6 நொடி வீடியோவால் வந்த வினை! பெண் HRஐ கட்டிப்பிடித்த சிஇஓ! இப்போ எங்க வந்து நிறுத்தி இருக்கு பாருங்க
நியூயார்க்: கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் பிரபல கோல்ட்ப்ளே இசை நிகழ்ச்சியில் ஒரு சர்ச்சை வெடித்தது. அதாவது பிரபல நிறுவனத்தின் சிஇஓவாக இருந்த ஆண்டி பைரன் தனது நிறுவனத்தில் ஹெச்ஆர் ஆக இருக்கும் பெண் ஊழியரை கட்டிபிடித்துக் கொண்டிருந்தார். இந்த வீடியோ பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில், ஹெச்ஆர் கிறிஸ்டின் காபோட் தனது கணவரிடம் பிரிய விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
அமெரிக்காவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இசை நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அங்கு புகழ்பெற்ற கோல்ட்ப்ளே என்ற இசைக்குழு நடத்தி இந்த நிகழ்ச்சியில் பல ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். பலரும் இசை நிகழ்ச்சியில் உற்சாகமாக இருந்த நிலையில், அதுவே ஒரு காதல் ஜோடிக்கு வில்லனாகவும் அமைந்துவிட்டது.

கோல்ட்பிளே
அந்த கோல்ட்பிளே இசை நிகழ்ச்சியில் அமெரிக்காவின் பிரபல ஏஐ நிறுவனமான ஆஸ்டிரானமரின் தலைவராக இருந்த ஆண்டி பைரன் பங்கேற்றிருக்கிறார். அவருடன் அதே நிறுவனத்தில் ஹெச்ஆர் தலைவராக இருந்த கிறிஸ்டின் காபோட்டும் இருந்துள்ளார். இவருவருமே வேறு வேறு நபருடன் திருமணம் ஆனவர்கள். ஆனால், அதையும் தாண்டி இருவருக்கும் இடையே கள்ள உறவு இருந்துள்ளது.
கோல்ட்பிளே இசை நிகழ்ச்சியில் இருவரும் கட்டிப்பிடித்தபடி இருந்த வீடியோ அங்கிருந்த பெரிய திரையில் ஒளிபரப்பானது. அதாவது அங்கு கிஸ்கேம் என்று ஒரு கேமரா இருக்கும். அந்த கேமராவில் ஜோடிகளை காட்டுவார்கள். அப்போது அந்த ஜோடிகள் முத்தம் கொடுத்து தங்கள் அன்பை வெளிகாட்ட வேண்டும் என்பதே ரூல்ஸ்.
சிக்கிய ஜோடி
ஆண்டி பைரனும் கிறிஸ்டின் காபோட்டும் அன்பாக கட்டி அணைத்தபடி இருந்த சூழலில், இவர்களை காதல் ஜோடி என நினைத்து கிஸ் கேமராவில் காட்டிவிட்டனர். ஆனால், பெரிய திரையில் தங்கள் படம் வந்ததை பார்த்தும் இருவருமே ஒரு நொடி அதிர்ந்து போய்விட்டனர். பெண் ஊழியரான கிறிஸ்டின், ஐயயோ என்பது போன்ற ரியாக்ஷனுடன் ஓடினார். ஆண்டி பைரன் அப்படியே தலையில் கை வைத்து உட்கார்ந்து கொண்டார்.
கள்ள உறவு
குறிப்பாக அந்த நேரத்தில் கோல்ட்பிளே பாடகர் கிறிஸ் மார்ட்டினின் மேடையில் இருந்தபடியே, "அவர்கள் கள்ள உறவில் இருக்க வேண்டும் அல்லது மிகவும் வெட்கப்படுபவர்களாக இருக்க வேண்டும்" என்ற கூறியிருந்தார். இந்த சர்ச்சை பெரிதாக வெடிக்க அதுவும் ஒரு காரணமாகும். மொத்தமே ஆறு நொடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாது. இது இருவரின் வாழ்க்கையை மொத்தமாகவே புரட்டிப்போட்டது. ஆஸ்டிரானமர் சிஇஓ பதவியில் இருந்து ஆண்டி பைரன் விலகினார். அதேபோல கிறிஸ்டின் காபோட்டு தனது வேலையில் இருந்து விலகினார்.
விவாகரத்து கோரி விண்ணப்பம்
இந்தச் சூழலில் தான் கிறிஸ்டின் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெறப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி நியூ ஹாம்ப்ஷயரில் உள்ள போர்ட்ஸ்மவுத் நீதிமன்றத்தில் காபோட் விவாகரத்து மனுவை தாக்கல் செய்துள்ளார். ஆண்ட்ரூ காபோட்டுக்கு இதற்கு முன்பே இரு முறை திருமணம் செய்து விவாகரத்து செய்தவர். இப்போது மூன்றாவது திருமணமும் கோல்ட்ப்ளே சர்ச்சையால் விவாகரத்தில் முடிகிறது.
இந்த கோல்ட்பிளே சர்ச்சை உலகளவில் பேசுபொருளானது. அவர்களின் ஆறு நொடி வீடியோ பெரிய சர்ச்சையாக வெடித்தது. இதையடுத்து காபோட் மற்றும் பைரன் இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து ஆண்டி பைரன் தனது சிஇஓ பதவியை ராஜினாமா செய்த நிலையில், சில நாட்களில் கபோட்டும் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
-
மூழ்கடிக்கப்படும் ரூ.63,000 கோடி.. கடலுக்கு அடியில் அமையும் 73,000 டன் பிரம்மாண்டம்! என்ன மேட்டர் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications