கைல ஐஸ்கிரீமோட கூட்டத்துல நிற்கிறீர்களா.. அப்போ கவனமா இருங்க.. இல்லாட்டி இந்த மாதிரி தான் நடக்கும்!
செய்தி நேரலையில் பதிவான ஐஸ்கிரீம் திருட்டு வீடியோ வைரலாகியுள்ளது.
நியூயார்க்: அமெரிக்காவில் ஐஸ்கிரீம் திருடும் நபரின் வீடியோ செய்தி நேரலையில் பதிவாகி வைரலாகியுள்ளது.
திருடர்கள் பல விதம்.. பொன், பொருள் திருடுபவர்களை நாம் திருடர்கள் என நினைக்கிறோம். ஆனால் சின்ன சின்ன பொருட்களை எல்லாம் அல்பத்தனமாக திருடும் நபர்களை என்னவென்று அழைப்பது. இவர்களுக்காக திருடர்கள் ஜாக்கிரதை போர்டு வைக்க வேண்டும் என தோன்ற வைக்கிறது இந்த க்யூட் திருட்டு சம்பவம்.
பிரபல விளையாட்டு தொலைக்காட்சியான பாக்ஸ் ஸ்போர்ட்ஸ் டிவியில் ஐஸ் ஹாக்கி விளையாட்டு போட்டி தொடர்பான நேரலை தொகுப்பு ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. ஐஸ் ஹாக்கி குறித்து அந்த தொலைக்காட்சியின் செய்தியாளர் விளையாட்டு மைதானத்தில் இருந்து விவரித்துக் கொண்டிருந்தார்.

ஐஸ்கிரீம் திருட்டு
அப்போது அவருக்கு பின்னால் ஒரு கூட்டம் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. அதில் ஒருவர் கையில் ஒரு கோன் ஐஸ்கிரீமை பிடித்தப்படி போன் பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது ஒருவர் நைசாக அந்த கோன் ஐஸ்கிரீமை திருடி சாப்பிடுகிறார்.

ஷாக்கான நபர்
தனது கையில் இருந்த ஐஸ்கிரீம் காணாமல் போனதை பார்த்து, சம்மந்தப்பட்ட நபர் அதிர்ச்சி அடைக்கிறார். ஐஸ்கிரீம் ஓனர் சுதாரிப்பதை பார்த்து, நைசாக கூட்டத்திற்கு புகுந்து மறைந்துவிடுகிறார் அந்த ஐஸ்கிரீம் திருடர்.
|
வைரல் வீடியோ
இந்த வீடியோ டிவிட்டரில் வைரலாகியுள்ளது. 36 லட்சத்துக்கும் அதிகமானோர் இதுவரை இந்த வீடியோவை பார்த்துள்ளனர். ஐஸ்கிரீமை திருடிய நபரின் பெயர் வெஸ்டன் டேவிஸ் என்பது தெரியவந்துள்ளது. இந்த உலகின் மிகச்சிறந்த திருட்டு இது தான் என நெட்டிசன்கள் வேடிக்கையாக புகழ்ந்தனர்.

நெட்டிசன்கள் சந்தேகம்
ஆனால் இது ஏதோ திட்டமிடப்பட்டு செய்தது போல் இருக்கிறதே என்றும் சிலர் சந்தேகம் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபரே இது தொடர்பாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் விளக்கமளித்தார்.

விளையாட்டு
அதில், ஐஸ்கிரீமை திருடும் நபரும், வைத்திருக்கும் நபரும் நண்பர்கள் தானாம். விளையாட்டாகத் தான் அவர் அப்படி ஐஸ்கிரீமை திருடி இருக்கிறார். கடைசியில் உலகம் முழுவதும் அவர் ஒரு திருடராக அடையாளப் படுத்தப்பட்டு விட்டார்.












Click it and Unblock the Notifications