12 பெட்டி நிறைய ஆபாசப் பட சிடிக்கள்.. தூக்கி எறிந்த பெற்றோர்.. 60 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு மகன் வழக்கு
ஆபாச சிடிக்களை தூக்கி எறிந்த பெற்றோருக்கு எதிராக நஷ்ட ஈடு கேட்டு மகன் வழக்கு தொடர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
நியூயார்க்: தான் சேகரித்து வைத்திருந்த ஆபாச சிடிக்களை அழித்ததாக பெற்றோர் மீது மகன் நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ள சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் இண்டியானாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியைப் பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். பெற்றோருடனும் அடிக்கடி சண்டை ஏற்பட்டதால் தனியே வாழ முடிவு செய்தார்.
தனியாக ஒரு வீடு பார்த்து குடியேறினார் அந்த இளைஞர். பின்னர் தனது பொருட்களை எல்லாம் பெற்றோர் வீட்டில் இருந்து புது வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார். அப்போது அதில் தனது 12 பெட்டிகளைக் காணாததால் அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இது குறித்து போலீசில் அவர் புகார் அளித்தார்.

புகார்:
ஆனால், அந்தப் புகாரை போலீசார் ஏற்கவில்லை. காரணம் அந்த இளைஞர் குறிப்பிட்ட 12 பெட்டிகளிலும் ஆபாசப் பட சிடிக்கள் இருந்ததாக அவர் தெரிவித்தது தான். ஆனாலும் மனம் தளராத அந்த இளைஞர் இந்த விவகாரத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

பெற்றோர் மீது வழக்கு:
தான் கஷ்டப்பட்டு சேர்த்த ஆபாசப்பட சிடி தொகுப்பை தனது பெற்றோர் அழித்து விட்டதாக அவர் வழக்குத் தொடர்ந்துள்ளார். இது தொடர்பான மனுவில் அவர், ‘29,000 டாலர் மதிப்புள்ள, அரிய வகையிலான ஆபாச டிவிடிகளை என் பெற்றோர் தூக்கி எறிந்து விட்டனர். அதனால் என் பெற்றோர் எனக்கு 86,000 டாலர் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார். இந்திய மதிப்பில் இது 60 லட்ச ரூபாய் ஆகும்.

தந்தை விளக்கம்:
மகன் தங்கள் மீது வழக்குத் தொடர்ந்துள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவரது தந்தை, 'உன்னுடையை உடல் மற்றும் மன ரீதியான ஆரோக்கியத்திற்காகவே நான் அவற்றை அழித்தேன். நீ புரிந்து கொள்வாய் என்று நம்புகிறேன்' என விளக்கமளித்துள்ளார்.

வினோத வழக்கு:
ஆனாலும், இதனை ஏற்காத அந்த மகன், தான் சேகரித்து வைத்திருந்த ஆபாசப் பட சிடிக்களில் பல தற்போது புழக்கத்திலேயே இல்லை. பழமையான அவற்றை அழித்த தன் பெற்றோரிடம் நஷ்ட ஈடு வாங்காமல் விட மாட்டேன் என்பதில் உறுதியாக உள்ளார். இந்த வினோத வழக்கு அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications