வேலையை காட்டிய ரஷ்யா.. ஒரு நொடியில் ஸ்பேஸ் ஸ்டேஷனே சின்னாபின்னமாகி இருக்கும்.. விண்ணில் பரபர சம்பவம்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: ரஷ்யா நடத்திய ஆண்டி சாட்டிலைட் டெஸ்ட் ஒன்றால் சர்வதேச ஸ்பேஸ் ஸ்டேஷன் உடைத்து சுக்குநூறாகும் அபாயம் ஏற்பட்டதாக என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவின் இந்த செயலை நாசா விசாரணை செய்து வருகிறது.

உலக நாடுகள் பல தங்கள் பாதுகாப்பிற்காக ஆண்டி சாட்டிலைட் ஏவுகணைகளை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுப்பட்டு வருகிறது. அதாவது வானத்தில் இருக்கும் செயற்கைகோள்களை சுட்டு வீழ்த்தும் ஏவுகணைகள்தான் ஆண்டி சாட்டிலைட் ஏவுகணைகள்.

எதிரி நாட்டு செயற்கைகோள்களை சுட்டு வீழ்த்துவதற்காகவும், உளவு செயற்கைகோள்களை காலி செய்வதற்காகவும் இந்த ஆண்டி சாட்டிலைட் ஏவுகணைகள் எனப்படும் ஏ-சாட் மிஸைல் உருவாக்கப்படுவது வழக்கம்.

இந்தியா

இந்தியா

இந்தியாவிடம் கூட ஏ-சாட் மிஸைல் உள்ளது. மிஷன் சக்தி என்ற பெயரில் இந்தியாவும் செயற்கைகோள்களை தாக்கி அழிக்கும் ஏவுகணையை உருவாக்கி உள்ளது. ரஷ்யாவிடமும் இந்த தொழில்நுட்பம் உள்ளது. இந்த நிலையில் நேற்று ரஷ்யா தனது ஏ-சாட் மிஸைல் ஒன்றை சோதனை செய்தது. தங்கள் நாட்டின் சொந்த செயற்கைக்கோளான Cosmos 1408 செயற்கைக்கோளை ரஷ்யா வெடிக்க வைத்தது.

செயல் இழந்தது

செயல் இழந்தது

இது செயல் இழந்த பழைய செயற்கைகோளாகும். இதை ரஷ்யா ஏ-சாட் மிஸைல் மூலம் துல்லியமாக தாக்கி அழித்தது. இந்த நிலையில் உடைந்து நொறுங்கிய Cosmos 1408 செயற்கைக்கோள் விண்வெளி முழுக்க குப்பைகளை உருவாக்கியது. பொதுவாக ஏ-சாட் மிஸைல் சோதனையில் இது ஒரு பிரச்சனை. வானத்தில் உடைந்த செயற்கைகோள்கள் நிறைய குப்பைகளை உருவாக்கும்.

குப்பைகள்

குப்பைகள்

இந்த குப்பைகள் வானத்தில் வட்டப்பாதையில் சுற்றிக்கொண்டு இருக்கும். இது மற்ற செயற்கைகோள்கள், ஸ்பேஸ் ஸ்டேஷன், ராக்கெட்டுகள் மீது மோதும் அபாயம் உள்ளது. இதனால் உலக நாடுகள் பல ஏ-சாட் மிஸைல் சோதனையை எதிர்த்து வருகிறது. இப்படித்தான் நேற்று ரஷ்யா நடத்திய ஏ-சாட் மிஸைல் சோதனையில் பல லட்சம் குப்பைகள் விண்ணில் மிதக்க தொடங்கியது.

என்ன ஆச்சு

என்ன ஆச்சு

சரியாக அந்த நேரத்தில்தான் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையமான ஐஎஸ்எஸ் ஸ்பேஸ் ஸ்டேஷன் அந்த வட்டப்பாதையில் சென்றுள்ளது. இதனால் அந்த உடைந்த சாட்டிலைட் துகள்கள் ஸ்பேஸ் ஸ்டேஷன் மீது மோதும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஸ்பேஸ் ஸ்டேஷனில் இருந்த நாசா விண்வெளி வீரர்கள் ராஜா சாரி, டாம் மார்ஷ்பர்ன், கைலா பரோன் மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி விண்வெளி வீரர் மத்தியாஸ் மௌரர் ஆகியோர் உடனடியாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் எஸ்கேப் பாடில் தஞ்சம் அடைந்தனர்.

 அவசரம்

அவசரம்

இன்னொரு பக்கம் ரஷ்ய விண்வெளி வீரர்களான ஷ்காப்லெரோவ், பியோட்டர் டுப்ரோவ் மற்றும் நாசா விண்வெளி வீரர் மார்க் வந்தே ஹெய் ஆகியோர் சோயுஸ் விண்கலத்தில் ஏறினர். அதாவது ஒருவேளை இந்த விண்வெளி குப்பைகள் ஸ்பேஸ் ஸ்டேஷன் மீது மோதினால் ஸ்பேஸ் ஸ்டேஷன் வெடித்து சிதறும். இதனால் உயிர் தப்பிப்பதற்காக அவசரமாக எஸ்கேப் பாடில் இவர்கள் அமர்ந்தனர். விதிப்படி வீரர்கள் இப்படித்தான் செய்ய வேண்டும்.

அதிர்ஷ்டம்

அதிர்ஷ்டம்

ரஷ்யா நடத்திய ஆண்டி சாட்டிலைட் டெஸ்ட் காரணமாக நேற்று சர்வதேச ஸ்பேஸ் ஸ்டேஷன் உடைத்து சுக்குநூறாகி இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக இந்த குப்பைகள் ஸ்பேஸ் ஸ்டேஷன் மீது மோதவில்லை. இதனால் வீரர்கள் உயிர் தப்பினார்கள். ரஷ்யாவின் இந்த செயலை பல உலக நாடுகள் விமர்சனம் செய்துள்ளது. நாசா விசாரணை செயலை நாசா விசாரணை செய்து வருகிறது.

ரஷ்யா

ரஷ்யா

அங்கு இருக்கும் குப்பைகள் சிலவற்றை அகற்றிவிட்டோம். ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கு ஆபத்து கிடையாது. வீரர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். எல்லா நாடுகளும் நடத்தும் சோதனையைத்தான் நாங்களும் செய்துள்ளோம் என்று இந்த சம்பவம் தொடர்பாக ரஷ்யா சமாளித்து உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+