பீச்சில் வாக்கிங் போனவருக்கு அடித்த ஜாக்பாட்.. 90 வருட பழமையான விஸ்கி கண்டுபிடிப்பு!
நியூயார்க்: அமெரிக்காவின் ஜெர்சியின் மார்கேட் பியர் கடற்கரையில் வாக்கிங் சென்றுக்கொண்டிருந்த நபர் சுமார் 90 ஆண்டுகள் பழமையான 11 விஸ்கி பாட்டில்களை கண்டெடுத்துள்ளார். எல்லா பாட்டில்களும் சீல் பிரிக்கப்படாமல் இருப்பதால் விஸ்கி கெட்டுப்போகாமல் இந்திருக்கிறது.
இவ்வளவு பழமையான விஸ்கி சுமார் ஒரு மில்லியன் டாலர் (ரூ.8.72 கோடி) வரை விற்பனையாக வாய்ப்பு இருக்கிறது.

ஆஸ்டின் கொன்டெஜியாகோமோ என்ற அமெரிக்க கடலோர காவல்படை அதிகாரி நேற்று தனது நாயுடன் கடற்கரையில் வாக்கிங் சென்றிருக்கிறார். அங்கு வழக்கத்திற்கு மாறாக வித்தியாசமான ஏதோ ஒன்று மண்ணில் புதைந்திருப்பதை இவரது நாய் பார்த்திருக்கிறது. பார்த்த நாய் சும்மா இருக்குமா? தோண்டி வெளியே எடுத்திருக்கிறது. ஆரம்பத்தில் இது ஏதோ குப்பை என்று ஆஸ்டின் நினைத்திருக்கிறார். ஆனால் மொத்தம் 11 பாட்டில்களை கண்டெடுத்திருக்கிறார்.
வெளியே எடுத்த பிறகுதான் தெரிய வந்திருக்கிறது இது 1930-1940களுக்கிடையே தயாரிக்கப்பட்ட Lincoln Inn நிறுவனத்தின் விஸ்கி என்று. இது கனடாவின் மாண்ட்ரியலில் உள்ள டிஸ்டில்லரியில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்த விஸ்கி தயாரிப்பு கம்பெனி கடந்த 1970ம் ஆண்டு மூடப்பட்டுவிட்டது. கனடாவின் மாண்ட்ரியலுக்கும் தற்போது இந்த விஸ்கி கண்டுபிடிக்கப்பட்ட கடற்கரைக்கும் சுமார் 700 கி.மீ தொலைவு இருக்கிறது. இவ்வளவு தூரம் கடந்து இந்த பாட்டில்கள் எப்படி இங்கு வந்தது என்பது ஆச்சரியமான விஷயம்தான்.
வரலாற்றாசிரியர்கள் இதற்கான பதிலை கூறியுள்ளனர். அதாவது, 1920-1933 வரை அமெரிக்காவில் மதுபானத் தடை அமலில் இருந்தது. இருப்பினும் இந்த தடை மீறி சிலர் மதுபானங்களை அமெரிக்காவுக்கு கடத்தினர். இவர்கள் புட்லெக்கர்கள் (bootleggers) என அழைக்கப்பட்டனர். இவர்கள் கனடாவிலிருந்து கடத்தி வரும் மதுபாட்டில்களை நியூஜெர்சி பக்கத்தில் உள்ள ஜெர்சி ஷோர் (Jersey Shore) எனும் இடத்தில்தான் பதுக்கி வைப்பார்கள். இது மதுபான கடத்தலுக்குப் பிரபலமான இடமாக இருந்தது.
இந்த ஜெர்சி ஷோர்க்கு பக்கத்தில்தான் ஜெர்சியின் மார்கேட் பியர் கடற்கரை இருக்கிறது. இப்படி கடத்தப்பட்டு வரும்போது கடல் சீற்றம் காரணமாக பாட்டில்கள் சில கடலுக்குள் விழுந்திருக்கலாம். அல்லது அமெரிக்க போலீசுக்கு பயந்து பாட்டில்களை கடலில் வீசியிருக்கலாம். அது காலப்போக்கில் கடற்கரையில் மணலோடு மணலாக புதைந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.
இப்படி நீண்ட காலத்திற்கு மண்ணில் புதைந்திருக்கும் விஸ்கியை குடிக்கலாமா? என்று பலருக்கு கேள்வி எழலாம். அதற்கும் ஆய்வாளர்கள் விளக்கமளித்துள்ளனர். அதாவது கண்டுபிடிக்கப்பட்ட 11 பாட்டில்களின் மூடிகளும் சீல் செய்யப்பட்டிருக்கின்றன. எனவே கடல்நீர் உள்ளே போவதற்கான வாய்ப்புகள் குறைவு. இவை கடலில் நீண்டகாலமாக மிதந்து வந்திருக்கலாம். கடலை பொறுத்தவரை வெப்பநிலை 70 டிகிரி செல்சியஸ்தான் இருக்கும். எனவே விஸ்கி கெட்டுபோகவும் வாய்ப்பு குறைவு.
இருப்பினும் இதனை கண்டுபிடித்த ஆஸ்டின், அதை குடிக்க வேண்டும் என்று விருப்பப்படவில்லை. பெரும்பாலும் இப்படியான பழைய விஸ்கிகள் கண்டுக்கப்பட்டால் அவை குடிக்கப்படாது. மாறாக பழங்கால பொக்கிஷமாக பாதுகாக்கப்படும்.
-
கொத்தடிமை முறையை ஒழிக்க இந்தியா தவறிவிட்டதாம்.. கூடுதல் வரிக்கு காரணம் சொல்லும் டிரம்ப்! -
நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.. லெபனான் விவகாரத்தில் நடந்தது என்ன? ஓபனாக பேசிய டிரம்ப்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications