பூமிக்கு நெருக்கமாக அசுர வேகத்தில் வரும் விண்கல்! நாசா கொடுத்த திடீர் எச்சரிக்கை!
நியூயார்க்: விண்கற்கள் பூமிக்கு மிகுந்த அச்சுறுத்தலாக இருப்பதாக விஞ்ஞானிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்நிலையில் இன்று பூமிக்கு நெருக்கமாக 45 அடி அகலமுள்ள விண்கல் ஒன்று பறந்து செல்ல இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
உலகம் முழுவதும் விண்வெளி துறையின் மீதான முதலீடுகள் சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. ஆனால் ஏன் நாம் விண்வெளி துறையின் மீது அதிக கவனம் செலுத்துகிறோம்? என்று அடிக்கடி பலரும் கேள்வி எழுப்புகின்றனர். நாட்டில் பஞ்சம், பசி, பட்டினி, வறுமை, வேலையின்மை இதெல்லாம் இருக்கும்போது ஏன் விண்வெளி துறைக்கு கோடி கோடியாக அள்ளி கொடுக்கிறோம் என்று கேள்வி எழுந்தது. அதற்கான பதிலை விஞ்ஞானிகள் இவ்வாறு கூறினர்.

அதாவது, "நாம் இருக்கும் உலகம் ஏராளமான பேரழிவுகளை சந்தித்து வந்திருக்கிறது. இதில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமான உயிர்கள் அழிந்துவிட்டன. மீதம் இருக்கும் உயிரினங்களில் நாமும் ஒன்று. இனியும் ஒரு அழிவு வராது என்று சொல்ல முடியாது. நிச்சயம் ஏதேனும் ஒரு விண்கல் பூமியை தாக்கினால் ஒட்டு மொத்த உலகமும் அழிந்துவிடும். எனவே இதிலிருந்து நாம் தற்காத்துக்கொள்ள புதிய வழிமுறையை கண்டுபிடிக்க வேண்டி இருக்கிறது. அதனால்தான் விண்வெளி துறைக்கு அதிக முதலீடுகள் அவசியமாகிறது" என்று பல்வேறு விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இவர்கள் கூறியதை போல எதிர் காலத்தில் விண்கற்களால் பூமிக்கு ஆபத்து அதிகம் இருக்கிறது என ஆய்வுகள் தெளிவுப்படுத்தி உறுதி செய்திருக்கின்றன. இந்நிலையில், இன்று பூமிக்கு நெருக்கமாக விண்கல் ஒன்று பறந்து செல்ல இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். 2024 QL எனும் பெயரிடப்பட்ட இந்த விண்கல், பூமிக்கு நெருக்கமாக 11 லட்சம் கி.மீ தொலைவில் கடந்து செல்ல இருக்கிறது.
11 லட்சம் கி.மீ தூரம் என்பது நீண்ட தூரமாக தெரியலாம். ஆனால், ஆதித்யா எல் 1 எனப்படும் விண்கலம், 15 லட்சம் கி.மீ தொலைவில் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. அதை விட விண்கலன் கடந்து செல்ல உள்ள தூரம் குறைவுதான்.
45 அடி அகலம் கொண்ட இந்த விண்கலன் சுமார் 38,453 கி.மீ வேகத்தில் பூமியை கடக்கிறது. இந்த பாதையில் சிறிய மாற்றம் நிகழ்ந்தால் கூட அது பூமி மீது மோதுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அப்படி மோதினால், ஹிரோஷிமாவில் போடப்பட்ட அணுகுண்டு எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதோ, அதைவிட 80 மடங்கு அதிக பாதிப்பை இது ஏற்படுத்தும். இந்த விண்கல் விழுந்த இடத்தில் ஏறத்தாழ 2 கி.மீ சுற்றளவுக்கு, 1 கி.மீ ஆழத்திற்கு பள்ளம் உருவாகும்.
இப்படி விண்கல் விழும்போது ஏற்படும் அதிர்வலைகள், சூப்பர் சோனிக் வேகத்தில் பயணிக்கும். அதேபோல கல் விழுந்த இடத்தை சுற்றி 160 கி.மீ தூரத்திற்கு 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உருவாகும். இதே கல் கடலில் விழுந்தால் மிகப்பெரிய அளவுக்கு சுனாமி உருவாகும். இந்த விண்கல் பூமியின் வளிமண்டலத்தை கண்டு வரும்போது ஏராளமான தூசி துகள்களை வெளியேற்றும். இது சூரினை மறைத்து செயற்கையான குளிர் காலத்தை உருவாக்கும் என்று நாசா விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications