அப்படி போடு.. ஈரானுக்கு கொத்து கொத்தாக.. செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வழங்கும் ரஷ்யா! ட்விஸ்ட்
நியூயார்க்: ரஷ்யா ஈரானுக்கு யுரேனியத்தை வழங்க முடிவு செய்துள்ளது. ரஷ்யா செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வழங்கவுள்ளது. இது ஈரானின் அணு ஆயுதத் தேவைக்கு பயன்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் ரஷ்யா அதிகாரப்பூர்வமாக, ஈரானின் மின்சார ஆற்றல் பயன்பாட்டிற்காக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வழங்குவதாக தெரிவித்துள்ளது.
ஏற்கனவே அமெரிக்க வான்வழித் தாக்குதலில் ஈரானின் யுரேனியம் இருப்பு அழிக்கப்பட்டதாக அதிபர் டிரம்ப் கூறி வருகிறார். ஆனால் ஈரானின் யுரேனியம் இருப்பு எங்கே உள்ளது என்பது தெரியவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதாவது யுரேனியம் இருப்பை தாங்கள் அழித்துவிட்டோம் என்று உறுதியாக கூற முடியாது என்றும், யுரேனியம் எங்கே இருக்கிறது என்று உறுதியாக சொல்ல முடியாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

ஈரானின் அணு ஆயுதத் திட்டம் "முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறிய ஒரு நாளுக்குப் பிறகு, ஈரானிடம் ஆயுதத் தரம் வாய்ந்த யுரேனியம் தற்போது எங்கே உள்ளது என்று தங்களுக்குத் தெரியாது என்று அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஈரான் யுரேனியம் இருப்பு: அமெரிக்க அதிகாரிகள் கருத்து
அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செட் மற்றும் கூட்டுப் படைகளின் தலைவர் டான் கெய்ன் ஆகியோர், அணு ஆயுத தளங்களை தாங்கள் முழுவதுமாக அழித்துவிட்டதாக அதிபர் டிரம்ப் கூறிய கருத்தை உறுதிப்படுத்த மறுத்தனர். விமானப்படை பி-2 குண்டுவீச்சு விமானம் மற்றும் கடற்படையின் டோமஹாக் ஏவுகணைகள் மூலம் குறிவைக்கப்பட்ட மூன்று தளங்களிலும் பலத்த சேதம் மற்றும் அழிவு ஏற்பட்டதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அந்த சேதங்கள் எந்தளவுக்கு ஏற்பட்டது என்பதில் தெளிவான முடிவுகள் எட்டப்படவில்லை.
முக்கிய இலக்கான ஈரானின் ஃபோர்டோ யுரேனியம் செறிவூட்டும் ஆலையின் செயற்கைக்கோள் படங்கள், அமெரிக்காவால் வீசப்பட்ட 30,000 பவுண்டுகள் எடை கொண்ட பதுங்கு குழி குண்டுகளால் ஆழமான துளைகள் ஏற்பட்டிருப்பதைக் காட்டுகின்றன. ஆனால் அங்கே முழுமையாக யுரேனியம் நீக்கப்பட்டதா என்பதை சொல்ல முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதோடு இஸ்ரேலிய ராணுவத்தின் ஆரம்ப அறிக்கைகள், அந்த தளம் கடுமையாக சேதமடைந்தாலும் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று கூறுகின்றன.
இஸ்ரேல் ஈரான் கருத்து
முன்னதாக இதுகுறித்து இஸ்ரேல் அதிகாரிகள் கூறுகையில், "ஈரான் யுரேனியத்தை நகர்த்தியது என்பதைக் காட்ட போதுமான ஆதாரங்கள் உள்ளன. 400 கிலோ யுரேனியம் இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கலாம். இதன் மூலம் 10 அணுகுண்டுகளை தயாரிக்கலாம்" என்று தெரிவித்தனர்.
ஈரானிய அதிகாரிகள் சமீப நாட்களில் அந்த தளத்திலிருந்து உபகரணங்கள் மற்றும் யுரேனியத்தை நகர்த்தியுள்ளனர் என்பதைக் காட்ட போதுமான ஆதாரங்கள் உள்ளன. டிரம்ப் சமீபத்தில் விடுத்த அச்சுறுத்தல்கள் காரணமாக, 60% தூய்மைப்படுத்தப்பட்ட சுமார் 400 கிலோகிராம் யுரேனியத்தை அவர்கள் அகற்றியுள்ளனர். இது அணு ஆயுதங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் 90% தூய்மை நிலைக்கு சற்று குறைவானதாகும். ஆனாலும் இதை விரைவில் அவர்களால் செறிவூட்ட முடியும்.
சுமார் 10 கார்களின் டிக்கிகளில் வைக்கக்கூடிய அளவிற்கான யுரேனியம் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. ஆனால் அவை எங்கே உள்ளது என்று தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications