அவசியமான பதிலடியை தருவோம்.. சீன பலூனை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா.. அந்த நொடி என்ன நடந்தது? வீடியோ
நியூயார்க்: சீனாவின் உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்திய வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த பலூனை சுட்டு வீழ்த்தும் முன் என்ன நடந்தது என்பது தொடர்பான விவரங்களும் கூட வெளியாகி உள்ளன.
Recommended Video
அமெரிக்காவில் சீனாவின் உளவு பலூன்கள் பறந்த விவகாரம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வடக்கு அமெரிக்கா மேலே சீனாவின் இந்த ராட்சச பலூன் பறந்து கொண்டு இருந்தது.
அமெரிக்காவின் ராணுவ தளவாடங்களுக்கு மேலே இவை பறந்து இருக்கின்றன. முதலில் இதை சீனா தங்களுடைய பலூன் இல்லை என்றது.

தாக்குதல்
அதன்பின் இது எங்களுடைய பலூன்தான். அட்லாண்டிக் கடலில் சர்வதேச எல்லையில்தான் இது பறந்து கொண்டு இருந்தது. இது வானிலைக்காக பறக்க விடப்படும் பலூன். வானிலையை கணிப்பது மட்டுமே இதன் வேலை என்றது. அதன்பின்தான் பலூனில் கீழே சென்சார்கள் இருப்பதும், கேமரா இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு அதில் பல தொலைத்தொடர்பு சாதனங்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சாதனங்கள் அனைத்தும் சோலார் பேனல்கள் உதவியுடன் இயங்கி வந்துள்ளன. இதையடுத்து அட்லாண்டிக் கடலுக்கு மேலே சென்ற பின் அமெரிக்க போர் விமானமான எப் 22 விமானங்கள் 3 இதை சுற்றி பறந்து சுட்டு வீழ்த்தின.

சுட்டது
கிழக்கு கடல் பகுதியில் இந்த பலூன் வீழ்த்தப்பட்டது. இன்று அதிகாலை 2 மணி அளவில் இந்த சம்பவம் நடைபெற்று இருக்கிறது. தெற்கு கரோலினாவில் இருக்கும் மைர்ட்டல் கடல் பகுதியில் இதன் பாகங்கள் விழுந்துள்ளன. அமெரிக்க கடலோர பாதுகாப்பு படை இந்த பாகங்களை மீட்க சென்றுள்ளது. சீனாவின் உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்திய வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த பலூனை சுட்டு வீழ்த்தும் முன் என்ன நடந்தது என்பது தொடர்பான விவரங்களும் கூட வெளியாகி உள்ளன. இந்த பலூனை சுட்டு வீழ்த்தும் முன் அதை சென்சார்கள் மூலம் ஆய்வு செய்து எப்படி தாக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். அதேபோல் அது என்ன மாதிரியான தகவல்களை சீனாவுடன் பகிர்கிறது என்றும் இடைமறித்து கண்டறிந்து உள்ளனர்.

தகவல்கள்
உள்ளே ஏதாவது ஆபத்தான வாயு, குண்டுகள் இருக்கிறதா என்று ஆய்வு செய்துள்ளனர். அதன்பின்பே இந்த பலூன் கடலுக்கு மேலே சென்றதும், அதன் மீது குண்டுகளை வீசி உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சீனா, இந்த தாக்குதல் காரணமாக நாங்கள் கடுமையாக அதிருப்தி அடைந்து உள்ளோம். இதற்கு தேவையான பதிலடியை கண்டிப்பாக கொடுப்போம். எங்கள் இறையாண்மைக்கு எதிரான தாக்குதல் இது. இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என இந்த நடவடிக்கையை சீனா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. இது மிகவும் தவறான நடவடிக்கை. அமெரிக்கா இந்த விவகாரத்தில் சர்வதேச விதிகளை மீறிவிட்டதாக சீனா குற்றஞ்சாட்டி உள்ளது.

அமெரிக்கா பதிலடி
சீனாவின் கருத்திற்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா, சீனாவின் இந்த பலூன் சிவிலியன் பலூன் கிடையாது. இந்த பலூன் சர்வதேச நடைமுறையை தெளிவாக மீறி வந்தது மற்றும் சர்வதேச வான்வெளிகளை தீவிரமாக மீறி உள்ளது. இதையடுத்தே பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டது. அமெரிக்க மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் அந்த பலூனை சுட்டு வீழ்த்தி இருக்கிறோம்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications