163 வருடங்களுக்கு பின்.. அமெரிக்காவில் நீக்கப்படும் தனி நபர் வருமான வரி! நேரடியாக அறிவித்த டிரம்ப்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்கர்களுக்கான வருமான வரியை ரத்து செய்ய வேண்டும் என்று நேரடியாக அறிவித்துள்ளார். அமெரிக்கா மிகப்பெரிய பணக்கார நாடாக இருந்த போது.. நாம் வருமான வரி கட்டவில்லை.

நாம் நம்மை பணக்காரர்களாகவும் சக்திவாய்ந்தவர்களாகவும் மாற்றிய வருமான வரி அற்ற முறைக்கு திரும்புவதற்கான நேரம் இது. உள்நாட்டு மக்களுக்கு வரி விதிக்க கூடாது. ஆனால் விசாவில் உள்ள வெளிநாட்டு குடிமக்களுக்கு வரி விதிப்பதன் மூலமும்.. மற்ற நாட்டு பொருட்களுக்கு இறக்குமதி வரி விதிப்பதன் மூலமும், அமெரிக்கா தன்னை வளப்படுத்திக் கொள்ள முடியும் என்றும் அவர் கூறி உள்ளார்.

donald trump

அமெரிக்காவில் தனி நபர் வருமான வரி நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இதன் மூலம் அங்கே 163 ஆண்டுகளுக்கு பிறகு வருமான வரி நீக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

1862ல் ஜனாதிபதி லிங்கன் உள்நாட்டுப் போர் செலவினங்களைச் செலுத்த உதவுவதற்காக வருவாய் திரட்டும் நடவடிக்கையாக வருமான வரியை கொண்டு வந்தார். இதன் மூலம் $600 முதல் $10,000 வரையிலான வருமானத்திற்கு 3 சதவீத வரியும், $10,000.13 செப்டம்பர் 2024க்கு மேல் வருமானத்திற்கு 5 சதவீத வரியும் விதித்தது. அதன்பின் அவ்வப்போது இந்த வரி உயர்த்தப்பட்டது. இதைத்தான் டிரம்ப் தற்போது நீக்க உள்ளார்.

இதற்கான சாத்தியக்கூறுகளை அதிபர் டிரம்ப் ஆலோசனை செய்து வருகிறாராம். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான உத்தரவுகளை முடிவுகளை கடந்த 1 வாரத்தில் மட்டும் எடுத்துள்ளார். பல நாட்டு தலைவர்கள்.. ஏன் அமெரிக்காவின் தலைவர்களே கடந்த பல ஆண்டுகளாக செய்ய முடியாததை செய்து முடித்து உள்ளார் டொனால்ட் டிரம்ப்.

அமெரிக்காவில் 2 பாலினம் மட்டுமே உள்ளது தொடங்கி நீதிபதிகள் நீக்கம், தெற்கு எல்லையில் எமர்ஜென்சி என்று பல அறிவிப்புகளை டிரம்ப் 24 மணி நேரத்தில் அமல்படுத்தி உள்ளார். அவர் தந்த வாக்குறுதிகளில் முக்கியமான ஒன்று வருமான வரி நீக்கம்.

அந்த வகையில் தேசிய அளவில் வசூலிக்கப்படும் தனி நபர் வருமான வரி நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இதற்கான சாத்தியக்கூறுகளை அதிபர் டிரம்ப் ஆலோசனை செய்து வருகிறாராம். அமெரிக்கா 80களில் உலகிலேயே சிறப்பான பொருளாதார நாடாக இருந்த போதே அங்கே வருமான வரி இல்லை. இப்போது வரி உள்ளது.

இதை நீக்கவே டிரம்ப் திட்டமிட்டு வருகிறாராம். பழையபடி 80 களில் இருந்தபடி வருமான வரியை நீக்க டிரம்ப் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. மற்ற வரிகளின் மூலமும்.. வெளிநாட்டு இறக்குமதிகளுக்கு விதிக்கப்படும் வரிகளின் மூலமும் நாட்டின் பொருளாதாரத்தை சமாளிக்க முடியும். மாறாக தனி நபர் வருமான வரி தேவையில்லை என்ற திட்டத்தில் டிரம்ப் இருக்கிறாராம்.

இந்தியாவில் வருமான வரி:

ஆனால் இது போன்ற வருமான வரி நீக்க முடிவுகள் இந்தியாவில் நடக்க வாய்ப்புகள் இல்லை. ஆனால் இந்தியாவில் வருமான வரி குறைப்பு, ஸ்லாப் மாற்றங்களுக்கு வாய்ப்புகள் உள்ளன.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 பட்ஜெட்டில் வருமான வரி ஸ்லாப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ₹10 லட்சம் வரை சம்பளம் வாங்கும் நபர்கள் வரி செலுத்துவதில் இருந்து விலக்கு பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

₹10 லட்சம் வரை வருமானம் ஈட்டினால் வரி விலக்கு உறுதி, ₹15 முதல் 20 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 25% வரி ஸ்லாப்பை அறிமுகப்படுத்தும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளதாம்.

இப்போது உள்ள நடைமுறை: தற்போது வருமான வரி விதிப்பில் இரண்டு முறைகள் உள்ளன. இந்த இரண்டு முறைகளில் ஒன்றை மக்கள் தேர்வு செய்ய முடியும்.

முதல் முறை - பழைய வரி விதிப்பு முறை. இதில் நீங்கள் வாங்கும் வருட வருமானம் 2.5 லட்சத்திற்கு வரி இல்லை. ஆனால் 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை வருமானம் வாங்கினால் 5 சதவிகிதம் வரி இருக்கும். 5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வாங்கினால் 20 சதவிகிதம் வரி இருக்கும்.

10 லட்சத்திற்கு மேல் வாங்கினால் 30 சதவிகிதம் வரி இருக்கும். இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் கொஞ்சம் விலக்கு பெற முடியும். 7 லட்சம் வரை வருமானம் வாங்குபவர்கள் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் இன்னும் அதிக விலக்குகளை பெற முடியும். இந்த வரி விதிப்பில் கடந்த முறை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

புதிய முறை: பழைய முறை வேண்டாதவர்கள் புதிய முறையை பின்பற்ற முடியும். புதிய முறையில் இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் விலக்கு பெற முடியாது. இதில் இன்று மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களுக்கு முன்பு வரை, நீங்கள் வாங்கும் வருட வருமானம் 2.5 லட்சத்திற்கு வரி இல்லை. ஆனால் 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை வருமானம் வாங்கினால் 5 சதவிகிதம் வரி இருக்கும்.

அதுவே 5 லட்சத்தில் இருந்து 7.5 லட்சம் வரை வாங்கினால் 10 சதவிகிதம் வரி இருக்கும். 7.5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வாங்கினால் 15 சதவிகிதம் வரி இருக்கும். 10 லட்சம் முதல் 12.5 லட்சம் வரை 20% வரி 20 சதவிகிதம் வரி விதிக்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+