ஈரானை தாக்கினால் அமெரிக்கா அழியும்.. டிரம்ப்பின் உள்வட்டமே அவருக்கு எதிராக திரும்பியது.. ட்விஸ்ட்
நியூயார்க்: ஈரான் மீது போர் தொடுக்க டிரம்ப் திட்டமிட்டு வருகிறார். ஆனால் டிரம்பின் இந்த முடிவை அவரின் உள்வட்டமே எதிர்த்து வருவதாக கூறப்படுகிறது.
முதல் கட்டமாக டிரம்ப்பிற்கு நெருக்கமாக அமெரிக்காவின் உளவுத் துறை தலைவர் துளசி கப்பார்ட் இந்த போர் முடிவை எதிர்த்து உள்ளார். ஈரான் அணு ஆயுதம் உருவாக்கி வருகிறது. அந்த நாடு அணு ஆயுதத்தை உருவாக்குவதில் முக்கிய கட்டத்தை எட்டிவிட்டது, இன்னும் சில வாரங்களில் ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கும், இதனால் அவர்களை தாக்க போகிறோம் என்று டிரம்ப் கூறி இருந்தார்.

ஆனால் அமெரிக்காவின் உளவுத் துறை தலைவர் துளசி கப்பார்ட்.. ஈரான் அணு ஆராய்ச்சி செய்வது சரிதான். ஆனால் ஈரானிடம் அணு ஆயுதம் இல்லை. அந்த நாடு இப்போதைக்கு அணு ஆயுதம் உருவாக்கும் சூழல் இல்லை. இன்னும் பல வருடங்கள் ஆகலாம் அதற்கு . இப்போதைக்கு அணு ஆயுதம் உருவாக்கும் சூழல் அங்கே நிலவவில்லை என்று துளசி கப்பார்ட் எதிர்த்து உள்ளார்.
அதாவது டிரம்ப் போடும் திட்டம் தவறு.. ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் திட்டத்தில் இல்லை என்பதை துளசி காப்பர்ட் அடித்து சொல்லி இருக்கிறார்.
எதிர்க்கும் உள்வட்டம்
ஏற்கனவே எலான் மஸ்க் டிரம்ப்பை எதிர்க்கும் நிலையில், அமெரிக்காவின் பிரபல அரசியல் விமர்சகர்களும், டிரம்பின் நெருங்கிய நண்பர்களுமான ஸ்டீவ் பேனன் மற்றும் டக்கர் கார்ல்சன் ஆகியோர் இஸ்ரேல்-ஈரான் மோதல் குறித்து கடுமையான எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.
இஸ்ரேலுக்கு ஆதரவாக டிரம்ப் விடுத்த கருத்துக்களை அவர்கள் விமர்சித்துள்ளனர். அதோடு டிரம்ப் உடனடியாக டெஹ்ரானை காலி செய்யுமாறு ஈரான் நாட்டு மக்களை வலியுறுத்தினார். ஈரான் அமெரிக்காவுடன் அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்க வேண்டும். ஈரான் தவறு செய்துவிட்டது. ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளாமல் ஈரான் அலைக்கழித்தது தவறானது.
ஈரான் கைக்கு அணு குண்டு செல்ல கூடாது. அவர்கள் அணு ஆயுதத்தை வைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மீண்டும் சொல்கிறேன்.. ஈரான் தலைநகரை காலி செய்யுங்கள். உடனே ஈரான் தலைநகரை விட்டு வெளியேறுங்கள் என்றும் அவர் மீண்டும் தெரிவித்தார்.
டிரம்பின் இந்த கருத்தை டக்கர் கார்ல்சன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இந்த மோதல் தொடங்கியதில் இருந்து, கார்ல்சன் மற்றும் பேனன் அமெரிக்காவின் ஈடுபாட்டை விமர்சித்து வருகின்றனர். War Room என்ற போட்காஸ்டில் பேசிய கார்ல்சன், எனக்கு டிரம்ப் மீது உண்மையான அன்பு உள்ளது. அவர் மிகவும் இரக்கமுள்ள, கனிவான நபர். இதை நான் சொல்வதற்குக் காரணம், என் நாடு இதனால் மேலும் பலவீனமடையும் என்று நான் அஞ்சுகிறேன்.
ஈரானை அமெரிக்கா தாக்கினால்.. இஸ்ரேல் போரில் அமெரிக்கா தலையிட்டால் அது நம்முடைய வீழ்ச்சியாக மாறும். இதன் அமெரிக்க சாம்ராஜ்யத்தின் முடிவு விரைவில் வரும் என்று நினைக்கிறேன். மற்ற நாடுகள் அதை விரும்புகின்றன. ஈரானின் காரணமாக அமெரிக்கா பலவீனமடைய இது வழியாக அமைந்து விடும். இது டிரம்பின் அதிபர் பதவியையும் முடிவுக்குக் கொண்டுவரும்.. அமெரிக்காவின் முடிவு.. டிரம்பின் முடிவு இதன் மூலம் நடக்கும், என்றார்.
ஈரான் மீது போர் தொடுக்க டிரம்ப் திட்டமிட்டு வருகிறார். ஆனால் டிரம்பின் இந்த முடிவை அவரின் உள்வட்டமே எதிர்த்து வருவதாக கூறப்படுகிறது.
-
குட்டையை குழப்பிய இஸ்ரேல்.. செங்கடலில் உச்சக்கட்ட பதற்றம்! போர் இப்போதைக்கு முடியாது போல! -
இஸ்ரேல் கப்பலை கண்டதும் சுட உத்தரவு.. பாப் அல்-மன்டெப் கண்ட்ரோலில் எடுக்கும் ஹவுதி! -
ஹார்முஸ், பாப் அல்-மண்டெப் இரண்டையும் மூடிய ஈரான்..? மொத்த வர்த்தகமும் முடக்கம்.. உலக நாடுகள் ஷாக் -
ஹார்முஸ் மூடினாலும் கவலையில்லை! பேக்கப் இருக்கு.. 'worst-case' வந்தால்.. ஹர்தீப் சிங் பூரி சொன்ன பதில்! -
டிரம்ப் எச்சரிக்கையை மதிக்காத இஸ்ரேல்.. ஈரான் மீது சரமாரி அட்டாக்.. அமைதி பேச்சுவார்த்தை உடைகிறதா? -
நள்ளிரவில் மீண்டும் வெடித்த போர்.. இஸ்ரேல் மீது ஈரான் சரமாரி ஏவுகணை தாக்குதல்.. போர் நிறுத்தம் காலி? -
இஸ்ரேல் - ஈரான் இடையில் திடீர் போர் நிறுத்தம்! பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அதிரடி அறிவிப்பு! -
ஈரானுக்கு பயணம் வேண்டாம்.. அங்குள்ள இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள்.. மத்திய அரசு அவசர அறிவுறுத்தல் -
ஈரான் கொடுத்த கடைசி வார்னிங்.. இஸ்ரேல் செயலால் ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளும் பீதி! -
டொனால்ட் டிரம்ப் 'நான்தான் பாஸ்'.. டிரம்ப் சொல்லியும் கேட்காத இஸ்ரேல் நெதன்யாகு.. புதிய தலைவலி! -
ஈரானின் சர்ப்ரைஸ் தாக்குதல்.. ஆடிப்போன இஸ்ரேல் கொடுத்த பதிலடி.. 3 நகரங்களில் மக்கள் அலறல்! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து












Click it and Unblock the Notifications