சக்தி வாய்ந்த ஒரு சம்பவம் நடக்கும்! அதிபரான 2 வாரத்தில் டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை! உலக நாடுகள் ஷாக்
நியூயார்க்: பனாமா கால்வாய் அமெரிக்காவிற்கு சொந்தமானது, அதை சீனா கட்டுப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பனாமா கால்வாய் அமெரிக்காவின் கீழ் வர வேண்டும். இல்லையென்றால் சக்தி வாய்ந்த ஒரு சம்பவம் நடக்கும்.. மிக சக்தி வாய்ந்த பெரிய சம்பவம் ஒன்று நடக்க போகிறது.. கவனமாக இருங்கள்.. இதை உருவாக்கியது அமெரிக்கா.. ஆனால் பனாமா கால்வாயை சீனா நடத்துகிறது... அது சீனாவுக்கு வழங்கப்படவில்லை... ஆனால் அவர்கள் ஒப்பந்தத்தை மீறி நடத்துகின்றன, நாங்கள் அதை திரும்பப் பெறப் போகிறோம்.. அப்படி மட்டும் நடக்கவில்லை என்றால் மிகவும் சக்திவாய்ந்த ஒன்று நடக்கப் போகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்" என்று டொனால்ட் டிரம்ப் எச்சரித்து உள்ளார்.

பனாமா கால்வாய்:
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பனாமா கால்வாய் மற்றும் கிரீன்லாந்தை கையகப்படுத்த வேண்டும். அதோடு கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
இது தொடர்பாக அவர் கடந்த சில நாட்களாகவே பேசி வருகிறார். இப்படிப்பட்ட நிலையில்தான் உடனே இந்த பகுதிகளை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும். பனாமா கால்வாய் மற்றும் கிரீன்லாந்து இரண்டும் அமெரிக்காவுடன் இருக்க வேண்டிய பகுதிகள். இந்த பகுதிகளை அமெரிக்காவிற்கு கொண்டு வர வேண்டும். இல்லையென்றால் அதற்காக படைகளை கூட அனுப்புவேன்.
தேவைப்பட்டால் மொத்த ராணுவத்தை கூட அனுப்புவேன். கனடாவை பொறுத்தவரை அப்படி இல்லை. அவர்களுக்கு பொருளாதார அழுத்தம் தருவேன். மெக்சிகோ அமெரிக்காவின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும். செஸ் விளையாடுவது போலத்தான். இவர்களுக்கும் பொருளாதார தடை உள்ளிட்ட அழுத்தங்களை கொடுப்பேன். அவர்கள் அமெரிக்காவின் புதிய மாகாணங்களாக மாற வேண்டும்.
பனாமா கால்வாய் மற்றும் கிரீன்லாந்து பகுதிகளை அமெரிக்காவுடன் இணைக்க பணிகளை செய்வேன் என்று கூறி உள்ளார். இந்த பகுதிகள் பாதுகாப்பு ரீதியாக அமெரிக்காவிற்கும் மிகவும் முக்கியம் என்பதை மறக்க வேண்டாம்.
கனடா திட்டம்:
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்த நேரம் பார்த்து கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கும் முயற்சியை மீண்டும் மேற்கொண்டு உள்ளாராம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். கனடாவில் அரசியல் சிக்கல் நிலவி வரும் நிலையில் டிரம்ப் மீண்டும் இந்த முயற்சியில் இறங்கி உள்ளாராம்.
பிரதமர் ட்ரூடோவின் ராஜினாமாவைத் தொடர்ந்து அமெரிக்காவின் 51வது மாநிலமாக கனடாவும் இணைய வேண்டும் என்று அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
கனடா அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாறுவதை நான் உட்பட பலரும் விரும்புகிறார்கள். கனடா அமெரிக்காவின் தயவில்தான் இருக்கிறது. நாம் அவர்களுக்கு நிதி உதவி கொடுக்கிறோம். நிறைய சலுகைகள் கொடுக்கிறோம். ஏற்றுமதி, இறக்குமதி வாய்ப்பு தருகிறோம். இனி அப்படி எல்லாம் வழங்க முடியாது.
கனடா அமெரிக்காவுடன் இணைந்தால், கட்டணங்கள் இருக்காது, வரிகள் குறையும், மேலும் ரஷ்ய மற்றும் சீனக் கப்பல்களின் அச்சுறுத்தலில் இருந்து கனடா முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும். கனடாவிற்கு ஒரு ஆபர் தருகிறேன்.. அவர்களின் டாலர் மதிப்பை அப்படியே அமெரிக்க டாலர் மதிப்பிற்கு மாற்றலாம். அதேபோல் அவர்களின் ஹெல்த்கேர் சிஸ்டம் அப்படியே தொடரலாம்.
இதனால் கனடாவிற்கு நஷ்டம் ஏற்படுவது தடுக்கப்படும். கனடா இந்த டீலிங்கை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று, அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். கனடாவில் அரசியல் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அங்கே கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகி உள்ளார். உட்கட்சி பிரச்சனை, மசோதாக்களை நிறைவேற்ற முடியாதது, சில நிதி பிரச்சனைகள் காரணமாக ஜஸ்டின் பதவி விலகி உள்ளார்.
ஏற்கனவே நிதியமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் திடீரென ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அங்கே நிதி நிர்வாகம் தொடங்கி கடன் பிரச்சனை வரை பல விஷயங்கள் தீவிரம் அடைந்து உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் ஜஸ்டின் ராஜினாமா செய்துள்ளார்..
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications