யூத மத வழிபாட்டிற்குள் புகுந்த மர்ம நபர்.. சரமாரி கத்தி குத்து.. 5 பேர் காயம்.. நியூயார்க்கில் திக்!

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் யூத மத வழிபாட்டின் போது மர்ம நபர் ஒருவர் கத்தியால் நடத்திய தாக்குதல் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் யூத மத வழிபாட்டின் போது மர்ம நபர் ஒருவர் கத்தியால் நடத்திய தாக்குதல் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலில் 5க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

அமெரிக்காவில் சமீப நாட்களாக மத மற்றும் இன ரீதியான தாக்குதல்கள் அதிகம் நடந்து வருகிறது. முக்கியமாக அமெரிக்காவில் குடியேறி இருக்கும் பிற நாடு மற்றும் இன மக்களை சேர்ந்தவர்கள் மீது அதிகமாக தாக்குதல் நடந்து வருகிறது.

More than 5 injured heavily in a mass stabbing in New York early morning

கடந்த சில மாதங்களுக்கு முன் அமெரிக்காவில் யூதர்கள் நடத்திய மத வழிபாட்டு கூட்டத்தில் தாக்குதல் நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று காலை அமெரிக்காவில் நியூயார்க் மாகாணத்தில் மோன்சே பகுதியில் இதேபோல் யூதர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஹனுக்கா எனப்படும் யூதர்களின் விழாவை அடுத்து இன்று அப்பகுதியில் இருக்கும் யூத மக்கள் ஒன்றாக சேர்ந்து வழிபாடு நடத்தினார்கள். அங்கு மக்களுடன் மக்களாக யூத மத குருக்களின் ஒருவராக ஹாஸிட்டிக் ரப்பியும் வழிபாடு நடத்தினார்.

சுமார் 60 பேர் அங்கு ஒன்றாக சேர்ந்து வழிபாடு நடத்தினார்கள். அப்போது அங்கே புகுந்த மர்ம அங்கிருந்த மக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினார். அங்கிருந்த மக்களை கத்தியால் குத்தி, மோசமாக காயம் ஏற்படுத்தினார். இந்த தாக்குதலில் 5 பேருக்கும் அதிகமானோர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தாக்குதலில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை.

இந்த தாக்குதலை நடத்தியது யார் என்று விவரம் வெளியாகவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விரைவில் அந்த மர்ம நபர் அடையாளம் காணப்படுவார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். சமீப நாட்களாக யூதர்கள் மீது இதுபோன்ற கத்தி குத்து தாக்குதல் அதிகமாக நடந்து வருவது அமெரிக்காவில் வழக்கம் ஆகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+