Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குத்துச் சண்டை ரசிகர்களுக்கு ஏமாற்றம்! மைக் டைசன் தோல்வி!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: பிரபல தொழில்முறை குத்துச் சண்டை வீரரான மைக் டைசன் நீண்ட நாட்களுக்கு பிறகு குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்றிருந்தார். அவரை எதிர்த்து களமிறங்கிய 27 வயது இளைஞர் ஜேக் பால், மைக் டைசனை வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறார்.

உலகின் தலைச்சிறந்த தொழில்முறை குத்துச் சண்டை வீரராக அறியப்பட்டவர் மைக் டைசன். சாதாரணமாக தெருவில் சிறு சிறு சண்டைகளை போட்டு, குற்றத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த டைசனை, 'கஸ் டி அமடோ' எனனும் பயிற்சியாளர்தான் தத்தெடுத்து குத்துச்சண்டை வீரனாக மாற்றினார். அமெரிக்கா முழுவதும் வெள்ளையர்களின் ஆதிக்கம் நிறைந்து இருந்த காலம் அது. எனவே, குத்துச்சண்டையிலும் இது பிரதிபலித்தது.

mike tyson boxing match

ரொனால்டு ரீகன் ஆட்சியில் போலீஸின் அடக்குமுறை, பொருளாதார சிக்கல்கள், பணவீக்கம், கொகைன் போதைப்பொருளின் ஆதிக்கத்திற்கு எதிராக கருப்பின மக்கள் அமெரிக்க வீதிகளில் நீதி கேட்டு பேரணிகளை நடத்திக்கொண்டிருந்தனர். அரசியலில் ஒரு பக்கம் கருப்பின மக்கள் தங்களின் உரிமைகளுக்காக போராடிக்கொண்டிருந்தபோது, மறுபுறம் டைசன் குத்துச்சண்டையில் தனது ஆதிக்கத்தை செலுத்திக்கொண்டிருந்தார்.

இந்த நேரத்தில்தான் டைசன் உள்ளே என்ட்ரி ஆகிறார். வெறும் 20 வயதில் சக போட்டியாளர்களை வீழ்த்தி ஹெவி வெயிட் சாம்பியனாக உருவெடுக்கிறார்.

அமெரிக்காவின் பிரதான விளையாட்டாக பேஸ் பால் இருந்தாலும், குத்துச்சண்டைக்கு என தனி இடம் இருக்கிறது. இளைஞர்கள் பலரும் குத்துச்சண்டை வீரர்களை தங்களின் ரோல் மாடல்களாக கருதி வந்தனர். இவ்வளவு முக்கியத்துவம் பெற்ற போட்டியில் ஒரு கருப்பின இளைஞர் புயலாக நுழைந்தது அமெரிக்கா மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள மக்களின் கவனத்தை ஈர்த்தது. தொடர் வெற்றி பெற்ற டைசன், பின்னர் தனது பயிற்சியாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்தார்.

இது டைசனின் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனை. இந்த பிரிவுக்கு பின்னர் டைசன் அடுத்தடுத்த போட்டிகளில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிய வெற்றி பெறவில்லை. பாலியல் புகார், போட்டியில் விதிகளை மீறியது என தொடர்ந்து குற்றச்சாட்டுகளுக்கு டைசன் உள்ளானார். இது அவரது குத்துச்சண்டை செல்வாக்கை குறைத்தது. பின்னர் ஒரு கட்டத்தில் அவர் குத்துச்சண்டை போட்டியிலிருந்து விலகுவதாகவும், இறுதியாக ஒரேயொரு போட்டியில் மட்டும் விளையாடுவதாகவும் அறிவித்தார். அதிலும் அவர் தோல்வியை தழுவினார். அதன் பின்னர் டைசன் முழுமையாக போட்டியிலிருந்து விலகினார்.

இப்படி இருக்கையில் 58 வயதில் டைசன், மீண்டும் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்பதாக அறிவிப்பு வெளியானது. பல ஆண்டுகளுக்கு பிறகு டைசன் போட்டியில் பங்கேற்பதால் போட்டியின் மீதான சுவாரசியம் அதிகரித்தது. டைசனை எதிர்த்து 27 வயது இளைஞர் ஜேக் பால் களமிறங்கினார். போட்டி நடப்பதற்கு இரு நாட்களுக்கு முன்னர் இருவரும் சந்தித்துக்கொள்ளும் நிகழ்வு நடந்தது. இதில் உணர்ச்சிவசப்பட்ட டைசன், ஜேக்கை தாக்கினார்.

இந்த போட்டி குறித்தும், மைக் டைசனின் விளையாட்டு குறித்தும் எதிர்ப்பார்ப்பு அதிகரித்தது. இந்நிலையில் இன்று நடந்த போட்டியில் மைக் டைசனை 27 வயது இளைஞர் ஜேக் பால் வீழ்த்தியுள்ளார். 8 சுற்றுகளாக இந்த போட்டி நடைபெற்றது. இதனை நெட்பிளிக்ஸ் நேரடியாக ஒளிபரப்பு செய்தது. போட்டியின் தொடக்கம் முதல் டைசன் தாக்குதலுக்கு (Attack) முயன்றார். ஆனால் ஜேக் பால் டைசனின் எல்லா தாக்குதலிலிருந்தும் முடிந்தவரை தன்னை காப்பாற்றிக்கொண்டு எதிர்பாராத வகையில் டைசனை தாக்கினார்.

ஆனால் இடையில் டைசனின் ஒரு பஞ்ச் ஜேக்கை பலமாக பதம் பார்த்தது. ஒரே பஞ்ச்சில் ஜேக் பல அடி வரை பின்னோக்கி சென்றுவிட்டார். இனி டைசனிடம் நெருக்கமாக விளையாட வேண்டும் என்பதை உணர்ந்த அவர், சூதானமாக விளையாடி அதிக புள்ளிகளை பெற்று வெற்றி பெற்றார். ஆட்ட முடிவில் ஜேக் 28%, டைசன் 18% என்று புள்ளிகளை பெற்றிருந்தனர்.

நீண்ட காலத்திற்கு பிறகு டைசன் விளையாட்டுக்கு வருவதே பலரிடமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. மட்டுமல்லாது 27 வயது இளைஞனை 58 வயது டைசன் எதிர்த்து நின்றது சாதாரணம் அல்ல. குத்துச்சண்டை விதிகளின்படி டைசன் தோல்வியடைந்திருந்தாலும், கோடிக்கணக்கான குத்துச்சண்டை ரசிகர்கள் மத்தியில் என்றைக்குமே மைக் டைசன்தான் ஹீரோ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+