Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வானில் திடீரென குறுக்கே வந்த போர் விமானம்.. நூலிழையில் தப்பிய பயணிகள் விமானம்.. திக்திக் நிமிடங்கள்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வானில் பறந்து சென்ற பயணிகள் விமானத்தின் குறுக்காக திடீரென்று போர் விமானம் குறுக்கே வந்தது. இருவிமானங்களும் வானிலேயே மோதிக்கொள்ளும் சூழல் உருவானது. இந்த வேளையில் பயணிகள் விமானத்தின் விமானி செய்த ஒரு செயலால் நூலிழையில் பெரும் விமான விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் விபத்தில் தப்பிக்க விமானி செய்த செயலால் பயணிகள் தங்களின் இருக்கைகளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இந்த திக்திக் சம்பவம் குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பர்பாங் ஏர்போர்ட்டில் இருந்து லாஸ் வேகாஸ்க்கு சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் புறப்பட்டது. இது சவுத்வெஸ்ட் விமானம் 1467 என்ற என்ற எண் கொண்ட போயிங் 737 ரக விமானமாகும்.

southwest-airlines-passenger-plane-escapes-luckily-after-its-dives-when-fighter-jet-crosses-its-path

இந்த விமானம் ஏர்போர்ட்டில் இருந்து டேக் ஆப் ஆன சுமார் 6வது நிமிடத்துக்குள் விமானம் பயணித்த வழியில் குறுக்கே அமெரிக்க ராணுவ விமானம் பறந்து வந்தது. தனியாருக்குச் சொந்தமான ஹாக்கர் ஹண்டர் போர் விமானம் ஒன்று பறந்தது.

சவுத்வெஸ்ட் பயணிகள் விமானம் பயணிக்கும் பாதையில் இரண்டு மைல்களுக்குள் அந்த போர் விமானம் வந்து கொண்டிருந்தது. இருவிமானங்களும் 100 அடி உயரம் மட்டுமே வித்தியாசமாக இருந்தது. இதனால் இரண்டு விமானங்களும் நடு வானில் மோதிக்கொள்ளும் நிலை உருவானது. இந்த வேளையில் பயணிகள் விமானத்திற்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்து அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

விமானம் பறந்து செல்லும் வழியின் குறுக்காக போர் விமானம் பறக்கிறது என்று கட்டுப்பாட்டு அறையில் இருந்து பயணிகளின் விமான பைலட்டுக்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டது.

இதையடுத்து உடனடியாக பயணிகள் விமான பைலட்டுகள் விபத்தை தவிர்ப்பதற்கான விமானம் பறக்கும் உயரத்தை சட்டென குறைத்து மீண்டும் உயர்த்தினர். பயணிகள் விமானம் தனது உயரத்தை உடனடியாக 475 அடி உயரத்துக்கு குறைத்தது. போர் விமானத்தை கடந்த பிறகு தனது உயரத்தை ஒரு நிமிடத்தில் மீண்டும் 600 அடிக்கு உயர்த்தி கொண்டது. அதாவது சில வினாடிகளில் விமானம் தனது உயரத்தை 100 அடி வரை உயர்த்தியது.

இதனால் அதிர்ஷ்டவசமாக இரு விமானங்களும் மோதிக்கொள்ளவில்லை. பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பயணிகள் விமானத்தின் பைலட்டுகளின் சாதுர்யத்தால் மிகப்பெரிய விமான விபத்து திவிர்க்கப்பட்டது. அதன்பிறகு இந்த விமானம் பத்திரமாக லாஸ் வேகாஸில் தரை இறங்கியது. முன்னதாக நடுவானில் பயணிகள் விமானம் திடீரென்று தனது உயரத்தை மின்னல் வேகத்தில் குறைந்து மீண்டும் உயர்த்தியதால் விமானம் பயங்கரமாக குலுங்கியது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் இருக்கையில் இருந்து தூக்கி விசப்பட்டனர். விமான பணிப்பெண்கள் இருவர் காயமடைந்தனர். நடுவானில் நடந்த இந்த பகீர் அனுபவத்தை பயணிகள் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

அமெரிக்காவின் நகைச்சுவை நடிகர் ஜிம்மி டோர் கூறும்போது, ‛‛நடுவானில் மோதலை தவிர்க்க பைலட் ஆக்ரோஷமாக டைவ் செய்ய வேண்டி இருந்தது. நாங்கள் இருக்கையில் இருந்து பறந்து கூரையில் மோதிக்கொண்டோம். விமான பணிப்பெண்ணுக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் பயணி ஸ்டீவ் கூறுகையில், ‛‛முதலில் விமானம் லேசாக குலுங்கியது. அதன்பிறகு அதிகரித்தது. டர்பிளன்ஸ் காரணமாக விமானம் குலுங்கியதாக நான் நினைத்தேன். ஒரு கட்டத்தில் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கீழ்நோக்கி செல்வதை உணர்ந்து பந்தேன்'' என்று கூறினார். இந்த சம்பவம் பற்றி விசாரணை நடந்து வருகிறது.

மேலும் இருவிமானங்களும் வானில் மோதிக்கொள்வது போல் செல்வது தொடர்பான வீடியோக்களை விமானங்களின் நடமாட்டத்தை கண்காணிக்கும் இணையதளங்களில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+