Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"இனி 4 பெருங்கடல் அல்ல.. 5.." அன்டார்டிகாவின் தெற்கு பெருங்கடலை அங்கீகரித்தது.. நேஷனல் ஜியோகிராபிக்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: இதுவரை உலகில் 4 பெருங்கடல்கள் மட்டுமே அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு இருந்த நிலையில்.. 5வதாக ஒரு பெருங்கடல் தற்போது நேஷனல் ஜியோகிராபிக் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது... அது அன்டார்டிகாவை சுற்றி இருக்கும் தெற்கு பெருங்கடல்.

அன்டார்டிகாவை சுற்றி இருக்கும் தெற்கு பெருங்கடல் உலகிலேயே மிகவும் அழகான தூய்மையான கடல் பகுதியாகும். அன்டார்டிகாவை சுற்றி பசிபிக் கடல், இந்திய பெருங்கடல், அட்லான்டிக் கடல் மூன்றையும் தொட்டபடி இந்த தெற்கு கடல் அமைந்து இருக்கிறது.

அன்டார்டிகாவை சுற்றி இது அமைந்து உள்ள நிலையில்... தெற்கு கடல் வெறும் பனி படலமா, அல்லது பசிபிக், இந்திய பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் கடலின் நீட்சியாக இருக்குமோ என்று விவாதங்கள் நடந்து கொண்டி இருந்தது. இந்த நிலையில்தான் நேஷனல் ஜியோகிராபிக் தெற்கு பெருங்கடலை தனி பெரும் கடலாக அறிவித்துள்ளது.

image source : www.nationalgeographic.com

நேஷனல் ஜியோகிராபிக்

நேஷனல் ஜியோகிராபிக்

நேஷனல் ஜியோகிராபிக் மூலம் இதுவரை பசிபிக் கடல், ஆர்டிக் கடல், அட்லான்டிக் கடல், இந்திய பெருங்கடல் ஆகிய நான்கு பெருங்கடல் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட நிலையில் தற்போது 5வதாக தெற்கு பெருங்கடல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உலக சூழலியல் வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள், கடல் வல்லுநர்கள் இடையே இந்த முடிவு பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

எப்படி

எப்படி

நேஷனல் ஜியோகிராபிக் இதை அங்கீகரிக்கும் முன்பே பல்வேறு செய்திகளில், கட்டுரைகளில் தெற்கு பெருங்கடல் என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஏற்கனவே இந்த கடலை அங்கீகரிக்கும் முடிவில் நேஷனல் ஜியோகிராபிக் இருந்த நிலையில், தற்போது இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த தெற்கு பெருங்கடல் அண்டார்டிகாவை சுற்றி 60 டிகிரி தெற்கு அட்ச ரேகையை எல்லையாக கொண்டு அமைந்து உள்ளது.

எல்லை

எல்லை

பொதுவாக கடல் எல்லாமே அந்த கடல் இருக்கும் கண்டங்களை அடிப்படையாக கொண்டு எல்லை வகுக்கப்படும். ஆனால் தெற்கு பெருங்கடல் அதன் ஓசன் கரண்ட் (Antarctic Circumpolar Current) எனப்படும் கடல் நீர் சுற்றும், செல்லும் திசையை வைத்தும் வரையறுக்கப்பட்டுள்ளது. அண்டார்டிகாவை சுற்றி 60 டிகிரி தெற்கு அட்ச ரேகையை எல்லையாக கொண்டு சுற்றும் கடல் பரப்பு இதன் எல்லையாக வரையறுக்கப்பட்டுள்ளது.

 எப்படி

எப்படி

Antarctic Circumpolar Current காரணமாக பல லட்சம் வருடங்களாக அன்டார்டிகாவை சுற்று மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி கடல் நீர் செல்கிறது. இந்த சுழற்சிதான் தற்போது தெற்கு கடல் பகுதியின் எல்லையை வரையறுக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த சுழற்சி நிலவும் 60 டிகிரி தெற்கு அட்ச ரேகை வரை இதன் எல்லை ஆகும். இங்கு கடல் நீர் கொஞ்சம் குளிராகவும், குறைவான உப்பு தன்மையுடனும் இருக்கும்.

சுழற்சி

சுழற்சி

இந்த சுழற்சி மூலமே அட்லான்டிக், பசிபிக், இந்திய பெருங்கடலில் இருந்து கடல் நீர் வெளியே வந்து, உலக அளவில் நீர் சுழற்சிக்கு உதவுகிறது. உலகில் கடல்களின் சமநிலைக்கு உதவும் நீர் சுழற்சிக்கு தெற்கு கடலில் ஏற்படும் இந்த சுழற்சியே முதுகெலும்பு. இதன் மூலம்தான் கடலுக்குள் அடியில் கார்பன் சேமிப்பானது தொடங்கி, துருவ வெப்பநிலை வரை பல கட்டுப்படுத்தப்படுகிறது.

வானிலை

வானிலை

பூமியின் வானிலையில் இந்த தெற்கு கடல் சுழற்சி அதிக முக்கியத்துவம் வகிக்கிறது. இந்த நிலையில் அதை அடிப்படையாக வைத்து, தற்போது தெற்கு பெருங்கடல் அறிவிக்கப்பட்டுள்ளது. 1970ல் இருந்து இப்படி உலக வரைபடங்களில் வெளியிட்டு அதில் மாற்றங்களை நேஷனல் ஜியோகிராபிக் செய்து வருகிறது. 1915ல் நேஷனல் ஜியோகிராபிக் நான்கு கடல்களை அங்கீகரித்த நிலையில் இப்போது தெற்கு பெருங்கடல் இதில் சேர்ந்துள்ளது.

எப்படி

எப்படி

இந்த தெற்கு பெருங்கடலை International Hydrographic Organization (IHO) எனப்படும் சர்வதேச ஹைட்ரோகிராஃபிக் அமைப்பு இன்னும் அங்கீகரிக்கவில்லை. ஆனால் அமெரிக்காவின் NOAA 1999லேயே இந்த தெற்கு பெருங்கடலை அங்கீகரித்துவிட்டது. நேஷனல் ஜியோகிராபிக் கொடுத்துள்ள அங்கீகாரம் காரணமாக இனி சர்வதேச வரைபடங்களில் தெற்கு பெருங்கடல் தனியாக குறிக்கப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+