5 பெட்ரூம் இருக்கு.. இத்தனை விசாலமான வீட்டில் காதலன் இல்லை! 60 நாட்கள் இலவசம்.. பெண்ணின் விளம்பரம்
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த பெண் ஒருவர் விளம்பர இணையதளத்தில் ஆண் காதலன் தேவை என விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விளம்பரங்களில் எத்தனையோ பார்த்திருக்கிறோம். பூனையை காணவில்லை, நாயை காணவில்லை, நாய்க்கு பிறந்தநாள், நாய்க்கு வளைகாப்பு என எத்தனையே விளம்பரங்களை பார்த்துள்ளோம். அது போல் ரியல் எஸ்டேட், வீடு வாடகைக்கு போன்ற விளம்பரங்களிலும் வித்தியாசம் இருந்தது.

உதாரணமாக பெங்களூரில் கிட்னி விற்பனைக்கு என ஒருவர் போஸ்டர் ஒட்டி பிறகு சும்மா டமாஷ் செய்தேன், இந்திரா நகரில் வீடு வாடகைக்கு தேடி களைத்துவிட்டேன். ஓனர்கள் லட்சக்கணக்கில் அட்வான்ஸ் கேட்கிறார்கள்.
நாளை வீட்டு வாடகை செலுத்த கிட்னியையும் விற்பனை செய்யலாம் என்பதால் அவ்வாாறு விளம்பரம் செய்தேன் என தெரிவித்திருந்தார். அந்த வகையில் அமெரிக்காவில் விளம்பர இணையதளத்தில் ஒரு வித்தியாசமான விளம்பரம் வந்தது. அந்த இணையதளமானது அமெரிக்காவை சேர்ந்த ரியல் எஸ்டேட் பக்கமாகும்.
அந்த பெண் வெளியிட்டுள்ள விளம்பரத்தில் ஹூஸ்டனின் புறநகர்ப் பகுதியான ஆங்கிள்டன்னில் எனக்கு ஒரு அழகான வீடு உள்ளது. 5 படுக்கை அறைகள் கொண்டுள்ளது. அது பெரியதாக இருக்கும். இத்தனை பெரிய வீடு இருக்கிறது. ஆனால் என்னுடன் வாழ்வதற்கு ஒரு ஆண் காதலன் வேண்டும்.

அந்த ஆண் காதலன் மீது குற்றப்பின்னணி இருக்கக் கூடாது. பூனைகளை நேசிப்பவராக இருத்தல் வேண்டும். முதல் 60 நாட்களுக்கு இலவசம். நான் ஒரு தடகள வீரர். அதற்காக நான் மோசமான தோற்றத்தில் இருக்க மாட்டேன். எனது எடையில் சில ஏற்றங்கள் இறக்கங்கள் இருக்கும். எனக்கு திருமணமாகி 13,15 வயதில் குழந்தைகள் இருக்கிறார்கள்.
அவர்கள் இருவரும் தந்தையுடன் வசிக்கிறார்கள். நான தனியாக 5 பெட்ரூம் கொண்ட வீட்டில் இருந்து வருகிறேன். விவாகரத்திற்கு பிறகு யாரையும் சந்திக்கவில்லை. எனது பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருக்கும் இத்தாலிய இஸ்ரேலிய அல்லது யூதர்களிடம் நான் எவ்வளவு ஈர்க்கப்பட்டேன் என்பதை உணர்ந்திருக்கிறேன். அதனால் கிறிஸ்துவ ஆண் நண்பரோ அல்லது காதலரோ தேவை என நினைக்கிறேன் என அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications