யார நம்புறதுனே தெரியல தாஸ் அண்ணா..அந்தரங்கங்களை ஒட்டு கேட்கும் வாட்ஸ் ஆப்! வச்சான் பாரு ஆப்பு எனக்கு
நியூயார்க்: உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் அன்றாட தகவல் பரிமாற்றத்திற்காக பயன்படுத்தும் வாட்ஸ்அப் செயலியைச் சுற்றி தற்போது பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. பயனர்களின் தனிப்பட்ட சாட்களை மெட்டா நிறுவனம் மறைமுகமாக அணுகி கண்காணித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்த விவகாரம், தனியுரிமை பாதுகாப்பு குறித்த உலகளாவிய விவாதத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் மெசஞ்சர் செயலியை உலகம் முழுவதும் 300 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறுஞ்செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள், ஆடியோ செய்திகள் மட்டுமின்றி, குரல் மற்றும் வீடியோ அழைப்புகள் வரை அனைத்திற்கும் வாட்ஸ்அப் இன்றியமையாத தளமாக மாறியுள்ளது.
குடும்ப உரையாடல்கள் முதல் பள்ளி, கல்லூரி, அலுவலகம், வணிகம் என பல்வேறு தேவைகளுக்காக தனிநபர் உரையாடல்களும், குழு உரையாடல்களும் வாட்ஸ்அப்பில் நடைபெற்று வருகின்றன.இந்த நிலையில், வாட்ஸ்அப் வழங்குவதாக கூறப்படும் 'எண்டு-டூ-எண்ட் என்கிரிப்ஷன்' பாதுகாப்பு அம்சம் உண்மையில் பயனர்களை தவறாக நம்பச் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வாட்ஸ்அப் தனியுரிமை சர்ச்சை
இந்த அம்சத்தின் மூலம், ஒரு செய்தியை அனுப்பும் பயனரும், அதைப் பெறும் பயனரும் மட்டுமே அந்த தகவலைப் பார்க்க முடியும் என்றும், மூன்றாம் நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ அந்த செய்திகளை அணுக முடியாது என்றும் மெட்டா தொடர்ந்து விளம்பரப்படுத்தி வந்தது. ஆனால், இந்தியா, ஆஸ்திரேலியா, பிரேசில், மெக்சிகோ, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த சில வாட்ஸ்அப் பயனர்கள், இந்த பாதுகாப்பு முழுமையானது அல்ல என்று கூறி அமெரிக்க நீதிமன்றத்தில் மெட்டாவுக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளனர்.
மெட்டா மீது வழக்கு
அந்த வழக்கில், வாட்ஸ்அப் பயனர்களின் உரையாடல் தொடர்பான தகவல்கள், மெசேஜ் அனுப்பும் நேரம், தொடர்பு கொண்ட நபர்கள், குழு செயல்பாடுகள் போன்ற மெட்டாடேட்டாக்கள் மெட்டா நிறுவனத்தால் சேமிக்கப்பட்டு, அவை பகுப்பாய்வு செய்யப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த தரவுகளை விர்ச்சுவல் முறையில் அணுகவும், தேவையான சூழலில் பயன்படுத்தவும் மெட்டாவுக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
எண்டு டூ எண்டு என்கிரிப்ஷன்
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து மெட்டா நிறுவனம் கடும் மறுப்பு தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப் உரையாடல்களின் உள்ளடக்கத்தை தங்களால் எப்போதும் பார்க்க முடியாது என்றும், பயனர்களின் தனியுரிமை பாதுகாப்பே தங்களின் முதன்மை நோக்கம் என்றும் மெட்டா விளக்கம் அளித்துள்ளது. நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், அவை பயனர்களிடையே தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும் மெட்டா தரப்பு கூறியுள்ளது.
எலான் மஸ்க்
இந்த சர்ச்சைக்கு இடையே, எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் வெளியிட்ட கருத்தும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "வாட்ஸ்அப் பாதுகாப்பான தளம் அல்ல. இதேபோல் சிக்னல் செயலியையும் கேள்விக்குள்ளாக்க வேண்டும். பயனர்கள் எக்ஸ் சாட் போன்ற மாற்று தளங்களை பயன்படுத்தலாம்" என்று அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இது தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையிலான போட்டி அரசியலையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
பயனர் தரவு பாதுகாப்பு
மெட்டா மீது எழுந்துள்ள இந்த குற்றச்சாட்டு, டிஜிட்டல் காலத்தில் பயனர்களின் தனியுரிமை எவ்வளவு பாதுகாப்பானது என்ற அடிப்படை கேள்வியை மீண்டும் முன்வைத்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பு எப்படியிருந்தாலும், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்தும் கோடிக்கணக்கான மக்களிடையே, "நமது உரையாடல்கள் உண்மையிலேயே பாதுகாப்பானவையா?" என்ற சந்தேகம் எழுந்துள்ளதை மறுக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications