"செத்தால் ஓகே".. 3 இடங்களில் கையெழுத்து.. 1 டிக்கெட் ரூ.2 கோடி! டைட்டன் நீர்மூழ்கியின் ஷாக் பின்னணி
நியூயார்க்: டைட்டானிக் கப்பலை பார்க்க போய் கடலுக்கு அடியில் மூழ்கி வெடித்த டைட்டன் நீர்மூழ்கி கப்பல் குறித்த ஷாக்கிங் விவரங்கள் வெளியாகி உள்ளன.
உலகம் முழுக்க டைட்டானிக் கப்பலை பார்க்க கனடா கடல் பகுதிக்கு பலர் செல்வது வழக்கம். உலகின் காஸ்டலியான, அதே சமயம் ரிஸ்க்கியான சுற்றுலாவில் இதுவும் ஒன்று. அந்த வகையில் டைட்டானிக் கப்பலை பார்க்க சுற்றுலா பயணங்களை நடத்தும் நிறுவனம்தான் the OceanGate . இவர்களிடம் பல்வேறு சிறிய அளவிலான சுற்றுலா நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் தி டைட்டன்.
டைட்டானிக் கப்பலை பார்க்க சனிக்கிழமை நள்ளிரவு சென்ற இந்த கப்பல்தான் தற்போது காணாமல் போய் வெடித்து உள்ளது. இந்த டைட்டன் நீர்மூழ்கி கப்பலின் எடை 23,000lb (10,432 கிலோ) மற்றும் அவர்களின் கணக்கீடு படி, 13,100 அடி வரை ஆழத்தை எட்டும் திறன் கொண்டது.

இந்த நீர் மூழ்கி மிகவும் குறுகியது, வெறும் 670 செ.மீ x 280 செ.மீ x 250 செ.மீ (22 அடி x 9.2 அடி x 8.3 அடி)ன் அளவு மட்டுமே கொண்டது. ஒரு விமானி மற்றும் நான்கு பயணிகள் - ஐந்து பேர் கொண்ட குழுவை ஏற்றிச் செல்ல முடியும்
கப்பலின் விவரம்: 3,800 மீ ஆழத்தில் உள்ள டைட்டானிக் இடிபாடுகளை காண்பது உட்பட, எட்டு நாள் பயணத்திற்கான டிக்கெட்டுகளின் விலை டாலர் 250,000 (ரூபாய் 2 கோடி ஒரு டிக்கெட்) ஆகும். உலகில் உள்ள பயண நீர்மூழ்கி கப்பல்களில் ஒரு சில மட்டுமே இது போல 4 ஆயிரம் அடி வரை மூழ்கும் திறன் கொண்டது.
டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகங்கள் தரைப்பரப்பில் இருந்து 3,800 மீ கீழே உள்ளேது. டைட்டானிக்கின் சிதைந்த பாகங்கள் கனடாவில் உள்ள செயின்ட் ஜான்ஸ், நியூஃபவுண்ட்லாந்திற்கு தெற்கே சுமார் 435 மைல்கள் (700 கிமீ) தொலைவில் கடலுக்கு அடியில் உள்ளது. இதை காணவே அவர்கள் அங்கே சென்றுள்ளனர்.
காணவில்லை: ஏற்கனவே இந்த டைட்டன் நீர்மூழ்கி மூலம் இதற்கு முன் பல பயணிகள் டைட்டானிக் கப்பலை சென்று பார்த்து உள்ளனர். 10 முறைக்கும் மேல் இந்த டைட்டன் டைட்டானிக்கை சென்று வெற்றிகரமாக பார்த்துவிட்டு திரும்பி உள்ளது. ஆனால் இந்த முறை டைட்டானிக்கை பார்க்க சென்று டைட்டன் நீர் மூழ்கி கப்பல் கடலுக்கு அடியில் காணாமல் போய் இப்போது வெடித்து சிதறியும் உள்ளது.
இதில் பயணம் செய்ய வேண்டும் என்றால் டிக்கெட் எடுப்பதோடு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்தும் போட வேண்டும். அதில் என் சாவிற்கு நானே பொறுப்பு.. நிறுவனம் பொறுப்பு அல்ல என்று 3 இடத்தில் கையெழுத்து போட வேண்டும்.
எப்படி மாயம்?: கனடா கடல் பகுதியில் டைட்டானிக்கை பார்க்க சென்ற போது பாதி வழியில் இது மயமாகி உள்ளது. சிக்னல் கட் ஆன காரணத்தால் இது காணாமல் போய் உள்ளது. ராணுவ நீர்மூழ்கிக் கப்பலைப் போலல்லாமல், இந்த நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு குறைந்த சக்தி மட்டுமே உள்ளது மற்றும் அவற்றை ஏவுவதற்கும் திரும்பி மேலே வருவதற்கும் பெரிய எஞ்சின் எல்லாம் இல்லை. கீழே கொண்டு சென்று பாதி தூரத்தில் அப்படியே விடவும் அதன்பின் மேலே கொண்டு வரவும் தனியாக ஆதரவுக் கப்பல் தேவை.
எப்படி இயங்கும்?: ஒரு குறிப்பிட்ட உயரத்தில் இதை அப்படியே கீழே போட்டுவிடுவார்கள். அது கடலுக்கு அடியில் மூழ்கி செல்லும். அதில் ஒரு கண்ட்ரோலர் மட்டும் இருக்கும். ஜாய் ஸ்டிக் போன்ற இந்த கண்ட்ரோலரை இயக்க வேண்டும்.
அதற்கு கூட ஜிபிஎஸ் பார்த்து இயக்க முடியாது. மேலே இருக்கும் கப்பலில் இருந்து சிக்னல் மூலம் மெசேஜ் அனுப்புவார்கள். அதை பார்த்து கீழே நீர் மூழ்கி கப்பலை ஜாய் ஸ்டிக் மூலம் இயக்க வேண்டும். தானாக இதை இயக்கி மேலே கொண்டு வரவே முடியாது. அதனால்தான் இப்போது அந்த நீர் மூழ்கி கப்பலை கண்டுபிடிக்க முடியவில்லை.அந்த கப்பலும் தப்பித்து மேலே வர முடியவில்லை. .
-
3ம் உலகப்போர் வாசலில் நிற்கும் உலகம்? ஈரானை வீழ்த்த அணு குண்டை கையில் எடுக்கும் இஸ்ரேல், அமெரிக்கா? -
வல்லரசின் அஸ்தமனம்! அமெரிக்காவின் 20 ஆண்டு உழைப்பை நொறுக்கிய ஈரான்! ஈராக்கில் இருந்து US வெளியேறியது -
Hormuz: ஹார்முஸ் ஜலசந்தி திறக்குமா? திறக்காதா? 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப்.. ஈரான் அளித்த ரிப்ளை -
ஈரானிடம் தோல்வி அடைந்த அமெரிக்கா? ஹார்முஸில் இருந்து 'டாடா' காட்டும் ட்ரம்ப்.. எல்லாம் முடிந்தது? -
எல்லா பிரச்சினைக்கும் டிரம்ப் தான் காரணம்.. சரியா திட்டமிடல.. சிஐஏவின் ex தலைவர் காட்டம் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல!












Click it and Unblock the Notifications