Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

97வது ஆஸ்கர் அகாடமி விருதுகள் LIVE: ஆஸ்கர்களை தட்டித் தூக்கிய அனோரா, தி ப்ரூட்டலிஸ்ட் படங்கள்!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: ஆஸ்கர் விருதுகள் என்று அழைக்கப்படும் 97வது அகாடமி விருதுகள் விழா இன்று லாஸ் ஏஞ்சல்ஸ் ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற்றது. 2024 இல் வெளியிடப்பட்ட திரைப்படங்களை கௌரவிக்கும் வகையில் 23 பிரிவுகளில் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 5 விருதுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளது 'அனோரா’ திரைப்படம்

நகைச்சுவை நடிகரும் பாட்காஸ்டருமான கோனன் ஓ'பிரைன் முதல் முறையாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்தியரான ராஜ் கபூர் மற்றும் கேட்டி முல்லன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியை தயாரித்தனர். இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணியில் இருந்து இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டன.

கடந்த ஜனவரி 23, 2025 அன்று பெவர்லி ஹில்ஸில் உள்ள சாமுவேல் கோல்ட்வின் திரையரங்கில் இந்த விருதுக்கான பரிந்துரைகள் அறிவிக்கப்பட்டன. அனோரா, தி ப்ரூடலிஸ்ட், தி கம்ப்ளீட் அன்னோன் கான்க்ளேவ், டூன்: பார்ட் 2, எமிலியா பெரெஸ், அயம் ஸ்டில் ஹியர், நிக்கல் பாய்ஸ், தி சப்ஸ்டன்ட், விக்கட் ஹாலிவுட்டில் இருந்து ஆகிய படங்கள் இந்த முறை விருதிற்காக பரிந்துரைக்கப்பட்டு இருந்தன.

Emilia Pérez என்ற பிரென்ச் படம் 10 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு அதிக விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆங்கிலம் அல்லாத வேற்றுமொழிப்படம் என்ற சாதனையை படைத்திருந்தது. எனினும், இறுதியில் அனோரா திரைப்படம் 5 ஆஸ்கர் விருதுகளை அள்ளி அசத்தியுள்ளது.

Oscars 2025                     2025

Mar 03, 2025, 10:26 am IST

இன அழிப்புக்கு எதிரான குரல்

No Other Land என்ற குறும்படம் சிறந்த ஆவணக் குறும்படத்துக்கான விருதைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தினை இயக்கிய இயக்குநர்கள், பாலஸ்தீன மக்கள் மீதான இன அழிப்பை நிறுத்த வேண்டும், காசா போருக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
Mar 03, 2025, 10:19 am IST

THE ONLY GIRL IN THE ORCHESTRA சிறந்த ஆவணப்பட குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்ற மோலி ஓ'பிரையன் மற்றும் லிசா ரெமிங்டன் 97வது ஆஸ்கர் விழாவில் கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Mar 03, 2025, 9:47 am IST

97வது ஆஸ்கர் அகாடமி விருதுகள் LIVE: ஆஸ்கர்களை அள்ளிய 'அனோரா'.. ஷான் பேக்கருக்கு 3 விருது!
Mar 03, 2025, 9:21 am IST

ஆஸ்கர் விருதுகளை அள்ளிய அனோரா!

<h2>ஆஸ்கர் விருதுகளை அள்ளிய அனோரா!</h2>
சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருதை தட்டித் தூக்கியது அனோரா திரைப்படம். அனோரா படத்திற்கு தற்போது வரை 5 ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
Mar 03, 2025, 9:20 am IST

3 விருதுகளை வென்ற ஷான் பேக்கர்

சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை ‘அனோரா’ திரைப்படத்திற்காக வென்றுள்ளார் ஷான் பேக்கர். ஷான் பேக்கர், ‘அனோரா’ படத்திற்காக சிறந்த அசல் திரைக்கதை, எடிட்டிங் ஆகிய பிரிவுகளிலும் ஆஸ்கர் விருதுகளை அள்ளியுள்ளார்.
Mar 03, 2025, 9:20 am IST

சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளார் மிக்கி மேடிசன். ‘அனோரா’ திரைப்படத்தில் நடித்ததற்காக அவர் ஆஸ்கர் வென்றுள்ளார்.
Mar 03, 2025, 8:58 am IST

ஆஸ்கரில் கடும் போட்டி

இதுவரை அனோரா, தி புரூட்டலிஸ்ட், டியூன் - பார்ட் டூ, எமிலியா பெரஸ், Wicked ஆகிய 5 திரைப்படங்கள் தலா 2 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளன.
Mar 03, 2025, 8:58 am IST

சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது அட்ரியன் பிராடிக்கு வழங்கப்பட்டது. THE BRUTALIST படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார் அட்ரியன் ப்ராடி.
Mar 03, 2025, 8:49 am IST

இந்த ஆண்டின் சிறந்த இசைக்கான (Original Score) ஆஸ்கர் விருதை THE BRUTALIST படத்திற்காக வென்றார் டேனியல் ப்ளம்பெர்க்.
Mar 03, 2025, 8:32 am IST

சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை பிரேசில் தட்டிச் சென்றது. வால்டர் சால்ஸ் இயக்கிய I'M STILL HERE படத்திற்கு சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.
Mar 03, 2025, 8:31 am IST

THE BRUTALIST படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆஸ்கர் விருதை வென்றார் லோல் கிராலி.
Mar 03, 2025, 8:19 am IST

சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது, “I’M NOT A ROBOT” குறும்படம்
Mar 03, 2025, 8:18 am IST

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸிற்கான ஆஸ்கர் விருதை வென்றது ‘டியூன் - பார்ட் 2’ திரைப்படம்.
Mar 03, 2025, 8:16 am IST

சிறந்த ஒலிப்பதிவுக்கான ஆஸ்கர் விருதை வென்றது ‘பார்ட் 2’ திரைப்படம்.
Mar 03, 2025, 7:51 am IST

சிறந்த ஆவணப்படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்றது No Other Land ஆவணப்படம். இந்த ஆவணப்படம் பாலஸ்தீன - இஸ்ரேல் போரை அடிப்படையாகக் கொண்டது.
Mar 03, 2025, 7:49 am IST

சிறந்த ஆவண குறும்படத்துக்கான ஆஸ்கர் விருதை The Only Girl In The Orchestra குறும்படம் வென்றது.
Mar 03, 2025, 7:39 am IST

எமிலியா பெரஸ் படத்துக்கு 2வது விருது!

எமிலியா பெரஸ் திரைப்படத்தின் 'எல் மால்' பாடலுக்காக கிளெமென்ட் டுகோல், கேமில் மற்றும் ஜாக் ஆடியார்ட் ஆகியோர் சிறந்த பாடலுக்கான ஆஸ்கார் விருதை வென்றுள்ளனர்.
Mar 03, 2025, 7:31 am IST

சிறந்த தயாரிப்புக்கான ஆஸ்கர் விருதை Wicked திரைப்படம் வென்றது.
Mar 03, 2025, 7:26 am IST

எமிலியா பெரஸ் படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றூள்ளார் நடிகை ஜோ சல்டானா. 13 பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்ட எமிலியா பெரஸ் படத்துக்கு முதல் விருது வழங்கப்பட்டுள்ளது.
Mar 03, 2025, 7:14 am IST

சிறந்த படத்தொகுப்புக்கான ஆஸ்கர் விருதை வென்றது ‘அனோரா’ திரைப்படம். சிறந்த எடிட்டிங்கிற்கான விருதை அனோரா படத்தின் எடிட்டர் ஷான் பேக்கர் பெற்றுள்ளார்.
Mar 03, 2025, 7:03 am IST

சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது THE SUBSTANCE திரைப்படம். பியர்-ஒலிவியர் பெர்சின், ஸ்டெஃபனி கில்லன் மற்றும் மர்லின் ஸ்கார்செலி ஆகியோர் ஆஸ்கர் விருதை வென்றுள்ளனர்.
Mar 03, 2025, 6:55 am IST

சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை CONCLAVE திரைப்படம் வென்றது. இப்படத்தின் திரைக்கதைக்காக பீட்டர் ஸ்ட்ராகனுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.
Mar 03, 2025, 6:50 am IST

உணர்ச்சி பொங்கப் பேசிய பால் டேஸ்வெல்

<h2>உணர்ச்சி பொங்கப் பேசிய பால் டேஸ்வெல்</h2>
சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதை Wicked படத்தின் ஆடை வடிவமைப்பாளர் பால் டேஸ்வெல் உணர்ச்சிபொங்கப் பேசினர். “ஆஸ்கர் விருதை வெல்லும் முதல் கறுப்பின மனிதன் நான் தான்” என பால் டேஸ்வெல் சொன்னதும் ஒட்டுமொத்த அரங்கமும் எழுந்து நின்று கைதட்டியது.
Mar 03, 2025, 6:44 am IST

சிறந்த அசல் திரைக்கதைக்கான ஆஸ்கார் விருது பெற்றார் சீன் பேக்கர். ‘அனோரா’ திரைப்படத்துக்காக சீன் பேக்கருக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.
Mar 03, 2025, 6:34 am IST

சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதை ‘Wicked' படத்திற்காக வென்றார் பால் டேஸ்வெல்
Mar 03, 2025, 6:18 am IST

சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது IN THE SHADOW OF THE CYPRESS படத்திற்காக ஷிரின் சோஹானி மற்றும் ஹொசைன் மொலாயெமி ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
Mar 03, 2025, 6:13 am IST

சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது ‘FLOW’ அனிமேஷன் திரைப்படம்.
Mar 03, 2025, 6:11 am IST

சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார் கீரன் கல்கின். “ஏ ரியல் பெயின்’ திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றுள்ளார் கீரன் கல்கின்.
Mar 03, 2025, 6:08 am IST

பிரபல பாடகி மைலி சைரஸ், ஆஸ்கர் 2025 ரெட் கார்ப்பெட் விழாவில் ப்ளீச் செய்யப்பட்ட புருவங்களுடன் வந்து கவனம் ஈர்த்துள்ளார்.
Mar 03, 2025, 5:54 am IST

நடிகைகள் அரியானா கிராண்டே மற்றும் சிந்தியா எரிவோ 'தி விஸார்ட் ஆஃப் ஓஸ்' திரைப்படத்தின் 'சம்வேர் ஓவர் தி ரெயின்போ' பாடலுக்கு நடனமாடினர்.
READ MORE

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+