வெள்ளை மாளிகையில் தனியாக இருக்க போகும் டிரம்ப்.. மனைவி மெலனியா வேறு இடத்தில் வசிக்க முடிவு.. ஏன்?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இன்று பதவி ஏற்க உள்ளார். அவரின் மனைவி மெலனியா டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்காவின் முதல் பெண்மணியாக பதவி ஏற்க உள்ளார். ஆனால் மெலனியா டிரம்ப் வெள்ளை மாளிகையில் வசிக்கமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது .

கடந்த முறை டிரம்ப் உடனே வெள்ளை மாளிகையில் இருந்தவர் இந்த முறை இருக்க மாட்டார். பொதுவாக அதிபர் உடன் முதல் பெண்மணி இருப்பது என்பது இமேஜ் ரீதியாக முக்கியம். குடும்பங்கள் இடையே அதிபருக்கு வரவேற்பு கிடைக்க அவர் குடும்பத்துடன் இருப்பது முக்கியம். ஆனால் இந்த முறை மெலனியா
பெரும்பாலும் கணவர் உடன் இருக்க மாட்டார்.

donald trump inauguration donald trump

மெலனியா பல்வேறு பணிகளை கவனித்துக்கொள்வதற்காக வாஷிங்டன், DC, நியூயார்க் நகரம் மற்றும் புளோரிடாவின் பாம் பீச் ஆகிய பகுதிகளுக்கு அடிக்கடி செல்வார். அதனால் மெலனியா டிரம்ப் வெள்ளை மாளிகையில் வசிக்கமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த முறை டிரம்ப் ஆட்சியில் இருந்த போதும் மெலனியா டிரம்ப்.. எல்லா நாளும் வெள்ளை மாளிகையில் இல்லை. இந்த முறையும் குறைவான நாட்களே வெள்ளை மாளிகையில் இருப்பார். இந்த முறை எனக்கு பதற்றம் இல்லை. நான் பதற்றம் இல்லாமல் வெள்ளை மாளிகைக்கு செல்ல உள்ளேன். வெள்ளை மாளிகையில் என்ன நடக்கும் என்பது எனக்கு தெரியும். இந்த முறை அனுபவத்தோடு செல்வதால் பிரச்சனை இல்லை, என்று மெலனியா டிரம்ப் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் பின்னால் இருந்தே மெலனியா டிரம்ப் செயல்படுவார். கடந்த ஆட்சி முறையிலும் இதேபோல் செயல்பட்ட நிலையில்.. இந்த முறையும் மெலனியா டிரம்ப் அதிகமாக பொது இடங்களில் தோன்ற மாட்டார்.

அமெரிக்கா ஆட்சி முறை: அமெரிக்காவில் இந்தியா, யு.கே போன்ற ஆட்சி முறை கிடையாது. இதனால் அமைச்சர் பதவி என்ற பெயரில் பொறுப்புகள் வழங்கப்படாது. மாறாக மத்திய அமைச்சரின் அதே பொறுப்புகளோடு அதிகாரத்தோடு செயலாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இவர்கள் அதிபர் மூலம் நேரடியாக தேர்வு செய்யப்பட்டு.. செனட் தரும் அடையாள ஒப்புதலுடன் செயலாளர்கள் ஆவார்கள்.

வெளியுறவுத்துறை அமைச்சர்: அமெரிக்காவில் மிக முக்கிய அமைச்சரவை பொறுப்பான வெளியுறவுத்துறை செயலாளர் பதவிக்கு டிரம்ப் தனக்கு நெருக்கமான செனட்டர் மார்கோ ரூபியோவை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமியை கொண்டு வர டிரம்ப் இருப்பதாக செய்திகள் வந்தன.

ஆனால் விவேக் ராமசாமியை புறக்கணித்து, செனட்டர் மார்கோ ரூபியோவை தனது இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்சிக்கு.. வெளியுறவுத்துறை செயலாளராக தேர்வு செய்ய டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. டிரம்பின் 2024 பிரச்சாரத்தின் போது அதில் முக்கிய பங்கு வகித்தவர் ரூபியோ. இவரின் தேர்வு பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ்: டிரம்ப் தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றுமாறு மைக் வால்ட்ஸை அழைத்துள்ளார் என்கிறார்கள். இவர் முன்னாள் ராணுவ வீரர் . கடுமையான சீன எதிர்ப்பாளர். சீனாவை கடுமையாக விமர்சனம் செய்ய கூடியவர் . ரஷ்யா உக்ரைன் இடையிலான போரை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டுவர டிரம்ப் எதிர்பார்க்கும் நிலையில் இவரின் வருகை கவனம் பெற்றுள்ளது.

எல்லைகள் பாதுகாப்பு: தாமஸ் டி. ஹோமனை நாட்டின் எல்லைகள் கடல் மற்றும் வான்வெளி எல்லை பாதுகாப்புக்கு பொறுப்பான border czar துறைக்கு தலைவராக நியமிக்க உள்ளார். அதாவது அமெரிக்காவில் அத்துமீறி.. அனுமதியின்றி குடியேறி உள்ளவர்களை வெளியேற்றுவதற்கும்.. புதிதாக மக்கள் ஊடுருவதை தடுக்கவும் தாமஸ் டி. ஹோமனை டிரம்ப் உள்ளே கொண்டு உள்ளார். டிரம்ப்பின் முந்தைய நிர்வாகத்தில் மூத்த குடியேற்ற அதிகாரியான தாமஸ் டி. ஹோமன் பதவி வகித்து வந்தார். அப்போது இந்த பணியை சிறப்பாக செய்தார். அதோடு அகதிகள் குடியேற்றத்தை வெகுவாக கட்டுப்படுத்தினார். இவர் டிரம்பிற்கு மிக நெருக்கம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம்.. இந்த தேர்தலில் அகதிகள் விவகாரம் உச்சத்தில் இருந்தது. அமெரிக்காவில் வெளிநாட்டினர் முறைகேடாக குடியேறுவதை டிரம்ப் கடுமையாக எதிர்த்தார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை நிர்வாகி: லீ செல்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை நிர்வாகியாக முன்னாள் பிரதிநிதி லீ செல்டின் நியமிக்கப்பட உள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நியூயார்க் கவர்னராகப் போட்டியிட்ட டிரம்ப்பின் நெருங்கிய நண்பரான செல்டின் தீவிரமான குடியரசு கட்சிக்காரர்.

விவேக் ராமசாமி: ஜேடி வேன்ஸ் துணை அதிபர் ஆகிறார். இதனால் ஒஹையோ மாகாண செனட் பதவி காலியாகிறது. இந்த பதவிக்கு விவேக் ராமசாமி முயல்வார் என்கிறார்கள்.

சிஐஏ தலைவர் : சிஐஏ இயக்குனர் பதவிக்கு குஜராத் பின்புலத்தை கொண்ட காஷ்யப் காஸ் பட்டேல் நியமிக்கப்படவுள்ளாராம். இவர் டிரம்பிற்கு மிக நெருக்கம். கடந்த டிரம்ப் ஆட்சியில்.. அவர் வெற்றிபெற ரஷ்யா காரணம் என்று புகார் வைக்கப்பட்டது. இந்த விசாரணையில் டிரம்பிற்கு பெரிய உதவியாக இருந்தது காஷ்யப் காஸ் பட்டேல்தான்.அதேபோல் டிரம்பின் முந்தைய ஆட்சியில் பல முக்கியமான உளவு தகவல்கள்.. உளவு ரீதியான முடிவுகளை எடுக்க காஷ்யப் காஸ் பட்டேல் டிரம்பிற்கு காரணமாக இருந்தார். காஷ்யப் காஸ் பட்டேல் சிஐஏ தலைவராகும் முடிவை டிரம்ப் முன்பே எடுத்துவிட்டார். ஆனால் இதற்கு செனட் சபை அனுமதி அளிக்க வேண்டும். இரண்டு அவையிலும் டிரம்ப் முன்னிலை வகிக்கிறார். செனட் சபையை கைப்பற்றிவிட்டார். இதன் காரணமாக காஷ்யப் காஸ் பட்டேல் சிஐஏ இயக்குனர் ஆவதில் சிக்கலே இருக்காது என்கிறார்கள். காஷ்யப் காஸ் பட்டேல் சிஐஏ தலைவராக முடியாத பட்சத்தில் அவரை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

பாதுகாப்பு துறை அமைச்சர்: ஆர்ம்ட் சர்வீசஸ் தலைவர் ரெப். மைக் ரோஜர்ஸ் பாதுகாப்பு துறை அமைச்சர் பதவிக்கு தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

தலைமை அதிகாரி: வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியாகத் தனது பிரச்சார குழு மேலாளர் சுசி வைல்ஸை நியமித்துள்ளார். அமெரிக்க வரலாற்றில் பெண் ஒருவர் இந்த பதவிக்கு வருவது இதுவே முதல்முறையாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+