இதுவே கடைசி இரவாக கூட இருக்கலாம்.. படையெடுக்கும் விண்கற்கள்! வார்னிங் கொடுத்த நாசா
நியூயார்க்: உலகம் விண்கற்களால் அழிவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்று விஞ்ஞானிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இப்படி இருக்கையில், இன்று இரவு 4 பெரிய விண்கற்கள் பூமிக்கு மிக நெருக்கமாக கடந்து செல்ல இருப்பதாக நாசா எச்சரித்துள்ளது.
விண்கல் 363305 (2002 NV16): இந்த 4 விண்கற்களில் இதுதான் கொஞ்சம் பெரியது. இதன் சைஸ் 580 அடி. தோராயமாக ஒரு பெரிய பில்டிங் அளவுக்கு இருக்கும். இது மணிக்கு 17,542 கிமீ வேகத்தில் நாளை இரவு 9.17 மணியளவில் பூமியை 45.2 லட்சம் கி.மீ தொலைவில் கடந்து செல்ல இருக்கிறது. 45 லட்சம் கி.மீ என்பது மிகப்பெரிய தொலைவாக தெரியலாம். ஆனால், நமக்கு பக்கத்தில் உள்ள செவ்வாய் கிரகம் சுமார் 22.5 கோடி கி.மீ தொலைவில் இருக்கிறது. எனவே, 45 லட்சம் கி.மீ என்பது பூமிக்கு நெருக்கமான தொலைவுதான்.

இது தப்பி தவறி பூமி பக்கம் திரும்பினால், மிகப்பெரிய அளவுக்கு பேரழிவை ஏற்படுத்திவிடும். ஒரே சமயத்தில் 44,400 மெகா டன் டிஎன்டி வெடிப்பொருள் வெடித்தால் எவ்வளவு பாதிப்பு ஏற்படுமோ அந்த அளவுக்கு பாதிப்பை இந்த விண்கல் ஏற்படுத்தும். 6 கி.மீ விட்டத்தில் 2 கி.மீ அடி ஆழத்திற்கு இந்த விண்கல் ஒரு பெரிய பள்ளத்தை ஏற்படுத்தும். விண்கல் விழுந்த இடத்திலிருந்து 700 கி.மீ தொலைவுக்கு பெரும் அதிர்வலைகள் பரவும். நிலநடுக்கம் மிக மோசமானதாக இருக்கும். கடலில் விழுந்தால் 100 மீ உயர்த்திற்கு சுனாமியை ஏற்படுத்தும்
விண்கல் 2023 TG14 & 2015 HM1: இவை இரண்டும் பூமியை கடந்து செல்ல உள்ள இரண்டாவது மற்றும் விண்கற்களாகும். இவை முறையே 76 மற்றும் 100 அடி சைஸில் சிறியதாக இருக்கும். இருப்பினும் கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதை போல, இந்த விண்கற்கள் பூமியை தாக்கினால் பேரிழிவை ஏற்படுத்திவிடும். இதில் 2023 TG14 மணிக்கு 24,858 கி.மீ வேகத்தில் 25,50,000 கி.மீ தொலைவிலும், 2015 HM1 55,30,000 கிலோமீட்டர் தொலைவில், மணிக்கு 39,158 கி.மீ வேகத்தில் கடந்து செல்ல இருக்கிறது.
விண்கல் 2024 TP17: இது பூமியை கடக்க உள்ள நான்காவது விண்கல். 170 அடி அளவுள்ள இது, மணிக்கு 20,832 கி.மீ வேகத்தில் 46,40,000 கிலோமீட்டர் தொலைவில் பூமியை கடந்து செல்ல இருப்பதாக நாசா தெரிவித்திருக்கிறது. ஒருவேலை இந்த விண்கல் பயணிக்கும் பாதையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டு, அது பூமி பக்கம் திரும்பினால் மிகப்பெரிய பேரிழிவு ஏற்படும். அதாவது, ஒரே நேரத்தில் 1400 மெகா டன் டிஎன்டி வெடிப்பொருள் வெடித்தால் எவ்வளவு பாதிப்பு ஏற்படுமோ அந்த அளவுக்கு பாதிப்பை இந்த விண்கல் ஏற்படுத்தும். 2 கி.மீ விட்டத்தில் 400 அடி ஆழத்திற்கு இந்த விண்கல் ஒரு பெரிய பள்ளத்தை ஏற்படுத்தும். விண்கல் விழுந்த இடத்திலிருந்து 150 கி.மீ தொலைவுக்கு பெரும் அதிர்வலைகள் பரவும். நிலநடுக்கம் மிக மோசமானதாக இருக்கும். கடலில் விழுந்தால் 100 மீ உயர்த்திற்கு சுனாமியை ஏற்படுத்தும்.
இதனால் உடனடியாக பல்லாயிரக்கணக்கான மனித உயிர்கள் பலியாகும். தவிர, உற்பத்தி பாதிப்பு, பொருளாதார பாதிப்பு, வறுமை, வேலையின்மை, இது ஏற்படுத்தும் பசி, பஞ்சம் காரணமாக மேலும் லட்சக்கணக்கான மக்கள் நாளடைவில உயிரிழப்பார்கள் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications