நேரம் பார்த்து சம்பவம் செய்த ரஷ்யா.. ஈரானுக்கு பறக்கும் மிக முக்கிய "பார்சல்".. அரண்டு போன இஸ்ரேல்
நியூயார்க்: இஸ்ரேல் ஈரான் இடையே மோதல் நடந்து வரும் நிலையில்.. ஈரானுக்கு கூடுதல் எஸ் 400 ஏவுகணை மரிப்பு சிஸ்டத்தை அனுப்ப ரஷ்யா முடிவு செய்துள்ளது. ஈரான் ரஷ்யாவிடம் நவீன ஆயுதங்களை கேட்ட நிலையில்.. ரஷ்யா ஈரானுக்கு மேம்பட்ட வான் பாதுகாப்பு மற்றும் ரேடார் கருவிகளை வழங்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் எஸ் 400 ஏவுகணை மரிப்பு சிஸ்டத்தை ரஷ்யா அனுப்பிய நிலையில் கூடுதல் எஸ் 400 ஏவுகணை மரிப்பு சிஸ்டத்தை அனுப்ப ரஷ்யா முடிவு செய்துள்ளது.
உலகிலேயே அதி வேகமாக ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சிஸ்டம் S-400 missile சிஸ்டம் ஆகும். மிஸைல் டிபன்ஸ் சிஸ்டம் (missile defence system) என்பது ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் அல்லது எதிர் ஏவுகணைகள் அல்லது குண்டுகள் என்று கூறலாம்.

ஒரு நாட்டை தாக்க வரும் ஏவுகணைகளை, எதிர் ஏவுகணைகளை ஏவி, குண்டுகளை வீசி இந்த மிஸைல் டிபன்ஸ் சிஸ்டம் (missile defence system) தாக்கி அழிக்க முடியும். எஸ்-400 (S-400) ரஷ்யாவில் உருவாக்கப்பட்டது ஆகும். இது 400 கிமீ தூரத்தில் இருக்கும் போதே குறி வைத்து தாக்கப்படும். 30 கிமீ தூரத்தில் உள்ள ஏவுகணைகளை கூட எஸ்-400 தாக்கி அழிக்கும். எஸ்-400 (S-400) என்பது பல பயன்பாட்டு ரேடார் வசதி கொண்ட multifunction radar கொண்ட சிஸ்டம் ஆகும்.
அது என்ன multifunction radar என்றால் இதில் இருக்கும் ரேடார் ஒரே நேரத்தில் பல்வேறு ஏவுகணைகளை கண்டுபிடிக்கும் திறன் கொண்டது. தானாக ஆட்டோமெட்டிக் முறையில் ஏவுகணைகளை கண்டுபிடித்து, அதை டார்கெட் செய்து, தாக்கி அழிக்கும். மொத்தம் மூன்று விதமான ஏவுகணைகளை ஏவி எதிரி ஏவுகணைகளை தாக்கி அழிக்கும். ஒரே நேரத்தில் 36 டார்கெட்டுகளை எஸ்-400 தனது ஏவுகணைகள் மூலம் தாக்கி அழிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரானுக்கு உதவும் ரஷ்யா: பொதுவாக சர்வதேச அளவில் இக்கட்டான காலங்களில் ஈரானிய தேசத்திற்கு ஆதரவாக நின்ற நாடுகளில் ரஷ்யாவும் ஒன்றாகும். அந்த வகையில்தான் ஈரான் ரஷ்யாவிடம் நவீன ஆயுதங்களை கேட்டது. ஈரான் மீது சில பொருளாதார ரீதியான தடைகள் உள்ளன. இதனால் ஈரானால் சில ஆயுதங்களை வாங்க முடியாது, தயாரிக்க முடியாது.
இப்படிப்பட்ட நிலையில்தான் ரஷ்யா ஈரானுக்கு மேம்பட்ட ஆயுதங்களை வழங்கி உள்ளது. கப்பல் மூலமாக வான் பாதுகாப்பு மற்றும் ரேடார் கருவிகளை வழங்கத் தொடங்கியுள்ளது. இதனால் இஸ்ரேல் - அமெரிக்கா - ஈரான் போரில் ரஷ்யாவின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற நாடுகளின் தலையீடு: ஈரான் - அமெரிக்க - இஸ்ரேல் இடையிலான போரில் தற்போது மற்ற நாடுகளும் தலையிடும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிகின்றது. இந்த விவகாரத்தில் தற்போது ரஷ்யா நேரடியாக கருத்து தெரிவித்து உள்ளது. நேரடியாக இந்த விவகாரத்தில் ரஷ்யா களமிறங்கி உள்ளது.
ரஷ்ய பாதுகாப்புத் தலைவர் செர்ஜி ஷோய்கு ஈரான் நாட்டு உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தெஹ்ரானுக்குச் சென்றுள்ளார். அங்கே நடந்த மீட்டிங்கிற்கு பிறகு ஈரானுக்கு ஆதரவாக இருப்போம். ஈரானுக்கு தேவையான உதவிகளை செய்வோம்.
ஈரானுக்கு தேவையான உதவிகளை நாங்கள் வழங்குவோம். ஈரானுக்கு உறுதுணையாக இருப்போம். தேவையான ஆதரவு நிலைப்பாடுகள், சப்போர்ட்டுகளை வழங்குவோம் என்று ரஷ்யா அறிவித்து உள்ளது. இந்த விவகாரத்தில் ரஷ்யாவின் வருகை பிரச்னையை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
இரண்டு நாடுகளுக்கு இடையே உள்ள மோதல் உலக நாடுகளுக்கு இடையிலான போராக, மிகப்பெரிய மோதலாக உருவெடுக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications