சாத்தான்குளம் காவல் மரணங்கள்-மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் கடும் கண்டனம்
நியூயார்க்: சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் தாக்கப்பட்டு ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்த சம்பவத்துக்கு வட அமெரிக்காவில் உள்ள மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகக் குழு வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளத்தில் கடந்த வாரம் ஜெயராஜ் (59) மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகிய இருவரையும் தமிழக காவலர்கள் சிறையில் அடித்தே கொலை செய்திருப்பது மனிதத்தன்மை அற்ற செயலாகும். அச்செயலை வடஅமெரிக்காவில் உள்ள மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
மினசோட்டாவில் ஜார்ஜ் பிளாய்ட் காவலர் ஒருவரால் கொல்லப்பட்ட (மே 25) செய்தி உலகமெங்கும் பரவி, அனைத்து நாடுகளிலும் தொடர் போராட்டமாக நடந்து கொண்டிருக்கிறது. மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் சார்பாக பறையிசைத்து அவர் இறந்த இடத்தில் நமது கண்டனத்தையும், நினைவேந்தலையும் தெரிவித்தோம்.
அந்த காய வடு மறைவதற்கு முன்பே அதைவிட கொடிய வகையில் தமிழ்நாட்டில் நடந்த இப்படியொரு கொடுஞ் செயல் மிகுந்த வேதனையளிக்கிறது.
தமிழ்நாடு அரசு, அந்தக்குற்றச் செயலில் ஈடுபட்ட அனைத்துக் காவலர்களையும் விசாரித்து அவர்களுக்குத் தகுந்த தண்டனையை வழங்குமாறும், இனியும் இது போல் வரும் காலங்களில் குற்றச் செயல்கள் தொடராமல் இருக்கத் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் தெரிவித்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications