நீண்ட மோதலுக்கு தயாராகுங்க! ரஷ்ய அதிபர் புடின் அதிகாரிகளுக்கு அனுப்பிய மெசேஜ்! நடுங்கி போன அமெரிக்கா
நியூயார்க்: அமெரிக்காவுடனான நீண்ட மோதலுக்கு ரஷ்யா தயாராக வேண்டும் என்று ரஷ்ய நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் அந்நாட்டு அதிகாரிகளுக்கு தெரிவித்து உள்ளாராம். இரண்டு நாட்டு உறவுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து வாஷிங்டனுக்கு எச்சரிக்கையை அனுப்பி உள்ளோம் என்று துணை வெளியுறவு மந்திரி செர்ஜி ரியாப்கோவ் தெரிவித்து உள்ளாராம்.
உக்ரைன் - ரஷ்யா போர், ஈரான் - லெபனான் - இஸ்ரேல் போர் ஆகிய போர்கள் காரணமாக அமெரிக்கா - ரஷ்யா ஆகிய இரண்டு நாட்டு மோதல் உச்சம் அடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.

இரண்டு நாட்டு பிரிவினை இதுவரை இல்லாத மிகவும் ஆபத்தான கட்டத்தை அடைந்து உள்ளது என்று ரஷ்ய அதிகாரிகளிடம் ரஷ்ய நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்து உள்ளாராம். முக்கியமாக பனிப்போரை விட மோசமான சூழலை இரண்டு நாடுகளும் சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.
ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் இடையிலான போரில் தற்போது மற்ற நாடுகளும் தலையிடும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிகின்றது. இந்த விவகாரத்தில் தற்போது ரஷ்யா நேரடியாக கருத்து தெரிவித்து உள்ளது. நேரடியாக இந்த விவகாரத்தில் ரஷ்யா களமிறங்கி உள்ளது. நேற்று ஈரான் தாக்குதலுக்கு முன்பாக ரஷ்ய அதிபர் புடினை தொலைபேசியில் தொடர்புகொள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தீவிரமாக முயன்று உள்ளார்.
ஆனால் பெஞ்சமின் நெதன்யாகு எவ்வளவு முயன்றும் புடினுடன் அவரால் பேச முடியவில்லை என்று கூறப்படுகிறது. இரண்டு நாட்டு ஹாட் லைன் வேலை செய்யாமல் இருந்துள்ளது. ரஷ்யா இந்த ஹாட் லைனை எடுக்காமல் இஸ்ரேலுக்கு போக்கு காட்டி வருவதாக கூறப்படுகிறது.
ரஷ்யா நிலைப்பாடு: ஏற்கனவே, ஈரான் கேட்ட ராணுவ பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நவீன ரேடார்களை மாஸ்கோ வழங்கத் தொடங்கியுள்ளது. ஈரானுக்கு ராணுவ உதவிகளை ரஷ்யா தீவிரமாக வழங்கி வருகிறது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பே இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான். ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனிஹ் சமீபத்தில் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த ஹமாஸ் அமைப்புதான் பாலஸ்தீனத்தில் இஸ்ரேலுக்கு எதிராக போராடி வருகிறது. இவர்களுக்கு உறுதுணையாக ஹிஸ்புல்லா அமைப்பு உள்ளது. சமீபத்தில் ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதி ஃபுவாட் ஷுக்ர் இதேபோல் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
ஹிஸ்புல்லா அமைப்பு ஈரான் ஆதரவை பெற்று இஸ்ரேலில் போர் செய்து வருகிறது. லெபனானில் இருந்து இந்த அமைப்பு இயங்கி வருகிறது.
உதவ ரெடி: ரஷ்ய பாதுகாப்புத் தலைவர் செர்ஜி ஷோய்கு ஈரான் நாட்டு உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தெஹ்ரானுக்குச் சென்றுள்ளார். அங்கே நடந்த மீட்டிங்கிற்கு பிறகு ஈரானுக்கு ஆதரவாக இருப்போம். ஈரானுக்கு தேவையான உதவிகளை செய்வோம்.
ஈரானுக்கு தேவையான உதவிகளை நாங்கள் வழங்குவோம். ஈரானுக்கு உறுதுணையாக இருப்போம். தேவையான ஆதரவு நிலைப்பாடுகள், சப்போர்ட்டுகளை வழங்குவோம் என்று ரஷ்யா அறிவித்து உள்ளது. இந்த விவகாரத்தில் ரஷ்யாவின் வருகை பிரச்னையை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
இரண்டு நாடுகளுக்கு இடையே உள்ள மோதல் உலக நாடுகளுக்கு இடையிலான போராக, மிகப்பெரிய மோதலாக உருவெடுக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
பெரிய பங்கு: ஈரான் ரஷ்யாவிடம் நவீன ஆயுதங்களை கேட்ட நிலையில்.. ரஷ்யா ஈரானுக்கு மேம்பட்ட வான் பாதுகாப்பு மற்றும் ரேடார் கருவிகளை வழங்கத் தொடங்கியுள்ளது. இதில் அணு ஆயுதங்களும் இருக்கலாம் என்ற சந்தேகம் உலகம் முழுக்க எழுந்துள்ளது.
பொதுவாக சர்வதேச அளவில் இக்கட்டான காலங்களில் ஈரானிய தேசத்திற்கு ஆதரவாக நின்ற நாடுகளில் ரஷ்யாவும் ஒன்றாகும். அந்த வகையில் தற்போது ஈரான் ரஷ்யாவிடம் நவீன ஆயுதங்களை கேட்டது. ஈரான் மீது சில பொருளாதார ரீதியான தடைகள் உள்ளன. இதனால் ஈரானால் சில ஆயுதங்களை வாங்க முடியாது, தயாரிக்க முடியாது.
இப்படிப்பட்ட நிலையில்தான் ரஷ்யா ஈரானுக்கு மேம்பட்ட ஆயுதங்களை வழங்கி உள்ளது. கப்பல் மூலமாக வான் பாதுகாப்பு மற்றும் ரேடார் கருவிகளை வழங்கத் தொடங்கியுள்ளது. இதனால் இஸ்ரேல் - அமெரிக்கா - ஈரான் போரில் ரஷ்யாவின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
"டபுள்" கேம் ஆடி ஏமாற்றிய பாகிஸ்தான்.. உச்சக்கட்ட கோபத்தில் ஈரான்.. டிரம்ப் குஷியோ குஷி! -
ஈரான் தினமும் 1310 கோடி சம்பாதிக்கிறது.. ஹார்முஸ் ஜலசந்தியில் என்ன நடக்கிறது தெரியுமா? -
இந்திய மக்களுக்கு நன்றி.. இஸ்ரேல் - அமெரிக்க தளங்களை தாக்கும் ஈரான் ஏவுகணையை கவனிச்சீங்களா? பின்னணி -
ட்ரம்ப் அகராதியில் இல்லாத அந்த வார்த்தை.. ஈரான் போரில் நடக்கும் செம ட்விஸ்ட்! உலக நாடுகள் வெயிட்டிங் -
நாளைக்கு விடியும்போது இருக்கு கச்சேரி? பெரிதாக திட்டம் போடும் டிரம்ப்.. வெள்ளை மாளிகை மர்ம வீடியோ -
ஈரானுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம்.. வழிக்கு வந்த டிரம்ப்! போருக்கு குட்டி பிரேக்! -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
இந்தியாவில் இன்னும் 1 மாதத்திற்கான எல்பிஜிதான் இருக்கு.. அப்போ 1 மாசத்திற்கு பின்? என்ன நடக்கும்? -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு












Click it and Unblock the Notifications