"என்னன்னே தெரியல.. குழப்பமா இருக்கு".. 144 "யுஎப்ஓ" குறித்து அமெரிக்கா பகீர் ரிப்போர்ட்.. ஏலியனா?
சென்னை: கடந்த 2 வருடங்களில் மக்கள் வானில் பார்த்த 144 யுஎப்ஓக்கள் குறித்து பென்டகன் முக்கிய ஆராய்ச்சி ரிப்போர்ட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
உலகம் முழுக்க யுஎப்ஓ எனப்படும் அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுகள், பறக்கும் சாதனங்கள் குறித்து மக்கள் பலர் புகார் வைப்பது உண்டு. வித்தியாசமான பறக்கும் தட்டுக்களை பார்த்ததாக மக்கள் பலர் புகார் வைப்பது உண்டு.
அமெரிக்காவில் இது குறித்து பலர் புகார் வைத்து இருந்தாலும் கூட, கடந்த வருடம் வரை அமெரிக்கா இந்த யுஎப்ஓ குறித்து அதிகாரபூர்வமாக எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த தட்டுகளை மக்கள் பார்த்ததை மறுத்து வந்த அமெரிக்கா கடந்த வருடம் இப்படி தட்டுகள் பறந்தது உண்மைதான் என்றது.

பென்டகன்
இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் அதிகாரபூர்வமாக வீடியோ வெளியிட்டு, யுஎஃப்ஓ (பறக்கும் தட்டு) குறித்த வீடியோக்களை பகிர்ந்தது. இந்த வீடியோவில் பறக்கும் தட்டு போன்ற ஒரு சாதனம் கருப்பு நிறத்தில் சென்று கொண்டு இருக்கிறது. முதலில் மிக மெதுவாக செல்லும் இந்த சாதனம் சில நிமிடத்தில் மிக வேகமாக பறந்து மறைந்துள்ளது. யுஎஃப்ஓ எனப்படும் அடையாளப்படுத்த முடியாத பறக்கும் பொருள் இருப்பதை ஒப்புக்கொண்டாலும் கூட இது வேற்றுகிரக வாசிகளுடையது என்று பென்டகன் தெரிவிக்கவில்லை.

அமெரிக்க பாராளுமன்றம்
இது தொடர்பாக அமெரிக்க காங்கிரஸ் அவை தொடர்ந்து பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில், பென்டகன் இதை பற்றி விசாரிப்பதற்காக கடந்த வருடம் டாஸ்க் போர்ஸ் குழு அமைத்தது. காங்கிரஸ் அவை இந்த குழுவிடம் யுஎஃப்ஓ குறித்து ரிப்போர்ட் அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தது. இந்த நிலையில் பென்டகன் உருவாக்கிய குழுவின் இடைக்கால ரிப்போர்ட் தற்போது வெளியாகி இருக்கிறது.

ரிப்போர்ட்
யுஎப்ஓ வீடியோக்களை ஆராய்ந்து அது பூமியை சேர்ந்ததா, எப்படி பறக்கிறது, அதன் இருப்பிடம் என்னவாக இருக்கும் என்று இந்த குழு ஆராய்ச்சி செய்தது. ஒரு வருட ஆராய்ச்சி முடியில், 144 யுஎப்ஓ விமானங்களில் ஒன்றை தவிர மற்ற எதை பற்றியும் விளக்கம் அளிக்க முடியாது. இது என்னவென்றே தெரியவில்லை. இந்த யுஎப்ஓ குறித்த போதிய டேட்டா இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

143
இந்த 144 யுஎப்ஓ விமானங்களும் கடந்த இரண்டு வருடமாக கண்டறியப்பட்டது. இந்த யுஎப்ஓ குறித்த போதிய தகவல்கள், டேட்டாக்கள் இல்லை. அதனால் இதை என்ன வகையான வகைப்படுத்த முடியாது. இது ஏலியனின் யுஎப்ஓ என்று சொல்ல முடியாது. அதே சமயம் ஏலியனின் வாகனம் இல்லை என்று மறுப்பதற்கும் போதிய டேட்டா இல்லை. இந்த யுஎப்ஓ எல்லாம் புதிய வகையாக உள்ளன.

விமானம்
சீனா, ரஷ்யா போன்ற நாடுகளின் புதிய டெக்னாலஜி விமானமாக கூட இது இருக்கலாம். ஏதாவது இயற்கையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக கூட மக்கள் பறக்கும் தட்டு போன்ற தோற்றத்தை பார்த்து இருக்கலாம். 144 சம்பவங்களில் பலூன் போன்ற பறந்த யுஎப்ஓ ஒன்று மட்டுமே வகைப்படுத்த கூடிய, அடையாளம் காண கூடிய ஒன்றாக உள்ளது.

முடியவில்லை
மற்ற விமானங்கள் எதை பற்றியும் அடையாளம் காண முடியவில்லை என்று பென்டகன் கூறியுள்ளது. இதனால் இந்த விமானங்கள் ஏலியனின் விமானங்களாக இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. வேற்று கிரக வாசிகள் பூமிக்கு விசிட் அடித்த சம்பவமாக இது இருக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications