முகேஷ் அம்பானி அமெரிக்காவில் வாங்கிய சொகுசு மாளிகை.. செல்வந்தர்களின் கனவு இடம்.. விலை தெரியுமா?
நியூயார்க்: இந்தியாவின் நம்பர் ஒன் கோடீஸ்வரும், நாட்டின் மிகப்பெரிய தொழில் அதிபருமான முகேஸ் அம்பானி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ரூ.153 கோடிக்கு சொகுசு வீட்டை வாங்கி உள்ளார். அமெரிக்காவின் பெரும் பணக்காரர்கள் வசிக்கும் ரிபெகா என்ற பகுதியில் தான் சொகுசு பங்களாவை வாங்கி உள்ளார். இந்த வீட்டில் ஏராளமான வசதிகள் உள்ளன. குறிப்பாக சொல்வது என்றால், கூடைப்பந்து மைதானமும் பங்களாவிற்குள் இருக்கிறதாம்.
இந்தியாவின் மிகப்பெரிய செல்வந்தர் முகேஷ் அம்பானிக்கு லட்சம் கோடிக்கு மேல் சொத்துக்கள் உள்ளது. உலகின்பெரிய பணக்காரர்களில் ஒருவராக இருக்கிறார். முகேஷ் அம்பானி இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்பட பல்வேறு நாடுகளில் தொழில்கள் செய்து வருகிறார். உலகம் முழுக்க தொழில்கள் இருப்பதால், ஒவ்வொரு நாட்டிலும் சொத்துக்களை வாங்கி குவித்து வருகிறார்.

இந்நிலையில் தொழில் அதிபர் முகேஷ் அம்பானி அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ட்ரிபெகா (Tribeca) என்ற பகுதியில் ஒரு சொகுசு வீட்டை வாங்கியிருக்கிறார். இந்த வீட்டின் மதிப்பு, இந்திய ரூபாயில் ரூ.153.59 கோடி ஆகும். இந்த வீடு அமைந்துள்ள பிரபல பணக்காரர்கள் வசிக்கும் ஹூபர்ட் சாலையில் உள்ள பகுதியில் உள்ளது. இந்த புதிய சொகுசு வீடு 17,000 சதுர அடி பரப்பளவு கொண்டதாகும். இந்த வீட்டை, முகேஷ் அம்பானி, அமெரிக்காவின் யுபிக்விட்டி நிறுவனத்தின் தலைவர் ராபர்ட் பெராவிடம் இருந்து வாங்கியிருக்கிறார். இந்த வீட்டில், கூடைப்பந்து மைதானம் உட்படப் பல்வேறு நவீன வசதிகள் இருக்கிறது.
முகேஷ் அம்பானி இப்படி நியூயார்க் நகரில் சொத்து வாங்குவது புதியது அல்ல. இதற்கு முன்பு, அங்கு புகழ் பெற்ற மேண்டரின் ஓரியண்டல் (Mandarin Oriental) ஹோட்டலில் 73.4% பங்குகளை ரூ. 2000 கோடிக்கு வாங்கியுள்ளார். இந்த மேண்டரின் ஓரியண்டல் ஓட்டல், நியூயார்க் நகரத்தின் மிகவும் பிரபலமான மற்றும் ஆடம்பரமான ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் ஒன்றாகும். இந்த ஓட்டல் செல்வந்தர்கள் பலரும் விரும்பி தங்கும் நட்சத்திர ஓட்டல் ஆகும். இந்த ஓட்டல் நியூயார்க்கின் கொலம்பஸ் சர்க்கிள், மத்திய பூங்கா ஆகிய இடங்களுக்கு அருகில் அமைந்துள்ளது.
இந்த ஓட்டலின் அறைகள் மற்றும் ஹாரில் இருந்து, மத்திய பூங்கா, ஹட்சன் நதி, டைம்ஸ் ஸ்கொயர் மற்றும் நியூயார்க் நகரத்தின் வானுயர்ந்த கட்டிடங்களை பார்த்து ரசிக்க முடியும். இந்த ஓட்டலில் மொத்தம் 202 அறைகள் உள்ளன. இங்கு 14,500 சதுர அடி பரப்பளவு கொண்ட மிகப்பெரிய ஆடம்பரமான ஸ்பா மையம் இங்கு உள்ளது. மேலும் ஹோட்டலில் 75 அடி நீளமுள்ள நீச்சல் குளம் உள்ளது. இதில் நீந்தியபடி, ஹட்சன் நதியின் அழகை ரசிக்க முடியும்.
முகேஸ் அம்பானிக்கு இந்தியா, அமெரிக்கா மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளில் சொத்துக்கள் உள்ளன. இங்கிலாந்து நாட்டின் லண்டனில் உள்ள ஸ்டோக் பார்க் (Stoke Park) என்ற ஐந்து நட்சத்திர ஓட்டலை கடந்த காலங்களில் வாங்கியுள்ளார். இது ஒரு 900 ஆண்டுகள் பழமையான கட்டிடம் என்பதுடன், பாரம்பரியம் மிக்கது என்பதால், இந்த விலைக்கு வாங்கி உள்ளார்.
துபாயில் உள்ள பாம் ஜுமேரா (Palm Jumeirah) பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு ஆடம்பர மாளிகைகள் அவரிடம் உள்ளது. முகேஷ் அம்பானி குடும்பத்தின் நீண்ட தூர பயணங்களுக்காக, ஒரு போயிங் 737 மேக்ஸ் 9 விமானத்தையும் அவர் வாங்கியுள்ளார், அதன் மதிப்பு சுமார் ரூ.1000 கோடி ஆகும். அதாவது முகேஷ் அம்பானி வெளிநாடுகளுக்கு செல்ல தனி விமானமே இருக்கிறது.












Click it and Unblock the Notifications