பொய்க்கு மேல் பொய்.. நெதன்யாகுவை வெளுத்து வாங்கிய மம்தானி

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: ஐநா சபை கூட்டத்தின் அனல் உலகம் முழுவதும் உஷ்ணத்தை கிளப்பி வருகிறது. இஸ்ரேல் பாலஸ்தீனம் விவகாரம் விவாதமாகியுள்ளது. இஸ்ரேல் மீது மனித உரிமைகள் அமைப்பினர், பல்வேறு நாடுகள் குற்றம் சாட்டின. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, நியூயார்க் மேயர் மம்தானி இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வெட்கமே இல்லையா என நெதன்யாகு கேட்க, பொய் மேல் பொய் சொல்லி புனிதராக முயற்சிக்க வேண்டாம் என மம்தானி பதிலடி கொடுத்துள்ளார்.

அமெரிக்காவின், நியூயார்க் நகரத்தில் ஐநா சபையின் பொதுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் உலகின் பல்வேறு நாட்டு தலைவர்கள் பேசி வருகிறார்கள். இதில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உரையாற்ற வந்தபோது பலரும் அவையில் இருந்து வெளியேறினர். இதனால் நெதன்யாகு கடுப்பானார். நெதன்யாகு பேசுகையில், "இஸ்ரேலை அழிப்பதை மட்டுமே நோக்கமாக கொண்ட அணு ஆயுதங்கள் உலகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

Netanyahu

வெட்கமா இல்லையா

இஸ்ரேலை உலக வரைபடத்தில் இருந்து அகற்ற ஈரான் நினைத்தது. நாங்கள் ஈரான் ராணுவத்தையும், அவர்களின் அணு ஆயுத கட்டமைப்பையும் சுக்கு நூறாக்கினோம். இந்த மாகாணத்தின் மேயர் (நியூயார்க் மேயர் மம்தானி) இஸ்ரேலுக்கு எதிராக தொடர்ந்து விமர்சனம் செய்தார். இஸ்ரேல் போர் குற்றத்தில் ஈடுபட்டது, இனப்படுகொலை செய்தது என்றெல்லாம் குற்றம் சாட்டி வருகிறார்கள். நான் கேட்கிறேன் மிஸ்டர் மம்தானி உங்களுக்கு வெட்கமாக இல்லையா.

உங்களால் என்னை அமைதியாக்க முடியாது. உண்மையை யாராலும் மறைக்க முடியாது. நாங்கள் போர் குற்றத்தில் ஈடுபடவில்லை. இனக்கொலை நடத்தவில்லை. எங்கள் இனத்தை படுகொலை செய்ததை தடுத்தோம். எம்மக்களை ஈவு இரக்கிமின்றி கொலை செய்ய வந்த ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவளித்ததற்கு மம்தானி வெட்கப்பட வேண்டும். அவர் பதவியேற்றதில் இருந்து நியூயார்க்கில் யூதர்கள் பாதுகாப்பற்ற நிலையில் பதற்றத்துடன் உள்ளனர்" என்று கூறினார்.

பொய் பொய்யாக

நெதன்யாகுக்கு மம்தானி அளித்துள்ள பதிலில், "எந்த பொய்யும் உண்மையை மாற்றிவிடாது. போர் குற்றத்தில் ஈடுபட்டதற்காகவும், அப்பாவி மக்கள் மீது வன்முறை வெறியாட்டம் ஆடியதற்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பதில் சொல்லியாக வேண்டும். இனப்படுகொலையை செய்துவிட்டு மீண்டும் மீண்டும் பொய்களை கட்டவிழ்த்து கொண்டிருக்கிறார். போர் குற்றத்தில் ஈடுபட்டதற்காக அவர்களுக்கு சர்வதேச நீதிமன்றம் அரெஸ் வாரன்டே பிறப்பித்தது.

நெதன்யாகு கைது செய்யப்பட வேண்டியவர். புனிதர் போல பேசி தான் செய்த இனப்படுகொலையை தூய்மைபடுத்த பார்க்கிறார்" என்று கூறியுள்ளார். நெதன்யாகு, மம்தானி இடையேயான கருத்து மோதல் சர்வதேசளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவருக்கும் ஆதரவாகவும், எதிராகவும் மாறி மாறி கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+