் ஆசிரியர்களும் கெய்த் உடன் பணிபுரிகின்றனர். கெய்த் மீதான புகார்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+