அதெல்லாம் சான்ஸே இல்லை.. டிரம்ப் வைத்த கோரிக்கை.. நெற்றியில் அடித்த மாதிரி நோ சொன்ன புடின்!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: உக்ரைன் - ரஷ்யா இடையே போர் நடந்து வரும் நிலையில்.. அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ள டொனால்ட் டிரம்ப் தந்த ஐடியா ஒன்றை ரஷ்ய அதிபர் புடின் நிராகரித்து உள்ளார்.

அமெரிக்க அதிபராக தேர்வாகி உள்ள அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். முக்கியமாக நான் போரை தொடங்குவேன் என்று அவர்கள் கூறிக் கொண்டிருந்தார்கள்; நான் எந்த போரையும் தொடங்க போவதில்லை; போர்களை நிறுத்தப்போகிறேன். அதோடு நாம் அமெரிக்காவின் எல்லையை பாதுகாக்க போகிறோம். இது அமெரிக்க வரலாற்றில் இதுவரை காணாத மிகப்பெரிய வெற்றி. அமெரிக்காவை மாற்ற போகிறோம்.. அமெரிக்காவின் ஒவ்வொரு விஷயங்களையும் மாற்றி நமது நாட்டை சரி செய்ய போகிறோம், என்றெல்லாம் கூறினார்.

donald trump vladimir putin ukraine russia war

இப்படிப்பட்ட நிலையில்தான் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினிடம் பேசி, உக்ரைனில் போரை நிறுத்த வேண்டும்.. இதற்கு மேல் போரை அதிகரிக்க கூடாது. தற்போது உள்ள நிலை தொடர வேண்டும் . அதோடு அமைதி பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த போன்கால் சுமார் 15 நிமிடம் நீடித்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அவரின் போன் காலுக்கு பின்பும் தொடர்ந்து போர் நடந்து வருகிறது. ரஷ்யா - உக்ரைன் போர் உச்சம் அடைந்து உள்ளது.

டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு:

இப்படிப்பட்ட நிலையில்தான் உக்ரைன் நேட்டோவுடன் இப்போது இணையாது.. அடுத்த 20 வருடங்களுக்கு இவர்கள் இணைய மாட்டார்கள். அதனால் இப்போது போர் செய்ய வேண்டாம். நேட்டோ படையில் உக்ரைன் 20 வருடங்களுக்கு இணையாத வகையில் நிறுத்தி வைக்கிறோம் என்று டொனால்ட் டிரம்ப் ஆலோசனை வழங்கினார்.

இந்த நிலையில்தான் இது தற்காலிக ஐடியாதான்.. நிரந்தரம் இல்லை என்பதை உணர்ந்து புடின் அதை நிராகரித்து உள்ளார். இப்போது இணைய மாட்டோம் என்று சொல்லிவிட்டு எதிர்காலத்தில் உக்ரைனை நேட்டோ படையில் அமெரிக்கா இணைக்கும் என்பதால் புடின் இந்த திட்டத்தை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

போருக்கு காரணம் என்ன?:

அமெரிக்கா - ரஷ்யா இடையே 1960களில் நடைபெற்ற பனிப்போருக்கு பின்பாக மிக மிக மோசமான மோதல் தற்போது ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு அமெரிக்கா, ரஷ்யா இடையிலான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் உக்ரைன். உக்ரைன் நேட்டோ படையில் இணைய விரும்பியது. இதற்காக முயற்சிகளை செய்தது.

சோவியத் யூனியன் ஒன்றாக இருந்த போது ரஷ்யாவும் - உக்ரைனும் ஒன்றாக இருந்த நாடுகள் ஆகும். அதன்பின் 1991 டிசம்பரில் சோவியத் யூனியன் உடைந்த போது உக்ரைன் தனியாக பிரிந்தது. இப்படிப்பட்ட நிலையில் உக்ரைன் நேட்டோவில் இணைந்தால் அது ரஷ்யாவிற்கு ஆபத்து. ஏற்கனவே ரஷ்யாவை சுற்றி இருந்த பெரும்பாலான பழைய சோவியத் நாடுகள் அமெரிக்காவின் நேட்டோ படையில் இணைந்துவிட்டது. இதில் உக்ரைனும் இணைந்தால் அது ரஷ்யாவிற்கு பெரிய சிக்கலாகும். பாதுகாப்பு ரீதியாக ரஷ்யாவிற்கு நேட்டோ வைக்கும் செக்காக இது அமைந்துவிடும். இதனால் உக்ரைனை நேட்டோ படையில் சேர விடாமல் தடுக்க ரஷ்யா தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் இரண்டு நாடுகளுக்கும் இடையில் போர் ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+