ஒரே ஒரு ஊழியருக்கு.. மாதம் ரூ.150 கோடி.. வருடம் ரூ.1700 கோடி சம்பளம் தரும் மெட்டா.. ஏன் தெரியுமா?
நியூயார்க்: மெட்டா நிறுவனம் தனது 'சூப்பர் இன்டெலிஜென்ஸ்' பிரிவில் பணியாற்றுவதற்காக, புதிய உறுப்பினர்களுக்கு அதிக அளவு சம்பளத்தை வழங்க முன் வந்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் மூத்த பொறியாளர் ஒருவருக்கு, இந்த திட்டத்தின் கீழ் $200 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கப்பட உள்ளது.
அடித்து ஆடும் மார்க் ஜுக்கர்பெர்க்
உலகின் டாப் 11 மூளைகளை மெட்டா நிறுவனம் பணிக்கு எடுத்துள்ளது. தொழில்நுட்ப உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் அதிரடி நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. மெட்டா நிறுவனம் செயற்கை நுண்ணறிவுத் துறையில் உலகின் தலைசிறந்த 11 மேதைகளைத் பணிக்கு எடுத்துள்ளது.

இவர்கள் மூலம் 'மெட்டா சூப்பர் இன்டெலிஜென்ஸ் லேப்' என்ற புதிய உயரடுக்கு பிரிவை உருவாக்கும் பணிகளை தொடங்கியுள்ளது. இந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட குழு அடுத்த தலைமுறை செயற்கை நுண்ணறிவை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மனிதனைப் போலவே சிந்திக்கவும், பகுத்தறியவும், பதிலளிக்கவும் கூடிய திறனை இது கொண்டிருக்கும். அதாவது ஓபன் ஏஐ, ஜெமினை போன்ற ஏஐக்கு சவால் விடும் வகையில், அதை விட சிறப்பாக, அதிக ஆற்றல் கொண்ட ஏஐயை இவர்கள் உருவாக்க உள்ளனர் என்று கூறப்படுகிறது.
20 மில்லியன் டாலர் சம்பளம்
மெட்டா நிறுவனம், ஆப்பிள் நிறுவனத்தின் மென்பொருள் பொறியாளர் ருவோமிங் பாங்கை தனது புதிய சூப்பர் இன்டெலிஜென்ஸ் குழுவில் சேர்ப்பதற்காக 200 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை வழங்க ஒப்பந்தம் செய்துள்ளது. அதாவது அவருக்கு ஆண்டு வருமானம் 1.7 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். அதாவது மாத வருமானம் 150 கோடி ரூபாய் வரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. செயற்கை நுண்ணறிவுத் துறையில் திறமையானவர்களை ஈர்ப்பதற்கான மெட்டாவின் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்நிறுவனம், செயற்கை நுண்ணறிவுத் துறையில் குறிப்பிடத்தக்க முதலீடுகளைச் செய்து வருகிறது.
மெட்டா நிறுவனம், ருவோமிங் பாங்கை பணியில் அமர்த்தியதன் மூலம் செயற்கை நுண்ணறிவுத் துறையில் தனது இருப்பை உறுதி செய்துள்ளது. இது, தொழில்நுட்ப உலகில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. AI நிபுணர்கள் ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்கு ₹66 கோடி முதல் ₹165 கோடி வரை (சுமார் $8 மில்லியன் முதல் $20 மில்லியன் வரை) சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ₹830 கோடி ($100 மில்லியன்) வரை முதல் - நாள் போனஸாக வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. OpenAI, Google DeepMind மற்றும் Anthropic போன்ற நிறுவனங்களுக்குப் போட்டியாக மெட்டா நிறுவனம் தயாராகி வருவதால், தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் இதில் இறங்கி அடிக்க திட்டமிட்டுள்ளார் என்பது தெளிவாகிறது.
இந்த 11 பெரிய மூளைகள் யார்?
இந்த 11 AI ஆராய்ச்சியாளர்களும் OpenAI, Google Research, DeepMind மற்றும் Anthropic போன்ற மதிப்புமிக்க ஆய்வகங்களில் இருந்து வந்தவர்கள். ChatGPT, Gemini மற்றும் Llama போன்ற இன்றைய சக்திவாய்ந்த AI கருவிகளை வடிவமைத்தவர்கள் இவர்கள்.
டிராபிட் பன்சால் OpenAI-லிருந்து வந்தவர். OpenAI நிறுவனத்தின் "o-series" மாடல்களுக்குப் பின்னால் உள்ள ஏஐ அமைப்புகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தவர். சிந்தனை செய்யும் ஏஜெண்டாக செயல்பட AI-க்கு பயிற்சி அளிப்பதில் இவர் நிபுணர்.
சுச்சாவ் பி, OpenAI-யைச் சேர்ந்தவர், உலகின் மிகவும் மேம்பட்ட AI மாடல்களில் ஒன்றான GPT-4o-வின் குரல் மற்றும் பார்வை அம்சங்களை உருவாக்க உதவினார். இவரது பணி AI பேசவும், கேட்கவும், படங்களைப் புரிந்துகொள்ளவும் உதவுகிறது.
ஹூய்வென் சாங் Google Research-ல் பணிபுரிந்தார். Muse மற்றும் MaskIT போன்ற கருவிகள் மூலம் மிகவும் யதார்த்தமான AI படங்களை உருவாகும் திட்டத்தை நிறைவேற்றியவர். AI பார்க்கவும், கற்பனை செய்யவும் இவரது நிபுணத்துவம் முக்கியமானது. இவர் உட்பட பல முக்கிய ஊழியர்களை மெட்டா நிறுவனம் பணிக்கு அமர்த்தி வருகிறது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications