சுத்த மோசம்.. ஆணுறை அணியாமல் இதென்ன அட்டகாசம்? விரைவில் பேராபத்து வரப்போகுதாமே.. "ஹூ" சொல்வதென்ன
நியூயார்க்: கருத்தடை சாதனங்கள் பயன்படுத்துவது குறித்து உலக சுகாதார மையம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இது தொடர்பான முக்கிய அறிவுறுத்தலையும் உலக சுகாதார மையம் வழங்கியிருப்பது, மிகுந்த கவனத்தை பெற்று வருகிறது.
ஆணுறைகளை பயன்படுத்துவதால், பல வகையான பிரச்சனைகளில் இருந்து நம்மை காப்பாற்ற முடியும் என நிபுணர்கள் தொடர்ந்து அறிவுறுத்தியவாறே உள்ளனர்.. ஆணுறையை பயன்படுத்தினால், தேவையற்ற கர்ப்பம் அல்லது தொற்றுகள் அல்லது பால்வினை நோய்களை தடுக்க முடியும். HIV, கோனோரியா, கிளமிடியா போன்ற பாலியல் தொற்றுநோய்களின் அபாயத்தையும் குறைக்க முடியும்..
ஆணுறைகள்: எனவே, ஆணுறைகளைப் பயன்படுத்தாதது STD, HIV அபாயத்தை அதிகரிக்க செய்துவிடும். இது பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் மட்டுமல்ல, ஆணுறை இல்லாமல் உடலுறவு கொள்வது பாக்டீரியா தொற்று மற்றும் வைரஸ்கள் ஒருவருக்கொருவர் பரவுகிறது. எனவே, ஆணுறை பயன்படுத்தினால் இந்த ஆபத்தை குறைக்கலாம் என்பதே மருத்துவர்களின் அறிவுரையாக இருந்து வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில், உலக சுகாதார மையம் அமைப்பு சமீபத்தில் ஆய்வு ஒன்றினை மேற்கொண்டிருக்கிறது.. அது தொடர்பான அறிக்கை ஒன்றையும் தற்போது வெளியிட்டிருக்கிறது..
அறிக்கை வெளியீடு: அந்த அறிக்கையில், "கடந்த 10 வருட காலத்தில் ஐரோப்பாவில் உடலுறவில் ஈடுபாடு கொண்ட இளைஞர்கள் ஆணுறை பயன்படுத்துவது பெருமளவுக்கு குறைந்து வருவது தெரியவந்துள்ளதாம்.. அதுமட்டுமல்ல, இந்த விவகாரம் குறித்து உலக சுகாதார மையம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், பெரிய ஆபத்தை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவை சுற்றியுள்ள 53 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2 லட்சத்து 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் ஆணுறை பயன்படுத்து குறித்த கருத்துக்கணிப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
பயன்பாடுகள்: அந்த கருத்துக்கணிப்பில், "2014ல் உடலுறவில் விருப்பம்கொண்ட ஆண்களிடையே 70 சதவீதமாக இருந்த ஆணுறை பயன்பாடானது, 2022ம் ஆண்டில் 61 சதவீதமாக குறைந்துள்ளது. இதேக் காலக்கட்டத்தில் பெண்கள் உடலுறவின் போது பாதுகாப்பு நடைமுறையை பின்பற்றுவது 63 சதவீதத்தில் இருந்து 57 சதவீதமாக குறைந்துள்ளது.
3-ல் ஒரு பங்கு இளைஞர்கள், கடைசியாக உடலுறவு கொண்டபோது ஆணுறை மற்றும் கருத்தடை மாத்திரைகள் எதையும் பயன்படுத்தவில்லை.. இந்த எண்ணிக்கை கடந்த 2018ல் இருந்து எவ்வித மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து வருகிறது.
எனவே, கல்வியாளர்கள், அரசுகள் மற்றும் சுகாதாரத்துறையை சேர்ந்தவர்கள், பாலியல் தொடர்பான கல்வியில் முதலீடுகளை அதிகப்படுத்தவும், பாலியல் சுகாதார சேவைகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று உலக சுகாதார மையம் அறிக்கையில் கூறியிருக்கிறது.
உடலுறவு: 10 வருட காலக்கட்டத்தில் உடலுறவில் ஈடுபாடு கொண்ட இளைஞர்கள் ஆணுறை பயன்படுத்துவது பெருமளவுக்கு குறைந்து வருவது கண்டறியப்பட்டிருப்பது, பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.. அத்துடன், அரசாங்கங்கள், சுகாதார அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் இந்த விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் இந்த நிலை பேராபத்தை ஏற்படுத்திவிடும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது அதற்கு மேல் பரபரப்பை கிளப்பி விட்டுள்ளது.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications