இந்தியாவிற்கு அமெரிக்கா அனுப்பிய ராட்சசன்! கைக்கு வரும் ஸ்டெல்த்! பெரிய ஆபத்துங்க! பதறும் பாகிஸ்தான்
நியூயார்க்: அமெரிக்கா இந்தியாவிடம் F-35 வகை விமானங்களை விற்க ஒப்புக்கொண்டு உள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை பாகிஸ்தானை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகத்தின் (MOFA) செய்தித் தொடர்பாளர் செய்தியாளர் சந்திப்பின் போது பேசுகையில், இந்தியாவிற்கு மேம்பட்ட இராணுவ தொழில்நுட்பங்களை வழங்குவது தவறானது. இதனால் பாகிஸ்தான் ஆழ்ந்த கவலையில் உள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகள் காரணமாக ஆசிய பிராந்தியத்தில் இராணுவ ரீதியான ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்கும். இதனால் எங்கள் பிராந்தியத்தில் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது என்று பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இந்தியாவிடம் ஸ்டெல்த் தொழில்நுட்பம் இருப்பது பாகிஸ்தானுக்கு கடுமையான நெருக்கடியை வரும் காலத்தில் கொடுக்கும்.
இந்தியாவிற்கு வரும் பவர்
இங்கிலாந்து, ஜப்பான், இஸ்ரேல், நெர்லாந்து, ஐரோப்பிய நாடுகள் போன்ற நாடுகள் மட்டுமே அமெரிக்காவிடம் இருந்து இதுவரை ஒப்பந்தம் மூலம் இந்த விமானங்களை பெற்றது.
இப்படிப்பட்ட நிலையில் பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தில் , அமெரிக்கா இந்தியாவிடம் F-35 வகை விமானங்களை விற்க ஒப்புக்கொண்டு உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாகி அமெரிக்க சென்றுள்ளார். அமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடி ஜாயின்ட் ஆண்ட்ரூஸ் தளத்தில் வந்திறங்கியபோது புலம்பெயர்ந்த இந்தியர்கள் அவருக்கு வரவேற்பை அளித்தனர்.
அமெரிக்கா அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேசினார் பிரதமர் மோடி. சுமார் 1 மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. இன்று பிரதமர் மோடி அமெரிக்க NSA மைக்கேல் வால்ட்ஸ், டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் DOGE தலைவர் எலோன் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோருடன் சந்திப்பு நடத்தினார். முன்னதாக நேற்று, பிரதமர் மோடி அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குனர் துளசி கபார்டை சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளின் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்தார்.
F-35 விற்பனை:
இந்த பயணத்தில் மோடி - டிரம்ப் சந்திப்பிற்கு பின்பாக அமெரிக்கா இந்தியாவிடம் F-35 வகை விமானங்களை விற்க ஒப்புக்கொண்டு உள்ளது.
F-35 என்பது அமெரிக்கா உருவாக்கிய ஒரு நவீன மற்றும் Stealth போர் விமானம் (Stealth Fighter Jet) ஆகும். இது ரேடார் கண்ணில் மண்ணை தூவி பயணிக்க கூடிய Stealth Technology திறனைக் கொண்டுள்ளது, அதாவது எதிரியின் ரேடாரில் எளிதாக கண்டுபிடிக்க பிடிக்க முடியாது. புதிய வகை எஃப்-35 இப்போது லாக்ஹீட் மார்ட்டின் எஃப்-35 லைட்னிங் II என்று அழைக்கப்படும்.
ஒற்றை இருக்கை, ஒற்றை எஞ்சின், சூப்பர்சோனிக் ஸ்டெல்த் ஸ்ட்ரைக் ஃபைட்டர்களைக் கொண்ட அமெரிக்க போர் விமான வகை ஆகும். டாக் பைட், தாக்குதல் ஆகிய இரண்டிற்கும் வடிவமைக்கப்பட்ட ஒரு மல்டிரோல் போர் விமானம் ஆகும் இது.
முக்கிய அம்சங்கள்
3 விதமான பயிற்சி - நிலம், கடல், ஆகாயம் என மூன்று விதமான போர்களுக்கும் பயன்படுத்தலாம்.
மிகவும் வேகமானது - மணிக்கு 1900 கிமீ வரை பயணிக்கலாம்.
உயர்ந்த தொழில்நுட்பம் - தானாகவே டேட்டாவைப் பகிர்ந்து கொள்ளும் AI மற்றும் சென்சார்கள் கொண்டது.
ரேடார் பாதுகாப்பு - எதிரியின் ரேடாரில் கண்டுபிடிக்க முடியாத Stealth Technology கொண்டது.
மூன்று வகைகள்
F-35A - சாதாரண ரன்வேயில் இயங்கும் (Air Force)
F-35B - குறுகிய தூரத்தில் பறந்து செல்ல கூடியது (Navy)
F-35C - ஏவுகணை கப்பல்களில் இருந்து பறக்கும் வகை (Aircraft Carrier)
எந்த நாடுகள் பயன்படுத்துகின்றன?
அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், இஸ்ரேல், நெர்லாந்து, ஐரோப்பிய நாடுகள் போன்றவை F-35 ஐ தங்கள் ராணுவத்திற்கு பயன்படுத்துகின்றன.
ஏன் முக்கியம்:
உலகின் மிகவும் முன்னேறிய போர் விமானங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. எதிரிகளுக்கு தெரியாமல் தாக்குதல் நடத்தவும், வேகமாக செயல்படவும், துல்லியமாக தாக்கவும் வல்லது. F-35 இந்த காலத்திற்கேற்ற அதிநவீன போர் விமானம் என்பதால், பல நாடுகள் இதை வாங்க ஆர்வமாக உள்ளன.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications