Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சிலுவையை" தலைகீழாக தொங்கவிட்டு.. பைபிளை கிழித்து.. என்னாது, சாத்தான்களுக்கு கோயிலா? என்ன நடக்கிறது?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது.. அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. இதைக்கேள்விப்பட்ட நெட்டிசன்கள், சாத்தான்கோவில் என்று ஒன்று உள்ளதா? சாத்தான்களை வழிபடும் மக்கள் இருக்கிறார்களா? என்ற ஆச்சரியம் நிறைந்த கேள்வியை கேட்டு வருகிறார்கள்.
பாஸ்டன் நகரில் கடந்த ஏப்ரல் 28ம் தேதி சாத்தானை வழிபடும் கூட்டத்தின், 10ம் ஆண்டு விழா நடந்துள்ளது.. அது தொடர்பான வீடியோவும் வெளியாகி உள்ளது.

வீடியோ: அந்த வீடியோவில், ஒரு பெண், "சாத்தான் வாழ்க" என்று கோஷமிட்டுக் கொண்டே பைபிளை கிழித்து எறிகிறார். அவருடன் சேர்ந்து இன்னொரு நபரும், தின் ப்ளூ லைன் கொடியை, இரண்டாக கிழித்து வீசுகிறார்.. உடனே கூட்டத்தினர் ஆரவாரம் செய்கிறார்கள்.. சாத்தானை புகழ்ந்து பேசியபடியே, அந்த பெண் பைபிளின் பக்கங்களை கிழித்தெறிவதுதான் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது... மேலும், அந்த பெண் சிலுவையை தலைகீழாக அணிந்து கொண்டுள்ளார்.

satancon: satanic temple who are these people who tear out bible pages and wear the cross upside down

சிலுவைகள்: பைபிள் பக்கங்களை கிழிக்கும், சிலுவையை தலைகீழாக அணியும் இவர்கள் யார்? சாத்தானியவாதிகளின் மிகப்பெரிய கூட்டம், சாத்தான்கான் என்று அழைக்கிறார்கள்.. பாஸ்டனில் உள்ள மேரியட் ஹோட்டலில் இந்த சாத்தான் வழிபாட்டு கூட்டம் கூட்டப்பட்டுள்ளது..

சாத்தான் கோவிலின் வழிப்பாட்டு முறையை ஒரு மதமாகவே அமெரிக்க அரசு அங்கீகரித்துள்ளதாம்.. சாத்தானை பின்பற்றும் சாத்தானியவாதிகள் ஒன்றுகூடும் மிகப்பெரிய கூட்டமாக இது கருதப்படுகிறது. அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள மேரியட் ஹோட்டலில் தான் இந்தக் கூட்டம் நடந்துள்ளது. மொத்தம் 830க்கும் மேற்பட்டவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

satancon: satanic temple who are these people who tear out bible pages and wear the cross upside down

வண்ணமய தோற்றம்: இந்த சாத்தான் வழிபாட்டு கூட்டத்தில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் திருமண வயதை எட்டிய ஆண்களாகவே இருந்திருக்கிறார்கள்.. பலவிதமான மீசைகள், ஆடம்பரமான ஆடைகள் என்று வண்ணமயமான தோற்றங்களில் வந்திருக்கிறார்கள்.. அவர்களில் பலர் மான்கொம்பு உள்ளிட்ட பல்வேறு உருவங்களை கைகளில் பச்சை குத்தியிருந்தார்களாம்..

ஞானஸ்தானம்: அதுமட்டுமல்ல, ஞானஸ்நான சடங்கை ரத்து செய்வதன் அடையாளமாகவே, பைபிளின் சில பக்கங்களை இப்படி கிழித்தெறிவார்களாம். சுருக்கமாக சொன்னால், அடக்குமுறையின் அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாக உள்ள பைபிள் கிழித்தெறியப்படுகிறதாம். சாத்தானியத்தை பின்பற்றுவர்கள் அனைவரும் தலைகீழ் சிலுவையை அணிபவர்களாகவும் இருக்கிறார்கள்..

satancon: satanic temple who are these people who tear out bible pages and wear the cross upside down

இந்தச் சடங்குகளைச் செய்பவர்கள் தரையைத் தொடும் அளவுக்கு நீளமான ஆடையை அணிந்திருப்பார்கள்.. முகத்தை மறைக்கக்கூடிய கருப்பு நிற மாஸ்க்கையும் அணிந்து கொள்வார்கள்.. முதலில், அவர்களின் கைகள் கயிறுகளால் கட்டப்பட்டிருக்கும்.. பிறகு அது விடுதலையின் அடையாளமாக கழற்றி வீசப்பட்டுவிடும்.

சாத்தானியவாதம்: மதத்தின் பெயரால் நடக்கும் அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்டவர்களே, சாத்தானியவாதத்தின் உறுப்பினர்களாக இருக்கிறார்களாம். அதிகாரத்தைக் கேள்வி கேட்பதற்கும், அறிவியலில் தங்களுக்கு உள்ள நம்பிக்கையை அடித்தளமாக வைப்பதற்கும், சாத்தான் ஒரு உருவகம் என்பதே இவர்களின் கருத்தாக உள்ளது. இந்தக் கருத்தையொட்டி உருவாகும் சமூக உணர்வு சாத்தானியத்தை ஒரு மதமாக்குகிறது என்றும் சொல்கிறார்கள்.

பெயர் விரும்பாத ஒருவர் பிபிசியிடம் இதை பற்றி விரிவான தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.. சாத்தானியவாதிகள் தங்களது சடங்குகளுக்கு சாத்தானின் சின்னங்களை பயன்படுத்துகிறார்களாம்... உதாரணமாக, திருமண விழாவிலோ, பெயர் சூட்டுதல் நிகழ்விலோ சாத்தானின் அடையாளமாக, பலிபீடத்தில் சிலுவை தலைகீழாகக் கவிழ்த்து வைக்கப்படுகிறதாம்.

satancon: satanic temple who are these people who tear out bible pages and wear the cross upside down

உரிமைகள்: ஒவ்வொருவருக்கும் அவர்களின் நம்பிக்கை சார்ந்த விஷயங்களைத் தேர்ந்தெடுப்பதற்கான உரிமை இருக்கிறது என்பதால், மற்றவர்களது உரிமைகளையும் மதிப்பதாக சாத்தானியவாதிகள், சொல்கிறார்கள்.. அதேசமயம், தாங்கள் யாரையும் புண்படுத்தும் நோக்கில் செயல்படவில்லை என்றும் கூறுகிறார்கள்.. சாத்தானியவாதிகளின் கூட்டத்தைக் கண்டித்து, கிறிஸ்தவர்கள் ஒருபுறம் ஆர்பாட்டம் நடத்தி கொண்டிருந்தாலும், மறுபுறம் சாத்தானியர்களை வழிபடும் கூட்டமும் பெருகி கொண்டுதான் இருக்கிறதாம்.

கருக்கலைப்பு: கருக்கலைப்பு செய்து கொள்பவர்களுக்கான சடங்குகளையும் சாத்தான் கோவில் நிர்வாகம் வடிவமைத்துள்ளதாக தெரிகிறது.. மொத்தத்தில், மதம், அரசியல் குறித்த சாத்தானியர்களின் கருத்து தீவிரமாக இருந்தாலும், இதுதொடர்பான போராட்டங்களில் அவர்கள் சில நேரங்களில் நையாண்டியையும், மூர்க்கத்தனத்தையும் கொண்டு வந்துவிடுவதாக விமர்சனமும் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+