2024 YR4 விண்கல் பூமியில் மோத 3.1% வாய்ப்பு இருக்கிறது! பகீர் கிளப்பும் நாசா.. வெளியான ஷாக் வீடியோ
நியூயார்க்: கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட 2024 YR4 எனும் விண்கல், பூமியை தாக்க 1 சதவிகித வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், இந்த வாய்ப்பு 3.1% ஆக தற்போது அதிகரித்திருக்கிறது. விண்கல் தாக்குதல் எப்படி இருக்கும் என்பது குறித்து கிராபிக்ஸ் வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது.
நாசாவின் இந்த புதிய அறிவிப்பால் அச்சம் அதிகரித்துள்ளது. ஆனால் 7 ஆண்டுகள் கழித்துதான் இந்த பேரிழவு ஏற்படும் என்பதால், மக்கள் கொஞ்சம் ஆசுவாசம் அடைந்துள்ளனர்.

கடந்த டிசம்பர் 27ம் தேதி சிலியின் விண்வெளி ஆய்வகத்திலிருந்து இந்த 2024 YR4 விண்கல் கண்டுபிடிக்கப்பட்டது. 177 அடி, அதாவது ஒரு பெரிய கட்டிடத்தின் சைஸை கொண்ட இந்த விண்கல் 8 மெகா டன் அளவுக்கு பெருவெடிப்பை ஏற்படுத்தக்கூடும். இந்த விண் கல் பூமி மீது மோதுவதற்கு 1 சதவீதம் மட்டுமே வாய்ப்பு இருப்பதாக தொடக்கத்தில் சொல்லப்பட்டு வந்தது. ஆனால் இந்த வாய்ப்பு அடுத்தடுத்த நாட்களில் 2.6 சதவீதமாக அதிகரித்தது. இன்றைய தேதியில் இந்த விண்கல் பூமி மீது மோத 3.1 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக நாசா எச்சரித்துள்ளது.
இந்த விண்கல் மோதினால் பூமியில் பேரழிவு ஏற்படும். உதாரணமாக சென்னை மீது இந்த விண்கல் மோதினால், சென்னை இருக்கும் இடம் தெரியாமல் ஒட்டுமொத்தமாக முழுவதுமாக அழிக்கப்படும். இந்நிலையில் இந்த விண்கல் மோதினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து கிராபிக்ஸ் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
விண்கற்கள் மிகவும் ஆபத்தானவையாக இருக்கிறது. இந்த பூமியை சுற்றிலும், பூமி இருக்கக்கூடிய சூரிய குடும்பத்தை சுற்றிலும் கோடிக்கணக்கான விண்கற்கள் இருக்கின்றன. இந்த விண்கற்கள் எப்போது பூமி மீது மோதும் என்பது துல்லியமாக கணிப்பது கஷ்டம். சில கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் இருந்த டைனோசர்கள்களை அழித்ததும் இந்த விண்கற்கள் தான்.
ஏறத்தாழ ஒரு கிலோ மீட்டர் விட்டம் கொண்ட பெரிய விண்கல் ஒன்று பூமி மீது கடுமையாக மோதியது. இதனால் ஏற்பட்ட நிலநடுக்கங்களும் எரிமலை வெடிப்பும் பூமியில் இருக்கக்கூடிய பெரிய பெரிய உயிரினங்களை கொத்துக்கொத்தாக அழித்தது. எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட புகை மண்டலம் பூமியை சூழ்ந்ததால் சூரிய ஒளியால் உள்ளே வர முடியவில்லை. இது தாவரங்களின் ஒளி சேர்க்கையை கடுமையாக பாதித்து தாவரங்களை அழிக்க தொடங்கியது. தாவரங்கள் அழிந்ததால் தாவரங்களை நம்பி இருக்கக்கூடிய சைவ உணவுகளும் அதை நம்பி இருக்கக்கூடிய தலைவர் உயிரினங்களும் கொஞ்சம் கொஞ்சமாக அழியத் தொடங்கின. இப்படித்தான் டைனோசர் அழிந்தது.
NEW: NASA has increased the chance a major asteroid smashes into Earth in 2032, now giving it a 3.1% chance, up from 2.6% last week.
— Collin Rugg (@CollinRugg) February 18, 2025
NASA says the odds the asteroid hits Earth is 1 in 32. It is big enough to wipe out an entire city.
The large cities with the highest risk are… pic.twitter.com/WHVsiGsieT
ஆனால் இப்போது நாம் பூமி மீது மோத வாய்ப்பு இருப்பதாக சொல்லக் கூடிய விண்கல், சைசில் சிறியது என்பதால் ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் ஆபத்து ஏற்படாது. ஆனால் இந்த விண்கல் மோதும் இடத்தில் கடுமையான பாதிப்புகள் ஏற்படலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த விண்கல் 2032ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ம் தேதி பூமியை தாக்கும். விண்கல் தாக்குதல் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் வாசகர்களே?
-
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications