Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோசமான வானிலை.. 2 நாசா வீரர்களை விண்ணுக்கு அனுப்புவது ஒத்திவைப்பு.. ஸ்பேஸ் எக்ஸ் அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: நாசாவை சேர்ந்த இரண்டு விண்வெளி வீரர்கள் இன்று சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்புவது மோசமான வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், எலோன் மஸ்க் மூலம் உருவாக்கப்பட்டது ஆகும். டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் ஆன இவர்தான் கடந்த 2018ம் வருடம் செவ்வாய் கிரேக்கத்திற்கு தனது டெஸ்லா காரை அனுப்பினார்.

உலகின் முன்னணி விண்வெளி ஆராய்சசி நிறுவனமாக தற்போது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உள்ளது. இந்த நிலையில் இந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தற்போது விண்வெளிக்கு முதல் முறையாக மனிதர்களை அனுப்புகிறது. நாசாவின் இரண்டு வீரர்களை ஸ்பேஸ் எக்ஸ் விண்ணுக்கு அனுப்புகிறது.

அனுப்புவதில்லை

அனுப்புவதில்லை

2003ம் ஆண்டில் அமெரிக்காவின் கொலம்பியா ராக்கெட் வெடித்த காரணத்தால், நாசா தனியார் நிறுவனங்களுடன் இணைந்து விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பி முடிவு செய்தது. இதனால் நாசா விண்வெளி வீரர்களை தானாக அனுப்புவது இல்லை. இந்த நிலையில்தான் நாசாவுடன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் வீரர்களை விண்ணுக்கு அனுப்புகிறது.

என்ன ராக்கெட் செல்கிறது

என்ன ராக்கெட் செல்கிறது

அதன்படி நாசாவின் இரண்டு விண்வெளி வீரர்களை அழைத்துக் கொண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபல்கான் 9 ராக்கெட் இன்று அதிகாலை 2.30 மணிக்கு விண்ணுக்கு செல்வதாக இருந்தது . ஆனால் இது மோசமான வானிலை காரணமாக தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் சனிக்கிழமை இந்த ராக்கெட் ஏவப்பட உள்ளது. அமெரிக்காவில் புளோரிடாவில் இருக்கும் Kennedy Space Center's Complex 39A இருந்து இந்த ராக்கெட் சனிக்கிழமை ஏவப்பட்ட உள்ளது. இங்கு இருந்துதான் அப்போலோ 11 மூலம் நிலாவிற்கு நாசா மனிதர்களை அனுப்பியது.

எப்போது செல்வார்கள்

எப்போது செல்வார்கள்

வரும் ஞாயிற்றுக்கிழமை இவர்கள் இருவரும் ஸ்பேஸ் ஸ்டேஷனில் இணைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 9 வருடங்களுக்கு பின் அமெரிக்க மண்ணில் இருந்து முதல் முறையாக மனிதர்களை ஏந்திக்கொண்டு ராக்கெட் புறப்படுகிறது. 2011ல் இருந்து நாசா தன்னுடைய விண்வெளி ராக்கெட் மூலம் மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவது இல்லை. ரஷ்யாவின் சோயஸ் விண்வெளி ராக்கெட்டைதான் நாசா நம்பி இருக்கிறது.

யார் இவர்கள்

யார் இவர்கள்

நாசாவை சேர்ந்த பாப் பென்கன் மற்றும் டக் ஹர்லி ஆகிய வீரர்கள் இதில் செல்ல இருக்கிறார்கள். அதிக அனுபவம் கொண்டவர்கள் இவர்கள். இவர்கள் 2000ம் ஆண்டே இதற்கு தேர்வு செய்யப்பட்டு பல்வேறு பயிற்சிகளை செய்துள்ளனர். ஏற்கனவே இவர்கள் விண்ணுக்கு பறந்தவர்கள். இவர்கள் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு ஆராய்ச்சிகளை செய்ய இருக்கிறார்கள். அனுபவத்தின்படி இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

எப்படி செல்லும்

எப்படி செல்லும்

இந்த ஃபல்கான் 9 ராக்கெட்டில் மொத்தம் இரண்டு ஸ்டேஜ் உள்ளது. அதாவது புரியும்படி சொன்னால் இரண்டு எஞ்சின் இருக்கும். அதன்படி முதல் ஸ்டேஜ் ராக்கெட் 2.5 நிமிடம் விண்ணில் பறக்கும். இதுதான் ராக்கெட்டை விண்ணுக்கு கொண்டு செல்லும். அதன்பின் அந்த பகுதி தனியே கழன்று கீழே பாதுகாப்பாக எஞ்ஜின் உதவியுடன் தரையிறங்கும். அடுத்த ஸ்டேஜ் 2 மொத்தம் 6 நிமிடம் பறக்கும். இது ராக்கெட்டை வட்டப்பாதையில் நிறுத்திவிட்டு கழன்று விடும்.

கூம்பு பகுதி

கூம்பு பகுதி

இதன் முன்பக்கம் கூம்பு போன்ற பகுதி இருக்கும். இதில் தான் வீரர்கள் இருப்பார்கள். இதை க்ரூ டிராகன் (Crew Dragon) பகுதி என்று அழைப்பார்கள். இதில்தான் வீரகேரல் இருப்பார்கள். ராக்கெட்டில் இருந்தும் இரண்டு ஸ்டேஜ் முடிந்த பின் க்ரூ டிராகன் தனித்து விடப்படும். இதில் இருக்கும் திரஸ்டர் எனப்படும் சிறு சிறு எஞ்சின்கள் மூலம் அது மெல்ல மெல்ல ஸ்பேஸ் ஸ்டேசன் நோக்கி நகரும். அங்கு இருக்கும் வாயில் ஒன்றில் சரியாக இந்த க்ரூ டிராகன் இணையும்.

Recommended Video

    விண்வெளிக்கு செல்லும் ராக்கெட் திடீரென வெடித்தால் என்ன நடக்கும்?
    எப்படி முடியும்

    எப்படி முடியும்

    பின் ஸ்பேஸ் ஸ்டேசன் உடன் மொத்தமாக க்ரூ டிராகன் இணைந்து ஏர் லாக் செய்யப்படும். நாளை காலை 11 மணிக்குள் இந்த அனைத்து விஷயமும் நடந்து முடியும். இதற்காக தற்போது உலக நாடுகள் எல்லாம் அமெரிக்காவை உற்று நோக்க தொடங்கி உள்ளது. சர்வதேச விமான நிலையத்தில் இவர்கள் நிறைய ஆராய்ச்சிகளை செய்வார்கள். அதிக பட்சம் 2 மாதம் இவர்கள் விண்வெளியில் இருப்பார்கள். ஆனால் அதற்கு முன்பே கூட இவர்கள் திரும்ப வாய்ப்புள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+