அமெரிக்காவில் டிக்டாக்கை.. கைப்பற்ற போகும் மிகப்பெரிய ஜாம்பவான்.. யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க
நியூயார்க்: அமெரிக்காவில் டிக்டாக் நிறுவனத்தை விரைவில் அமெரிக்க நிறுவனம் ஒன்று கைப்பற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன .
அமெரிக்காவில் TikTok தடை செய்யப்பட்டு மீண்டும் செயல்பாட்டிற்கு வந்து உள்ளது. இந்தியாவில் ஏற்கனவே டிக்டாக் தடை செய்யப்பட்டுவிட்ட நிலையில் தற்போது அமெரிக்காவில் செயலியைத் தடை செய்யும் சட்டம் தயாராக உள்ளது. ஆனால் டிரம்ப் வருகை காரணமாக டிரம்ப் தற்காலிகமாக செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த டிக்டாக் செயலி மீது கடுமையான சில புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. டிக்டாக் செயலி சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்தின் கீழ் இயங்கும் நிறுவனம் ஆகும். சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நிறுவனத்தின் கீழ் இருப்பதால் அமெரிக்காவில் இதை தடை செய்ய சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த பைட்டான்ஸ் நிறுவனம் அந்நாட்டு அரசின் proxy நிறுவனம் என்ற புகார் உள்ளது.
அதாவது பைட்டான்ஸ் நிறுவனம் சீனாவின் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனம். இவர்கள் உலகம் முழுக்க மக்களின் டேட்டாவை எடுக்கிறார்கள். இதன் மூலம் சீனா மக்களை கட்டுப்படுத்துகிறது. தங்களின் பொருட்களை விற்கிறது. அதோடு இல்லாமல் பல ரகசிய தகவல்களை கூட திரட்டுகிறது என்று புகார் உள்ளது. ஏற்கனவே அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்கள் ராணுவ தளவாடங்களில் டிக்டாக் செயலியை பயன்படுத்த தடை உள்ளது.
உலகம் முழுக்க பல ராணுவத்தில் டிக்டாக் செயலியை பயன்படுத்த தடை உள்ளது. இந்த நிலையில்தான் அதிபர் பிடன் ஆதரவோடு அமெரிக்காவில் இந்த செயலியை தடை செய்ய சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின்படி அந்த செயலியை பயன்படுத்த முடியாது. அதேபோல் புதிதாக டவுன்லோட் செய்யவும் முடியாது. ஆனால் இதை எல்லாம் டிரம்ப் வந்ததும் நீக்கினார்.
டிரம்ப் மீட்டிங்
அமெரிக்காவில் டிக்டாக் தொடர்பாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொள்ளும் பேச்சுவார்த்தைகள் கவனம் பெற்றுள்ளன. அதன்படி டிக்டாக் நிறுவனத்தை அமெரிக்காவின் oracle நிறுவனம் உட்பட ஏதாவது ஒரு நிறுவனத்திற்கு விற்க டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.
அமெரிக்காவை சேர்ந்த 5 நிறுவனங்களுடன் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். அமெரிக்க நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உங்கள் நிறுவனத்தின் அமெரிக்க பிரிவை மாற்றுங்கள். அப்படி மாற்றவில்லை என்றால் உங்கள் டிக்டாக் நிறுவனத்தை செயல்பட அனுமதிக்க மாட்டோம் என்று டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடந்து வருவதாக கூறப்படுகிறது.
அதன்படி இந்த நிறுவனத்தை பெரும்பாலும் மைக்ரோசாப்ட் வாங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இந்த பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் தடை:
உலகம் முழுக்க இந்தியா தவிர பல நாடுகளில் டிக்டாக் மிகவும் பிரபலமாக உள்ளது. டிக்டாக் செயலி சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்தின் கீழ் இயங்கும் நிறுவனம் ஆகும். அமெரிக்காவில் கிட்டத்தட்ட 17 கோடி கணக்குகள் உள்ளன. அமெரிக்காவே கிட்டத்தட்ட டிக்டாக் செயலிக்கு அடிமையாகி உள்ளது.
அதன்படி டிக்டாக் செயலியை அங்கே வீடியோ போட மட்டுமின்றி தங்களின் பிஸ்னஸ் வேலைகளுக்கு, பொருட்களை விற்க, வகுப்புகளை எடுக்க கூட பயன்படுத்துகின்றனர். நம்ம ஊரில் எப்படி இன்ஸ்ட்டா ரீல்ஸ் இருக்கிறதோ அப்படித்தான் அமெரிக்காவில் டிக்டாக் இருக்கிறது. நம்ம ஊரில் இவங்க தலைக்கட்டு என்றால்.. அந்த ஊரில் அவங்க தலைக்கட்டு!
-
அமெரிக்காவை அதிரவைக்கும் 'மர்ம ஹம்' சத்தம்.. வானில் தோன்றிய பச்சை நிற ஒளி! என்னங்க நடக்குது? -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம்












Click it and Unblock the Notifications