"இது மெட்ரோவா இல்ல பாத்ரூமா.." அன்று 2 பீஸ் பிகினி உடை.. இன்று டிரஸை கழட்டி குளியல்.. கலகல சம்பவம்
நியூயார்க்: டெல்லியில் இளம் பெண் ஒருவர் பிகினி உடையில் மெட்ரோவில் பயணித்தது டிரெண்டிங் ஆன நிலையில், அதையே தூக்கிச் சாப்பிடும் வகையிலான சம்பவம் ஒன்று இணையத்தில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது.
நகர்ப்புறங்களில் இப்போது போக்குவரத்திற்கு பெஸ்டாக இருப்பது மெட்ரோ தான். சாலைகளில் அதிகரிக்கும் போக்குவரத்தில் இருந்து தப்பிக்க மெட்ரோவே சிறந்தது என்றே மக்கள் கருதுகிறார்கள்.

அதிலும் கொளுத்தும் வெயிலுக்கு நடுவே குளுகுளுவென ஏசியில் பயணிக்கலாம் என்பது கூடுதல் போனஸ். இதுபோன்ற காரணங்களால் மெட்ரோவை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
மெட்ரோ: அதேநேரம் சமீப காலங்களால் மெட்ரோவில் பல வினோத சம்பங்களும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. சமீபத்தில் கூட பிகினி உடையில் "டெல்லி மெட்ரோ கேர்ள்" என்ற பெண் டெல்லி மெட்ரோவில் பயணிக்கும் வீடியோ இணையத்தில் டிரெண்டிங் ஆனது. இதுபோன்ற வினோத நிகழ்வுகள் டெல்லி மெட்ரோவில் மட்டும் நடப்பதில்லை. உலகெங்கும் இதேபோல தான் நடக்கிறது போல.. அப்படியொரு சம்பவம்தான் நியூயார்க் மெட்ரோவில் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
டெல்லியில் அந்த பெண் பிகினி உடையில் சென்ற வீடியோவே பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்த நபர் அந்த பெண்ணை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிட்டார். நியூயார்க் மெட்ரோவை அவர் தனது பாத்ரூம் என நினைத்துவிட்டார் போல. மெட்ரோவில் சென்று கொண்டிருந்த அவர், திடீரென ஆடைகளை ஒவ்வொன்றாகக் கழட்டிப் போட்டுவிட்டுக் குளிக்க ஆரம்பித்துவிட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

பாத்ரூம்: அந்த நபர் கையில் டிராலியுடன் டிசண்டான சர்ட் பேண்ட் உடை அணிந்து ஏறுகிறார். ஆனால், மெட்ரோ கிளம்பிய கொஞ்ச நேரத்திலேயே அந்த நபர் தனது செருப்புகள், பேன்ட் மற்றும் சட்டைகளைக் கழற்றி சீட் மேல் போட்டுவிடுகிறார். பின்னர் தனது டிராலியை ஓபன் செய்து அதில் இருக்கும் தண்ணீரை ஊற்றிக் குளிக்கத் தொடங்குகிறார். மஞ்சள் கலர் ஸ்பான்ஜை எடுத்து உடல் முழுக்க தேய்த்துக் குளிக்கத் தொடங்குகிறார். இதைப் பார்த்தும் பக்கத்தில் அமர்ந்திருந்தவர்கள் எழுந்து ஓட்டம் பிடித்துவிட்டனர்.
மெல்லக் குளித்துவிட்டு உள்ளே இருந்த துண்டை எடுத்தும் துடைத்து பின், மீண்டும் டிப்டாப்பாக தனது உடையை அணிந்து கொள்கிறார். அந்த பெட்டியில் இருந்தவர்கள் அதைப் பார்த்துச் சிரிப்பது இந்த வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. மெட்ரோ ரயிலில் திடீரென ஒருவர் ஆடைகளைக் கழற்றி குளிப்பதைக் கண்டு அங்கிருந்தவர்கள் சற்று திகைத்தே போய்விட்டார்கள். அதன் பின்னர் எதுவுமே தெரியாதது போல அடுத்த ஸ்டாப்பில் மெட்ரோவில் இருந்து இறங்கிவிடுகிறார்.
சிரிப்பலை அவர் வெளியே சென்ற மறுநொடி ஒட்டுமொத்த மெட்ரோவும் சிரிப்பில் மூழ்குகிறது. இந்த வீடியோ பேஸ்புக்கில் வேகமாகப் பரவி வருகிறது. ஒரு தரப்பினர் அவருக்கு மிகவும் "தைரியம்" என்று சொன்னாலும் கூட மற்றொரு தரப்பினர் இது முட்டாள்தனமானது என்றே விமர்சித்து வருகின்றனர். வயதானவர்கள் ஒரு சிலர் இந்த தலைமுறையைக் கண்டால் பயமாக இருக்கிறது என்றும் கூட சிலர் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த நபர் மெட்ரோவை நனைக்காமலும் மற்றவர்களுக்கு சொந்தரவு தராமல் மிகவும் கவனமாக இருந்ததையும் சிலர் பாராட்டி வருகின்றனர். இருப்பினும், லைக்ஸ் மற்றும் வீடியோ டிரெண்டிங் ஆக இந்தளவுக்குச் செல்வது ஆபத்தில் முடியும் என்றும் ஒரு தரப்பினர் சாடி வருகின்றனர். இந்த நபரின் செயலை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்.
-
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications