நாசா வெளியிட்ட ஒரு போட்டோ.. பார்த்ததும் ஆடிப்போன நெட்டிசன்ஸ்! அப்படி இதில் என்ன இருக்கிறது தெரியுமா?
நியூயார்க்: அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வெளியிட்ட ஒரு புகைப்படம் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
Recommended Video
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா பல்வேறு விண்வெளி புகைப்படங்களை அவ்வப்போது வெளியிடுவது வழக்கம். நாசாவின் பல்வேறு ஆராய்ச்சி விண்கலன்கள், probe கருவிகள், தொலைநோக்கிகள் உதவியுடன் இதுபோன்ற வியக்க வைக்கும் புகைப்படங்கள் வெளியிடப்படுவது வழக்கம்.
இந்த நிலையில்தான் செவ்வாய் கிரகத்தில் இருந்து நாசா ஒரு ஆச்சர்யம் அளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறது.

செவ்வாய் கிரகம்
பொதுவாக நிலவு, செவ்வாய் கிரகம் தொடங்கி பல கோள்கள், துணை கோள்களில் பெரிய குழிகள் காணப்படும். இந்த குழிகள் பல காரணங்களுக்காக ஏற்படும். இப்படி கிரகங்களில் காணப்படும் குழிகளை crater என்று அழைப்பார்கள். நிலவில் நாம் காணும் வடை சுடும் பாட்டியும் கூட இந்த crater குழிகள்தான். சரி விஷயத்திற்கு வருவோம் தற்போது நாசா வெளியிட்டு இருக்கும் புகைப்படம் செவ்வாய் கிரகத்தில் இருக்கும் Mars crater குழிகளின் புகைப்படம் ஆகும்.

பெரிய குழி
செவ்வாய் கிரகத்தில் சுற்றிக்கொண்டு இருக்கும் நாசாவின் Mars Reconnaissance Orbiter என்ற ஆர்பிட்டரில் இருக்கும் அதி நவீன கேமராவான High-Resolution Imaging Science Experiment (HiRISE) மூலம் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த புகைப்படத்தில் என்ன சிறப்பு என்றால் செவ்வாயில் அமைந்து இருக்கும் அந்த குழிகள் சரியாக ஜீரோ டிகிரி தீர்க்கரேகையில் அமைந்து இருக்கும் குழிகள் ஆகும்.

என்ன புகைப்படம்
அதாவது செவ்வாய் கிரகத்தில் சரியாக ஜீரோ டிகிரி தீர்க்க ரேகையில் பெரிய குழிகள் உள்ளன. இந்த புகைப்படமே ஒரு பிக்சலுக்கு 50 சென்டி மீட்டர் என்ற அளவில் எடுக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் புகைப்படத்தில் இருப்பதை விட நிஜத்தில் இந்த குழி பல மடங்கு பெரியதாக இருக்கும். இந்த புகைப்படம் பார்க்க ஒரு ஏலியனின் கால் தடம் போலவே இருப்பது தோன்றுகிறது. பெரிய ஏலியன் ஒன்று இங்கு கால் வைத்தது போல இருக்கிறது.

ஏன் முக்கியம்
ராட்சசன் ஒருவன் நடந்து சென்றது போல இருக்கிறது என்று நெட்டிசன்கள் பலர் இதை பற்றி கமெண்ட் செய்துள்ளனர். இப்படி ஒரு அபூர்வமான விஷயத்தை நாங்கள் பார்த்தது இல்லை என்றும் நெட்டிசன்கள் பலர் கமெண்ட் செய்துள்ளனர். செவ்வாய் கிரகத்தில் பல குழிகள் இருக்கின்றன. ஆனாலும் இந்த குழி சரியாக ஜீரோ டிகிரி தீர்க்க ரேகையில் அமைந்து உள்ளதால் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications