முடங்கிய மைக்ரோசாப்ட் சேவைகள்.. அவுட்லுக், டீம்ஸ், கோபைலட் காலியானது! பல கோடி பேர் அவதி!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முக்கிய சேவைகள் திடீரென முடங்கியதால், இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் உள்ள கோடிக்கணக்கான பயனர்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

குறிப்பாக அலுவலகப் பணிகளுக்கு அதிகம் பயன்படுத்தப்படும் அவுட்லுக், மைக்ரோசாப்ட் டீம்ஸ், கோபைலட் மற்றும் மைக்ரோசாப்ட் 365 ஆகிய சேவைகள் வேலை செய்யாமல் போனதால், ஐடி ஊழியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் அன்றாட வேலைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன.

Microsoft outage

என்ன பிரச்சனை ஏற்பட்டது?

நேற்று இரவு தொடங்கி இன்று அதிகாலை வரை இந்தத் தொழில்நுட்பக் கோளாறு நீடித்தது. பயனர்களால் தங்களது அவுட்லுக் கணக்கிற்குள் நுழைய முடியவில்லை. மேலும், முக்கியமான இமெயில்களை அனுப்பவும், பெறவும் முடியாமல் பல மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.

அதேபோல், அலுவலகக் கூட்டங்கள் மற்றும் தகவல்தொடர்புக்குப் பயன்படுத்தப்படும் 'டீம்ஸ்' செயலி மற்றும் AI உதவியாளரான 'கோபைலட்' ஆகியவையும் சரியாக இயங்கவில்லை. வேர்ட், எக்செல் , ஒன்டிரைவ் போன்ற சேவைகளிலும் சில இடங்களில் தடங்கல் ஏற்பட்டதாகப் புகார் தெரிவித்தனர்.

இணையதள சேவைகளின் முடக்கத்தைக் கண்காணிக்கும் 'டவுன்டிடெக்டர்' தளத்தில், அவுட்லுக் வேலை செய்யவில்லை என 1 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் புகார் பதிவு செய்துள்ளனர். அதேபோல், மைக்ரோசாப்ட் 365 சேவை குறித்து 46 ஆயிரத்திற்கும் அதிகமான புகார்களும், டீம்ஸ் செயலி குறித்து ஆயிரக்கணக்கான புகார்களும் பதிவாகின.

பிரச்சனைக்குக் காரணம் என்ன? சைபர் தாக்குதலா?

இந்தத் திடீர் முடக்கத்தால், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மீது ஏதேனும் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதா என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்தது. ஆனால், இது சைபர் தாக்குதல் அல்ல என்பதை மைக்ரோசாப்ட் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

இது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், எங்களது சில சர்வர்கள் எதிர்பாராத விதமாகச் செயல்படாமல் போனதால், மற்ற சர்வர்களின் மீது அதிகப்படியான அழுத்தம் ஏற்பட்டது. சர்வர்களின் ஆரோக்கியத்தைச் சரிபார்க்கும் தானியங்கி சோதனையில் ஏற்பட்ட கோளாறால் இந்தப் பிரச்சனை உருவாகியிருக்கலாம் எனக் கருதுகிறோம். இதனாலேயே பயனர்களுக்கு இணைப்புத் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலை என்ன?

பிரச்சனையைச் சரிசெய்ய மைக்ரோசாப்ட் பொறியாளர்கள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சர்வர்களை மீண்டும் இயங்க வைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது போல, இணையத் தரவுகளை மாற்றுப் பாதைகள் வழியாகத் திருப்பிவிட்டுச் சுமையைக் குறைக்கும் நடவடிக்கையை மைக்ரோசாப்ட் எடுத்துள்ளது.

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, பாதிக்கப்பட்ட சர்வர்களில் ஒரு பகுதி மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளதாகவும், அவை நிலையாக இயங்குவதாகவும் மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+