நடுவானில் மர்ம உருவங்கள்.. மிரண்டு போன விமான பயணிகள்! என்னன்னு நீங்களே பார்த்து சொல்லுங்க
நியூயார்க்: அஜர்பைஜான், தென் கொரியா விமான விபத்துக்களுக்கான காரணங்கள் குறித்த கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்காத நிலையில், தற்போது புதிய கேள்வி ஒன்று எழுந்திருக்கிறது. ஒரு பயணிகள் விமானத்தில் பயணித்த சிலர், மேகங்களுக்கு இடையே தெரிந்த விசித்திர உருவத்தை வீடியோ எடுத்திருக்கிறார்கள். இந்த வீடியோ புதிய கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
விசித்திர உருவங்கள்: பயணிகள் விமானம் ஒன்று அடர்ந்த மேகங்களுக்கு மேலே சென்று கொண்டிருக்கிறது. அந்த விமானத்தின் ஜன்னல் ஓரமாக அமர்ந்திருந்தவர்களில் ஒருவர், தனது செல்போன் மூலம் வீடியோவை எடுத்திருக்கிறார். அவருக்கே அங்கு என்ன நடக்கிறது? என்பது தெரியவில்லை. வீடியோ சோஷியல் மீடியாவில் பகிரப்படுகிறது. வீடியோவில், மேகங்களுக்கு மேல் இரண்டு பேர் நின்று கொண்டிருப்பதை போல தெரிகிறது. மனிதர்களின் வெயிட்டை தாங்கும் அளவுக்கு மேகங்களுக்கு எடை இல்லை என்பதே இந்த வீடியோ பரவலாக ஷேராக காரணம்.

யார் அவர்கள்?: நீண்ட காலமாகவே மேகங்களுக்கு நடுவே விசித்திர உயிர்கள் இருப்பதாக பேச்சு அடிபட்டு வருகிறது. இதற்கு எந்த அறிவியல் ஆதாரங்களும் இல்லை என்றாலும் கூட, அடிக்கடி வெளியாகும் வீடியோக்கள் இது குறித்த விவாதங்களை தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. சிலர் இதனை ஏலியன்கள் என்று கூட சொல்கிறார்கள். விண்வெளியில் பல புரியாத சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. சில மர்ம பொருட்களின் நடமாட்டத்திற்கு ஏலியன்கள் காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
எனவே மேகங்கள் மேல் நின்று கொண்டிருந்தது ஏலியன்களாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என பலரும் சோஷியல் மீடியாக்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தொடர் விமான விபத்துக்கள்: சமீபத்தில் நடந்த விமான விபத்துகளுக்கு இந்த ஏலியன்கள் காரணமாக இருக்கலாம் என்றும் பேசப்பட்டு வருகிறது. அதாவது அஜர்பைஜானில் இருந்து ரஷ்யாவுக்கு சென்ற பயணிகள் விமானம் ஒன்று விபத்தில் சிக்கியது. இதற்கு ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அம்சம்தான் காரணம் என்று பேசப்பட்டாலும் அதற்கான உறுதியான ஆதாரங்கள் கிடைக்கவில்லை.
அதேபோல தென் கொரியா விமான விபத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த விமானத்தில் பயணித்தவர்களில் வெறும் 2 பேர்தான் உயிர் பிழைத்துள்ளனர். விபத்துக்கு முக்கிய காரணமாக லேண்டிங் கியர் பழுது சொல்லப்படுகிறது. ஆனால், இப்படி பழுது ஏற்பட்டால் எப்படி சமாளிப்பது என்று விமானிகளுக்கு ஏற்கெனவே பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கும். அப்படி இருந்தும் இந்த விபத்து நடந்திருக்கிறது. ஆகவே இந்த விபத்துகளுக்கும் வானில் தற்போது தெரிந்த உருவங்களுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? என்கிற கோணத்தில் பலரும் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
A passenger on a commercial airline captures what appears to be multiple beings standing on cloud cover, what is going on?#theparanormalchic #alien #airline #paranormal #ufo #fyp pic.twitter.com/CARF6XFGxD
— Myra Moore- The Paranormal Chic (@t_paranorm_chic) December 30, 2024
அறிவியல் விளக்கம்: வீடியோ குறித்து ஏராளமான கருத்துக்கள் வெளியாகியிருந்தாலும், அறிவியல் இதையெல்லாம் உண்மை என்று ஏற்றுக்கொள்ளவில்லை. மேகங்களுக்கு மனித எடையை தாங்கும் சக்தி கிடையாது என்று எல்லோருக்கும் தெரியும். எனவே, மேகங்கள் மேல் மனிதர்களோ, இதர உயிர்களோ இருக்க முடியாது. அப்படியெனில் வீடியோவில் இருப்பது என்ன? என்கிற கேள்விக்கு, அது நீராவி என ஆய்வார்கள் பதில் அளித்துள்ளனர்.
நீர் ஆவியாகிதான் மேகமாக மாறுகிறது. இந்த மாற்றங்களின்போது சில இடங்களில் மேகங்களில் உள்ள நீர் ஆவியாகி மேலும் உயரமாக செல்லும். இது விமானத்திலிருந்து பார்ப்பதற்கு மனிதர்களை போல தெரிந்திருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? மேகங்களுக்கு மேலே தெரிந்தது ஏலியனா? நீராவியா?












Click it and Unblock the Notifications