Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உயிர்களை பலி வாங்க காத்திருக்கும் விண்கல்! பூமி மீது எப்போது மோதும்? விஞ்ஞானிகள் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: பூமிக்கு நெருக்கமாக வரும் விண்கற்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2024 YR4 எனும் விண்கல் பூமி மீது விரைவில் மோத வாய்ப்பு இருப்பதாகவும், அப்படி நடந்தால் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகலாம் என்றும் விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிலியில் உள்ள ஒரு தொலைநோக்கி மூலம் இந்த விண்கல் கண்டுபிடிக்கப்பட்டது. பூமிக்கு நெருக்கமாக வந்த இது, இந்த முறை மோதாமல் அப்படியே சென்றுவிட்டது. ஆனால், 2032ம் ஆண்டு இது பூமியை தாக்க வாய்ப்பு இருக்கிறது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

earth asteroid

இன்று உலகில் இருக்கும் அத்தனை உயிர்களும் ஒரு பேரழிவில் தப்பி பிழைத்த வெறும் 5 சதவிகிதமான உயிர்கள்தான். இந்த பேரழிவு நடந்து 6.6 கோடி ஆண்டுகள் ஆகின்றன. அப்போது பூமியில் டைனோசர்கள் இருந்தன. ஆனால் எதிர்பாராத நேரத்தில் சுமார் 1 கி.மீக்கும் அதிகமான விட்டம் கொண்ட விண்கல் ஒன்று பூமி மீது மோதியது. இதனால் ஏற்பட்ட பேரழிவில் டைனோசர்கள் முற்றிலுமாக அழிந்துவிட்டன.

விண்கல் மோதியவுடன் பூமியில் இருந்த அனைத்து எரிமலைகளும் வெடிக்க தொடங்கிவிட்டது. இதனால் உருவான புகை வளிமண்டலத்தை சூழ்ந்தது. தாவரங்களுக்கு சூரிய ஒளி கிடைக்கவில்லை. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக தாவரங்கள் அழிந்தன. தாவரங்களை நம்பியிருந்த உயிர்களும் அழிய தொடங்கின. இந்த உயிர்களை வேட்டையாடி சாப்பிட்ட மாமிச உயிர்களும் அழிய தொடங்கின. இப்படித்தான் டைனோசர்கள் அழிந்தது.

இந்த அளவுக்கு இல்லை என்றாலும் அதில் பாதி அளவுக்கு பாதிப்பை இந்த 2024 YR4 விண்கல் ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். 100 மீட்ட விட்டம் கொண்ட இந்த விண்கல் தற்போது பூமியை விட்டு வேகமாக விலகி சென்றுக்கொண்டிருக்கிறது. பொதுவாக விண்கற்களுக்கு ஒளிரும் தன்மை கிடையாது. எனவே 2024 YR4 விண்கல் சூரியனை விட்டு தள்ளி போய்விட்டது எனில் அதை பற்றி நம்மால் அதிகம் தெரிந்துக்கொள்ள முடியாது.

இதனால் உலகில் உள்ள அனைத்து சக்தி வாய்ந்த தொலைநோக்கியையும் அந்த கல்லை பார்த்தவாறு திருப்பி வைத்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இது பூமியை தாக்க 1 சதவிகிதத்திற்கும் அதிகமான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. என்னங்க 1% தான் வாய்ப்பு இருக்கு, நாம பொழச்சிக்கலாமே என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் இந்த வாய்ப்பு திடீரென அதிகமானால் நிச்சயம் பூமிக்கு பேரழிவுதான்.

இந்த கல் விழுந்த இடத்தை சுற்றி அரை கி.மீ தூரத்திற்கு புல், பூண்டு கூட இருக்காது. அங்கிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடலாம். ஆனால் இந்த மோதலை முன்கூட்டியே கணிப்பதன் மூலம் மக்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்ற முடியும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+