10 மில்லியன் அமெரிக்க டாலர்.. உக்ரைனுக்கு உதவிய ஹாலிவுட் நடிகர் லியானர்டோ டிகாப்ரியோ!
நியூயார்க்: பிரபல ஹாலிவுட் நடிகர் லியானர்டோ டிகாப்ரியோ உக்ரைனுக்கு ரூ.75 கோடி நன்கொடை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து பத்து நாட்களுக்கும் மேல் ஆகிறது. உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த போரில் இரு நாடுகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. பொருட்சேதம் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா ஏற்கெனவே மில்லியன்களில் உதவி செய்திருக்கிறது.

டிகாப்ரியோ
புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் லியானர்டோ டிகாப்ரியோ உக்ரைனில் ரஷிய தாக்குதல் நடத்தி வருவதால் பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்துவரும் உக்ரைனுக்கு போரைச் சமாளிக்க டிகாப்ரியோ 10 மில்லியன் அமெரிக்க டாலர்(75 கோடி ரூபாய்) நன்கொடையாக வழங்கியுள்ளார் என தெரியவந்துள்ளது. டிகாப்ரியோவின் பாட்டி உக்ரைனில் பிறந்தவர் என்பதால் இந்த உதவியைச் செய்ய அவர் முன் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் போர்
உக்ரைன் மீது ரஷ்யா, வான்வழி, தரை வழி, கடல்வழி என அனைத்து விதத்திலும் தாக்குதல் நடத்தி வருகிறது. பல நகரங்கள் மீது குண்டுமழை பொழிந்து வருகிறது ரஷ்யா. நேட்டோ நாடுகள் உதவி செய்வதற்கும் ரஷ்யா எச்சரித்துள்ளது. இதனால் உக்ரைன் எந்த உதவியும் இல்லாமல் தவித்து வருவதாக உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவதற்கு முன்பே, ரஷ்யா போர் தொடுக்கும் என அமெரிக்கா கணித்தது. அதுபோலவே, ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளன. நேட்டோ நாடுகள் உதவும் என நேட்டோ தெரிவித்துள்ளது. ஐரோப்பாவுடன் இணைய உக்ரைன் அதிபர் விண்ணப்பித்துள்ளார்.
Recommended Video

நேட்டோ
1991ல் சோவியத் யூனியனில் இருந்து உக்ரைன் பிரிந்து வந்து தனி நாடானது. அதன்பிறகும் ரஷ்ய ஆதரவு பெற்ற அதிபரே உக்ரைனை ஆண்டுவந்தார். 2014க்குப் பிறகு அதிபர் மாற்றப்பட்டதும், உக்ரைன் நேட்டோ நாடுகளோடு இணைய விரும்பியது. இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. நேட்டோவோடு இணையக்கூடாது என ரஷ்யா உக்ரைனை நிர்பந்தித்து வருகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications