மோசமில்லை.. டெல்டாதான் ஆபத்து.. ஒமிக்ரான் நுரையீரலை பெரிதாக பாதிக்காதாம்.. பரபரப்பு ஆய்வு
ஒமிக்ரான் நுரையீரலை எந்த அளவுக்கு பாதிக்கும் என்ற ஆய்வு வெளியாகி உள்ளது
நியூயார்க்: உலகை உலுக்கி வரும் ஒமிக்ரோன் வைரஸ், டெல்டா வகை வைரஸ்களை விட அதிவேகமாக பரவக்கூடியது என்றாலும் நுரையீரலை அதிகமாக பாதித்து விடாது.. அதாவது டெல்டா அளவுக்கு பாதிக்காது என்று ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் இப்போது வரை உலக நாடுகளை உலுக்கி வருகிறது... உருமாறிய புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவுக்குள்ளும் பல்வேறு நாடுகளுக்கும் ஊடுருவி விட்டது..
மிககுறைந்த நாட்களிலேயே நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. அத்துடன் உயிரிழப்பையும் தந்து வருகிறது.

மருத்துவர்கள்
அதனால், ஆய்வாளர்களும், மருத்துவர்களும், ஒமிக்ரான் குறித்த ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தினம் தினம் ஒமிக்ரான் பாதிப்பு குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.. ஏற்கனவே டெல்டா போன்ற வைரஸ்களை ஒப்பிடும்போது ஒமிக்ரான் வைரஸ் குறைவான பாதிப்பையே ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் தரப்பில் சொல்லப்பட்டிருந்தது.

அமெரிக்கா
இதையடுத்து, சில தினங்களுக்கு முன்பு, ஜப்பான், அமெரிக்காவை சேர்ந்த நிபுணர்கள் ஒமிக்ரான் வைரஸ் தொடர்பில் ஆராய்வதற்காக எலியின் மீது சோதனை நடத்தினர்.. இதன் ஆய்வுகளில் ஒமிக்ரான் குறைவான சேதம் விளைவிக்கும் நோய்த்தொற்றுகளை உருவாக்கியது, ஆனால், பெரும்பாலும் மூக்கு, தொண்டை, மூச்சுக்குழாய் என்று மேல் சுவாசக்குழாய்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தியது.. ஒமிக்ரான் நோயால் பாதிக்கப்பட்ட எலிகளில், நுரையீரல் பாதிப்பு குறைவாக இருந்ததும், அதற்கு இறக்கும் வாய்ப்பு குறைவு என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டிருந்தது.

நுரையீரல்
கொரோனா வைரஸ் தொற்று மூக்கில் அல்லது வாயில் தொடங்கி தொண்டை வரை பரவுகிறது... லேசான நோய்த்தொற்றுகள் அதற்கு மேல் வராது... ஆனால் கொரோனா வைரஸ் நுரையீரலை அடையும் போது, அது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்கள்.. நுரையீரலில் உள்ள நோய் எதிர்ப்பு செல்கள் மிகைப்படுத்தி, பாதிக்கப்பட்ட செல்களை மட்டுமல்ல, பாதிக்கப்படாத செல்களையும் கொல்லுமாம்.. மேலும், வைரஸ்கள் சேதமடைந்த நுரையீரலில் இருந்து ரத்த ஓட்டத்தில் வெளியேறி, ரத்தக் கட்டிகளை தூண்டி மற்ற உறுப்புகளை நாசமாக்கும் என்றும் அந்த ஆய்வு கூறியது.

மூச்சுக்குழாய்
அதுபோலவே, ஹாங்காங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு, மனித சுவாசப்பாதையில் டெல்டாவை விட 70 மடங்கு வேகமாக ஓமிக்ரான் பிரதிபலிப்பை கண்டறிந்திருக்கிறது.. டெல்டா மற்றும் கொரோனா வைரஸ் இரண்டையும் ஒப்பிடும்போது, ஓமிக்ரான் மாறுபாடு மேல் சுவாசப்பாதைகள் மற்றும் நுரையீரல் வழியாக செல்லும் மூச்சுக்குழாய் அல்லது குழாய்களுக்குள் நுழைவதில் மிக விரைவாக இருந்தது தெரியவந்தது.. ஒமிக்ரான் மாறுபாடு, அசல் SARS-CoV-2 வைரஸை காட்டிலும், நுரையீரல் திசுக்களுக்குள் ஒருமுறை குறைவான செயல்திறன், 10 மடங்கு குறைவாக நோயின் தீவிரத்தன்மையை குறைக்கும்.

மாதிரிகள்
12 நுரையீரல் மாதிரிகளில் மேற்கொண்ட ஆய்வு கொரோனாவின் முந்தைய உருமாற்றங்களை காட்டிலும் ஒமிக்ரானின் பரவல் மெதுவாக இருப்பது தெரிய வந்துள்ளது. ஒமிக்ரான் நுரையீரலின் கீழ்ப்பகுதியில் அதிகமாக பாதிக்காததால் அதிக உயிரிழப்புகளை ஏற்படாது என்று நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்... எலிகளின் மீதான ஆய்வில் ஒமிக்ரானின் பாதிப்பு அறிகுறிகள் குறைவாக இருப்பதும் தெரிய வந்துள்ளது...

மைக்கேல் சாங்
இருப்பினும், ஹாங்காங் பல்கலைக்கழக ஆராய்ச்சிக்குழுவின் தலைவரான ஆய்வில் மைக்கேல் சாங் சொல்வது என்னவென்றால், ஒமிக்ரான் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.. ஒமிக்ரான், மனிதனுக்கு நோயை அதிகமாக பரப்புவது மட்டுமே பெரிய விஷயம் இல்லை.. இதற்கு அடுத்தாற்போல் நோய்த் தொற்று உருமாறி வேரியண்ட்டாக மாறி, அது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை கணிக்க முடியாது.. அதில்தான் நாம் கவனமாக இருக்க வேண்டும்.. ஒமைக்ரான் ஆரோக்கியமான செல்களையும் தாக்கக்கூடியது..
Recommended Video

மரணம்
நுரையீரல் தொற்று மோசமாக இல்லை என்றாலும், ஒமிக்ரான் வேகமாக பரவி, கடுமையான நோயையும், மரணத்தையும் ஏற்படுத்தக்கூடும்..TMPRSS2 எனப்படும் நுரையீரல் உயிரணுக்களில் காணப்படும் புரதத்தின்மூலம், முன்பு இருந்த டெல்டாவும், முதன்முதலில் காணப்பட்ட கொரோனாவும் எளிதாக நுழைந்துவிட்டிருந்தது.. ஆனால், ஒமிக்ரான் சுவாசக்குழாய்களில் வாய், மூக்கு, தொண்டை போன்ற பகுதிகளில் அதிகமாக குவியும்.. பாதிப்பையும் ஏற்படுத்தும்.. ஆனால் நுரையீரலுக்குள் ஊடுருவி கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தாது" என்கிறார்.. நுரையீரலை ஒமிக்ரான் பெரிதாக தாக்காது என்ற தற்போதைய ஆய்வு பொதுமக்களுக்கு ஓரளவு நிம்மதியை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications