என்னா சந்தோஷம் அந்த குரங்கு முகத்துல.. புரிஞ்ச மாதிரியே பேப்பரை வேற எடுத்து படிச்சு பாக்குதே!
தனக்கு வந்த பரிசு பெட்டியை மிகுந்த ஆர்வத்துடன் திறந்து பார்த்து ஆச்சர்யப்படுத்தியுள்ளது குரங்கு ஒன்று.
நியூயார்க்: தனக்கு வந்த பரிசு பெட்டியை மிகுந்து ஆர்வத்துடன் திறந்து பார்த்து, அதில் இருக்கும் தண்ணீர் பாட்டிலை பார்த்து குரங்கு உற்சாகமடைவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒருவர் மற்றொருவரை மகிழ்விக்க பரிசுகள் கொடுப்பது வழக்கம். பெற்றோர்கள் ஏதாவது ஒரு பொருளை பிள்ளைகளுக்கு வாங்கிக்கொடுத்து ஆச்சரியப்படுத்தும் போது, குழந்தைகள் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷமும் உற்சாகமும் பிறக்கும். அதுவே அந்த பெற்றோருக்கு வாழ்நாள் மகிழ்வை கொடுக்கும்.

இது மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் பொருந்தும் என நிரூபித்திருக்கிறது அமெரிக்காவில் உள்ள குரங்கு ஒன்று. ஜார்ஜ் என பெயர் கொண்ட அந்த குரங்குக்கு, அதன் உரிமையாளர் ஒரு பரிசு பொருளை வாங்கிக்கொடுத்தார்.

அதைப்பார்த்து உற்சாகமடைந்த அந்த குரங்கு உடனடியாக அந்த பெட்டியை வாங்கி திறந்து பார்த்தது. அதன் உள்ளே ஒரு தண்ணீர் பாட்டில் இருப்பதை பார்த்த ஜார்ஜ், சந்தோஷத்தில் துள்ளி குதித்தது. அந்த பாட்டிலின் மூடியை திறந்து பார்த்த குரங்கு, மீண்டும் அதை சரியாக மூடி வைத்துவிட்டது. பின்னர் அந்த பெட்டியில் இருந்த கையேட்டை எடுத்து பிரித்து படித்து பார்த்து உரிமையாளரை வியப்படைய வைத்துவிட்டது ஜார்ஜ்.

குரங்கின் இந்த செயலை வீடியோ எடுத்து அதை தனது சமூகவலை தளத்தில் பகிர்ந்தார் ஜார்ஜின் உரிமையாளரான ரெக்ஸ் எனும் பாஸ்கெட் பால் விளையாட்டு வீரர். அந்த வீடியோவை பார்த்த அசந்துபோன நெட்டிசன்கன், உடனே அதை வைரலாக்கிவிட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications