டிரம்ப் vs கமலா.. ஆதரவு யாருக்கு? காரணத்துடன் சப்போர்ட் செய்யும் அமெரிக்கர்கள்!
நியூயார்க்: அமெரிக்காவில் அடுத்த மாதம் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது கேள்வி குறியாகியுள்ளது. இந்நிலையில், தங்களின் அதரவு யாருக்கு? என்பது குறித்து oneindiaவுக்கு அமெரிக்கர்கள் பேட்டியளித்துள்ளனர்.
சர்வாதிகார நாடாக அமெரிக்கா கருதப்பட்டாலும், அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான தேர்தலில் முன்னாள் அதிபர் டிரம்ப் குடியரசுக்கட்சி சார்பிலும், ஜனநாயகக்கட்சி சார்பில் ஜோ பைடனும் களமிறங்குவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், உடல்நலக்குறைவு காரணமாக பைடன் போட்டியிலிருந்து விலகிக்கொண்டார். அவருக்கு பதிலாக தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்னர் டிரம்புக்குதான் அதிக ஆதரவு இருந்தது. ஆனால், தற்போது கமலா ஹாரிசுக்கு ஆதரவு எகிறி வருகிறது. ஏன் கமலாவுக்கு அதரவு? காரணம் என்ன? உள்ளிட்ட விவரங்களுடன் அமெரிக்கர்கள் நமது சிறப்பு நிருபருக்கு பேட்டியளித்துள்ளனர்.
வாஷிங்டன் டிசி பகுதியில் oneindia ரிப்போர்ட்டர் ப்ரேண சாண்டில்யாவுக்கு அமெரிக்கர்கள் அளித்த பேட்டியில், பலர் கமலா ஹாரிஸுக்கு அதரவளிப்பதாகவும், சிலர் டிரம்புக்கு ஆதரவளிப்பதாகவும் கூறியுள்ளனர்.
கமலாவுக்கு ஆதரவளித்தவர்கள், அவரின் கொள்கைகள் பிடித்திருப்பதாகவும், இப்போது இருப்பதை விட கமலா ஹாரிஸின் 4 ஆண்டுகள் ஆட்சி காலத்தில் வாழ்வாதாரம் மேலும் சிறப்பாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர். தவிர, கருகலைப்பு சட்டத்தை மீண்டும் அமல்படுத்துவார் என்றும், புதிய வேலை வாய்ப்புகளையும், பன்முகத்தன்மையையும், எல்லை பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பார் எனவும் தெரிவித்துள்ளனர்.
மிக முக்கியமாக கமலா அதிபாரானால் அமெரிக்காவுக்கு முதல் பெண் அதிபர் கிடைப்பார் என்றும், கார்ப்ரேட் நிறுவனங்களில் பெண்களுக்கு எதிராக பின்பற்றப்படும் ஒரு பக்க சார்பை கமலா ஒழிப்பார் என்பதால் ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளனர். அதேபோல துணை அதிபராக இருந்த காலத்தில் கமலா சிறப்பாக பணியாற்றியிருக்கிறார் என்றும் கூறியுள்ளனர்.
மறுபுறம் டிரம்புக்கு ஆதரவளிப்பதாக கூறியவர்கள், பெரிய அளவில் காரணங்கள் எதையும் கூறவில்லை. இந்த பேட்டியின்போது, ஒருநாள் நீங்கள் அதிபரானால் என்ன செய்வீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்கர்கள், வீடற்றவர்களின் பிரச்னை பிரதானமாக இருப்பதாகவும், அதை சரி செய்யவும், போர்களை நிறுத்தவும் முயற்சிப்பேன் என்றும் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications