10 நாடுகள்.. ஒவ்வொன்றும் பலே நாடுகள்! அடுத்தடுத்து மூளும் போர்கள்! உருவாகும் புதிய வேர்ல்டு ஆர்டர்?
நியூயார்க்: உலகப்போருக்கான வாய்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. போர் தொடங்குவதற்கான சதவிகிதம் புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக உலக அரசியல் வல்லுனர்கள் எச்சரிக்க தொடங்கி உள்ளனர். இதன் காரணமாக... உலக அளவில் புதிய வேர்ல்டு ஆர்டர் உருவாகும் வாய்ப்புகளும் உள்ளன.
வேர்ல்டு ஆர்டர் என்பது தற்போது இருக்கும் உலக நிலை. அதாவது.. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளின் ஆதிக்கம்., ஆசியாவில் சீனா - இந்தியாவின் வலிமை, சீனா - ரஷ்யாவின் நட்பு இதை எல்லாம் வேர்ல்டு ஆர்டர் என்பார்கள். இப்பொது திடீரென ரஷ்யா - சீனா வைத்ததே உலகில் சட்டம்.. இங்கிலாந்து - அமெரிக்கா - ஆஸ்திரேலியா எல்லாம் எதுவும் செய்ய முடியாது என்ற சூழல் வந்தால் எப்படி இருக்கும். இது போன்ற மாற்றங்களைத்தான் வேர்ல்டு ஆர்டர் மாற்றம் என்பார்கள். இதுதான் உலகப்போர் மூலம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக உலக அரசியல் வல்லுனர்கள் எச்சரித்து உள்ளனர்.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனிய போராளிக் குழுக்களுக்கும் இடையே நடக்கும் போர், இப்போது நடக்கும் இஸ்ரேல் - ஈரான் - லெபனான் போர், உக்ரைன் ரஷ்யா போர், தென் கொரியா வடகொரியா போர் காரணமாக உலகப் போர் மூளும் அபாயங்கள் ஏற்பட்டு உள்ளன.. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 35 சதவீதமாக இருந்த ஒரு முழு உலகப் போருக்கான வாய்ப்புகளை 50 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று அமெரிக்க பில்லியனர் மற்றும் ஹெட்ஜ் நிதி வழிகாட்டியான ரே டாலியோ தெரிவித்துள்ளார்.
இந்தப் போர் பல நாடுகளில் பல்வேறு வகையான மோதல்களுக்கு வழிவகுக்கும் அதிக ஆபத்து உள்ளது, மேலும் இது இஸ்ரேல் மற்றும் காசாவில் உள்ளவர்களுக்கும் அப்பால் போரை உருவாக்கும் வாய்ப்புகள் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.. இதில் போருக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. முக்கியமாக சிறிய உலகபோராக இல்லாமல் இது பெரிய உலகபோராக மாறலாம். பல வல்லரசு நாடுகள் கூட இதில் கலந்து கொள்ளும் அபாயம் உள்ளது.
கொரியா போர்: வட கொரியாவில் இருந்து தென்கொரியாவிற்கு சொந்தமான தீவில் திடீரென பீரங்கி தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. 200 க்கும் மேற்பட்ட பீரங்கி குண்டுகளை வீசி வடகொரியா தாக்குதல் நடத்தி உள்ளது என்று சியோலின் பாதுகாப்பு அமைச்சகம் கூறி உள்ளது. இந்த நடவடிக்கைகள் அமைதிக்கு அச்சுறுத்தல் விளைவிப்பதாக இருப்பதாகவும் அதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் தென்கொரியா கூறி உள்ளது. .
தென் கொரியாவிற்கு சொந்தமான Baengnyeong தீவின் வடக்கு பகுதிகள் மற்றும் Yeonpyeong தீவு ஆகிய இரண்டு தீவுகளில் இந்த தாக்குதல் வடகொரியா மூலம் நடத்தப்பட்டு உள்ளது.

2010 ஆம் ஆண்டில் இருந்தே இந்த தீவுகளில் பதற்றம் நிலவி வருகிறது. 2010ல் இந்த தீவுகளின் மீது வடகொரியா சரமாரியாக குண்டுகள் வீசியதில் இருந்து இரு கொரியாக்களுக்கும் இடையே அங்கே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதை சுற்றி உள்ள கடல் பகுதிகளில் மிகத் தீவிரமான இராணுவ பாதுகாப்பு போடப்பட்டு கடந்த 13 ஆண்டுகளாக போர் எதுவும் நடக்காமல் பதற்றமான சூழ்நிலை நிலவி வந்தது.
இந்த நிலையில்தான் அங்கே திடீரென வடகொரியா பீரங்கி தாக்குதல் நடத்தி உள்ளது. தென் கொரியா மற்றும் அதன் அமெரிக்க நட்பு நாடுகளுக்கு எதிரான போருக்கு தயாராக இருப்பதாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் கடந்த சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்து இருந்தார். இந்த எச்சரிக்கையை தொடர்ந்தே தற்போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
தென்கொரியாவிற்கும் வடகொரியாவிற்கும் இடையிலான பிரச்சனை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த சில வருடம் முன்புதான் இரண்டு நாட்டு அதிபர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள், இரண்டு நாட்டு அதிபர்களும் ஒன்றாக எல்லைகளை கடந்து நட்பை வெளிப்படுத்தினார்கள்.
ஆனால் தற்போது கடந்த ஒரு மாதமாக வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே மிக தீவிரமாக சண்டை நடந்து வருகிறது. இப்போது இந்த பிரச்சனை போராக மாற வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.
உக்ரைன் - ரஷ்யா, இஸ்ரேல் - பாலஸ்தீன போர்; போர் எல்லை மீறி சென்று கொண்டு இருக்கிறது. முழுமுதற் போராக மாறும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. ஒரு முழுமையான உலகப் போரின் முதன்மையான ஆபத்து பற்றி கேட்டால் அமெரிக்காவும் சீனாவும் நேரடி மோதலில் ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறு என்றுதான் சொல்வேன். இந்த இரண்டு இரண்டு நாடுகள் நேரடியாக போரில் ஈடுபட்டால் கண்டிப்பாக இது உலகப்போராக மாறும். ஆனால் இப்போதைக்கு சீனா இதில் நேரடியாக மூக்கை நுழைக்கவில்லை.

ஆனால் அது நடக்கும் பட்சத்தில் கண்டிப்பாக போர் கையை மீறி போகும் வாய்ப்புகள் உள்ளன. இந்த இரண்டு போர்களும் (இஸ்ரேல்-ஹமாஸ் போர் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர்) நேரடியாக ஈடுபட்டுள்ள நாடுகளுக்கு இடையே மட்டும் இல்லை என்பதை நாம் உணர வேண்டும் - இந்தப் போர்கள் புதிய உலக ஆர்டரை உருவாக்கும் போராக மாற போகிறது. அவை பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். இந்த இரண்டு போர்களும் போரில் ஈடுபட்டு உள்ள நாடுகளின் நட்பு நாடுகளுக்கும் நிறைய பாதிப்பை ஏற்படுத்தும், என்று எச்சரித்து உள்ளார்.
இஸ்ரேல் - பாலஸ்தீன போர்: இப்படிப்பட்ட நிலையில்தான் ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. பதிலுக்கு இஸ்ரேல் லெபனானை தாக்கி வருகிறது. ஈரான் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதல் என்பது சாதாரண தாக்குதல் கிடையாது. இஸ்ரேலின் ஆணிவேரையே அசைத்து பார்த்த தாக்குதல். நாங்கள் 99% ஏவுகணைகளை மறித்துவிட்டோம்.. ஈரான் எங்களுக்கு சேதங்களை ஏற்படுத்தவில்லை என்று இஸ்ரேல் கூறலாம். ஆனால் ஈரானின் 80% ஏவுகணைகளை இஸ்ரேலில் இலக்கை தாக்கி உள்ளதாகவே உலக போர் வல்லுனர்கள் கூறுகின்றனர். இதற்கெல்லாம் கண்டிப்பாக இஸ்ரேல் பதிலடி கொடுக்கும்.. அந்த பதிலடி போரை கூட உருவாக்கும். ஏற்கனவே பல நாடுகள் போரில் ஈடுபட்டு வரும் நிலையில்.. இஸ்ரேலின் பதிலடி வெறும் போரை மட்டும் உருவாக்காது.. அது உலகப்போரையே உருவாக்கும்.
இஸ்ரேல், பாலஸ்தீனம், லெபனான், ஈராக், எகிப்து, சிரியா, அமெரிக்கா, சவுதி அரேபியா ஆகிய நாடுகள் போரில் நேரடியாக தலையிட்டு உள்ளன. லெபனான், ஈராக், எகிப்து, சிரியா பாலஸ்தீனம் பக்கம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மொத்தமாக இரண்டு போர்களையும் கணக்கிட்டால் 10 நாடுகள் போரில் ஈடுபட்டு வருகின்றன. இதில் ரஷ்யா, சீனாவும் தலையிட்டு உள்ளது. இதெல்லாம் உலகப்போரை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications